உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ளின்!

Charlie Chaplin is the first famous actor in the world
  1. வசனங்கள் இல்லாத காலத்திலயே உலகம் முழுவதும் புகழோடு விளங்கியவர் சார்லி சாப்ளின். சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தார். அவர் நடித்த படங்களின் விசிடிக்கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.
  2. 1889 ஏப்ரல் 16 ம் தேதி அன்று தெற்கு லண்டனில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் மேடை பாடகர்களாக இருந்த போதிலும் குடும்பம் வறுமையில் வாடியது.
  3. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின் ஐந்து வயதிலயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சார்லிக்கு 21 வயதான போது நாடக குழு அமெரிக்காவுக்கு சென்றதால் அவரும் அமெரிக்க சென்றார்.
  4. கீ ஸ்டோன் என்ற கம்பெனி தயாரித்த ஊமை படத்தில் 1913 ல் முதன் முதலாக சார்லி சாப்ளின் நடித்தார். மேக்கிங் எ லிவிங் என்பது அந்தப் படத்தின் பெயர். அதில் அவர் வில்லனாக நடித்தார். ஆனால் படம் வெற்றி அடையவில்லை.
  5. கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் என்பது அவருடைய இரண்டாவது படம். அதில் தான் அவர் காமெடி வேடத்தில் நடித்தார். தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை ஏ, சின்ன தொப்பி, கையில் சிறு தாடி இத்தகைய மேக்கப்புடன் தோன்றி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். அதன் பிறகு இத்தகைய வேடமே அவருக்கு டிரேட் மார்க் ஆகியது.
  6. வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35  படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றி படங்கள் தான்.
  7. 10  ஆயிரம் டாலர் சம்பளத்திற்கு 1916 ம் ஆண்டில் ஒரு படக் கம்பெனியில் சேர்ந்தார். படங்களுக்கு கதை வசனம் எழுதி நடித்தார். பல படங்களை டைரக்ட் செய்து உலகப் புகழ் பெற்றார்.
  8. யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தை 1919ம் ஆண்டில் வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களை தயாரித்ததுடன் படங்களை விநியோகம் செய்வதிலும் இந்தக் கம்பெனி ஈடுபட்டது.
  9. இவர் நடித்த சிட்டி லைட்ஸ் என்ற படம் உலகப் புகழ்பெற்றது. இது 1931ல் வெளியானது. மவுனப் பட யுகம் முடிவடைந்து பேசும் படங்கள் வரத் தொடங்கியது. அந்தக் கால கட்டத்தில் 1936 ம் ஆண்டு மாடர்ன் டைம்ஸ் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தில் மற்றவர்கள் பேசி நடித்தாலும் சார்லி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்தப் பமும் மகத்தான வெற்றி பெற்றது.
  10. 1940 ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த தி கிரேட் டிக்டேட்டர் என்ற படம் சர்வதிகாரி ஹிட்லரை கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப் பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
  11. 1952 ல் அவர் லைம் லைட் என்ற படத்தில் சீரியசான வேடத்தில் நடித்தார்.
  12. சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார். செலவைப் பற்றி கவலைப்பட மாட்டார். தி கிட் படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார். அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது.
  13. எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது.
  14. முதல் மனைவி மாக்முர்ரே இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததோடு 10 லட்சம் டாலர் ஜீவனாம்சம் பெற்றார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.
  15. பிறகு ஓனா ஓ நில் என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்தப் பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இந்த மனைவி தான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தவர்.
  16. சார்லி வெறும் நடிகர் அல்ல. மனித குலத்திற்கு வழிகாட்டிய மேதை. அதனால் தான் ” திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின் ” என்று பெர்னாட்ஷா பாராட்டினார்.
  17. இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு சர் பட்டம் கொடுத்து கவுரவித்தது. 1928, 1972 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்கார் விஷேசப் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது.
  18. 1977 டிசம்பர் 25 ம் தேதி சாப்ளின் மறைந்து விட்டாலும் அவர் நடித்த படங்கள் மூலம் இன்றைய காலத்திலும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

அவர் நடித்த படங்களின் வீடியோக்கள் இன்றும் முகநூல் டுவிட்டர்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த காலத்து குழந்தைகளுக்கும் சார்லி சாப்ளினை மிகவும் பிடித்து இருக்கிறது. இன்றைய மிஸ்டர் பீனுக்கு எல்லாம் முன்னோடி சார்லி சாப்ளினே.

குறிப்பாக இவர் நடித்த சிட்டி லைட்ஸ் திரைப்படம் உலக சினிமாக்களில் ஒன்றாக கருதப் படுகிறது. இவர் நடித்த சிட்டி லைட்ஸ் திரைப்படம் தான் கமல் நடித்த வசனமில்லாத திரைப்படமான பேசும் படத்திற்கு முன்னோடி. ஓய்வு நேரங்களில் சார்லி சாப்ளின் வீடியோக்களை பாருங்கள்.. நிம்மதி அடையுங்கள்!

 

Related Articles

“உணவின் வரலாறு” புத்தக விமர்... குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் "உணவின் வரலாறு".ம...
நான் உங்களுக்கு வாட்ச்மேன்! – வாட்... விஜய் சேதுபதியை அடுத்து கையில் நிறைய படங்களை வைத்திருப்பவர் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார். கடந்த வாரம் குப்பத்து ராஜா என்றால் இந்த வாரத்திற்கு வாட்ச்மேன்...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...
உடுமலைப்பேட்டை கௌசல்யாவும் இந்த தமிழ் சம... உடுமலைப்பேட்டை கௌசல்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார் அந்த கணம் கணவரின் பெயர் சக்தி தற்போது அந்த சக்தி என்பவரிடமிருந்து...

Be the first to comment on "உலக புகழ்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ளின்!"

Leave a comment

Your email address will not be published.


*