காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு
அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளையும் புனே நகருக்கு மாற்ற இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடுகள்
சென்னையில் தொடர்ந்து போட்டிகள் நடத்தினால் போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மாநில அரசு தெரிவித்து இருப்பதால் சென்னையில் நடக்க இருந்த அனைத்துப் போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்பட்டிருப்பதாக ஐபிஎல் தலைவர் ராஜேஷ் ஷுக்லா தெரிவித்தார். நான்கு வெல்வேறு நகரங்கள் பட்டியலிடப்பட்டு, இறுதியில் புனே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இரண்டாண்டுகள் புனேவில் விளையாடிய அனுபவம் பெற்ற தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை உள்துறை செயலாளரிடம் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
நான்கு தேர்வுகள்
புனே தவிர்த்து விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களும் பரிசீலனையில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு காரணங்களுக்காக புனே இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. புனே விளையாட்டரங்கத்தை பற்றிய போதுமான அனுபவம் தோனிக்கு உண்டு. வீரர்கள் எளிதில் சென்றடைய வசதியாக வான்வழி போக்குவரத்து வசதியும் புனேவுக்கே சாதகமாக அமைந்திருக்கிறது.
தயார் நிலையில் புனே
அனைத்துப் போட்டிகளையும் நடத்தும் வகையில் புனே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விளையாட வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "காவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்"