சென்னையிலும் அதிகரித்து வருகிறது call boy பிசினஸ்!

giglo

சமீப காலமாக ஆண் விபச்சாரன்களின் வாழ்க்கை முறை குறித்து சினிமா படங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உதாரணம் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்தில் கிட்டத்தட்ட கால்பாய் கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும். அதையடுத்து போத என்ற திரைப்படம் கால்பாய்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதேபோல பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் வறுமையின் நிறம் சிவப்பு என்ற குறும்படமும் கால்பாய்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து இருந்தது. இது போன்ற படங்களை பார்க்கும்போது ஓ இப்படியும் கூட சென்னையில் ஒரு விசியம் இருந்து வருகிறதா? வெளியூர்களில் படிக்கும் வேலை செய்யும் யுவதிகளின் மேல் மட்டும் கவனமாய் இருந்த பெற்றோர்கள் இனிமேல் இளைஞர்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற நிலை வந்து உள்ளது.

மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் போன்ற மாநிலங்களில் GIGOLO எனப்படும் CALL BOY பிசினஸ் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சென்னையிலும் இந்தத் தொழில் அமைதியாகப் பிரபலம் அடைந்து வருகிறது என்று செய்திகள் வரத் தொடங்கிவிட்டது.

GIGOLO என்றால்? இந்தத் தொழிலில் எவ்வளவு வருமானம்?

GIGOLO என்பதன் தெளிவான அர்த்தம் ஒரு பெண்ணின் காம இச்சைகளைத் தீர்க்கப் பயன்படும் ஒரு அடிமை ஆண் என்று பொருள். திருமணம் முடிந்த முப்பதுக்கும் மேற்பட்ட வயது அடைந்த இளம்பெண்கள் முதல் அறுபது வயது வரை இருக்கும் பணக்கார வீட்டுப் பெண்களுக்கு காமசேவை புரியும் தொழில் இது. இந்தத் தொழில் தற்போது நல்ல வருமானம் ஈட்டித் தருவதால் பல இளைஞர்கள் மோசமான வழிகாட்டுதல்களால் தவறான வழிக்கு திச் திருப்ப படுகிறார்கள். இவ்வளவு  நாள் பெண்கள் மட்டுமே பாலியல் தொழிலில் ஈடுபட இப்போது ஆண்களும் இந்தத் தொழிலில் ஈடுபடுவது மிகப்பெரிய  சமூகக் கேடு.

படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் ஏழை வீட்டைச் சார்ந்த அழகான இளைஞர்களும் பணக்கார லைஃப்  ஸ்டைலில் இருப்பதையே விரும்பும் இளைஞர்களும் தான் இந்தத் தொழிலின் டார்கெட். பெண்களைப் போலவே அந்த இளைஞர்களின் தொழிலுக்கும் உடல் அழகு முன்னிலைப் படுத்தப்படுகிறது. அந்த இளைஞர்கள் தங்களது புறத்தோற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிட்னஸ்ஸைப் பொருத்து அவர்களின் பிசினஸ் நிர்ணயிக்கப் படுகிறது.

இப்படி தவறான தொழில் மூலமாக சென்னையில் மட்டும் 1500 இளைஞர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் பிசினஸ் முறையில் மூன்று வகை உள்ளது. இந்தத் தொழிலுக்கு புதிதாக சேரும் இளைஞர்கள் lower பிரிவில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்தது medium பிரிவு. இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு மாதம் 50000க்கும் மேல் சம்பளமும் upper பிரிவில் உள்ளவர்களுக்கு அடிப்படை சம்பளம் ஒரு லட்சம் என்றும் நிர்ணயிக்கப் படுகிறது. இப்படி அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் கும்பல் இதற்கு என்று தனியாக வெப்சைட் ஒன்றை வெளிப்படையாக நடத்தி வருவது மிகப்பெரிய அபத்தம். இந்த வெப்சைட் மூலமாக ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துவிட்டு இப்போது வருந்தி வருகிறார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் ஆண்கள் பெண்களைப் போல வருத்தப்படுகிறார்களா? அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?

ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்தத் தொழிலில் ஈடுபடுவது சமூக அவலம் தான். இந்தத் தொழிலில் பெண்கள் 80% பேர் என்றால் ஆண்கள் 30% பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெண்களைப் போல தங்களுடைய நிலைமையை எண்ணி அவ்வளவாக வருத்தப்படுவது இல்லை. மாறாக இதனை கெத்து என்று நினைக்கின்றனர். சொகுசு வாழ்க்கைப் பிடித்து இருப்பதாகவும் இதையே தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்குள் தாங்கள் செய்வது குற்றம் என்றும் மற்றவர்களின் குடும்ப உறவை சிக்கலாக்கும் செயல் என்றும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவன் குடும்பம் எப்படி போனால் நமக்கு என்ன  என்று கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் சுயநலமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஆண்களில் மிகச்சிலரே தாங்கள் செய்யும் தொழில் தவறானது என்றும் எங்கள் வீட்டிற்கு மட்டும் இது தெரிந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் வருந்துகின்றனர்.

இப்படிப்பட்ட இளைஞர்கள் உடனடியாக இந்தத் தொழிலைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் உயிர் உறுப்புகளில் தொற்றுக்கள் ஏற்பட்டு அது உடல் முழுக்க பரவி  கண்பார்வை நரம்பைத் தாக்கினால் கண் பார்வை இழப்பும், தண்டுவடத்தை தாக்கினால் மூளை மழுங்கி பைத்தியம் ஏற்படும் நிலையும் உண்டாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஒழுக்கம் தவறி சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்காது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகள்?

ஏற்கனவே பெண் பிள்ளைகளை சந்தேகக் கண்ணுடன் பார்த்து வருகின்றனர் பெற்றோர்கள். சொந்த வீட்டில் வளரும் போதில் இருந்து அவள் மீதான தொடங்கும் சந்தேகம் புகுந்த வீட்டிற்குச் சென்ற பின்னரும் தொடர்கிறது.  இந்நிலையில் கால்பாய் போன்ற அவலங்கள் தொடர்ந்தால் வீட்டில் இருக்கும் பெண்கள் எதாவது ஒரு ஆணுடன் சிரித்துப் பேசினாலே அவள் நடத்தை சரி இல்லை என்று இந்த சமூகம் பேசத் தொடங்கிவிடும்.

 

Related Articles

விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...
தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ... தமிழ் சினிமாவில் இதுவரை, "பறவைகளை" இரண்டு காதலர்கள் கைகோர்த்துக்கொண்டு  ஓடித்திரியும் காட்சிக்கு உவமையாக காட்டியிருக்கிறார்கள்.   நாயகிகள் கிளி, புறா,...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்ச... கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில்...

Be the first to comment on "சென்னையிலும் அதிகரித்து வருகிறது call boy பிசினஸ்!"

Leave a comment

Your email address will not be published.


*