ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலயே மைதானத்தின் எப் ஸ்டேண்டின் மேல்பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை சார்ந்த நான்கு பேர் தாங்கள் எடுத்து வந்த கட்சிக்கொடியை உயர்த்திப் பிடித்து எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி தாங்கள் அணிந்திருந்த காலணியையும் மைதானத்திற்குள் தூக்கி வீசியுள்ளனர்.
அதில் இரண்டு ஷூக்கள் பவுண்ட்ரிக்கு வெளியிலும் இரண்டு ஷூக்கள் பவுண்ட்ரிக்கு உள்ளேயும் விழுந்தது. அதில் ஒரு ஷூவை டூப்ளசிஸ் தனது கையால் எடுத்து ரசிகர்களிடம் தூக்கி காட்டி தான் சங்கடப்பட்ட முகபாவனையை வெளிப்படுத்தினார். மற்றொரு ஷூவை ஜடேஜா தனது காலால் புட்பாலை எட்டு உதைப்பது போல எட்டி உதைத்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக கைது செய்யப்பட்டு மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். உடனே மைதானத்தில் உள்ள பெரிய திரையில் இரண்டு வீரர்களும் கோபப்படாமல் காலணியை வெளியேற்றதை திரையிட்டு இவங்க தான் சிறந்த வீரர்கள் என்றனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடக்க இருந்த ஆறு ஐபிஎல் மேட்சுக்கள் தற்போது வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். அதே சமயம் சீமான் மீதும் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் மைதானத்தில் காலணியை விட்டெறிந்தால் காவிரி தமிழ்நாட்டுக்கு கிடைத்துவிடுமா? இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று சீமான் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களைப் போலவே ஆர் ஜே பாலாஜியும் மற்றும் சிலரும் காலணியை விட்டெறிந்து எதிர்ப்பு தெரிவித்தது வருத்தத்தை உண்டாக்கியுள்ளது என்றும் உரிமையை மீட்கப் போராடுவதற்கான வழி இது அல்ல என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னுமும் நாங்கள் சென்னை ரசிகர்களை மிகவும் நேசிக்கிறோம் என்று களத்தில் வீசப்பட்ட இரண்டு காலணிகளுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மற்றும் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஜடேஜாவிடம் #sorryjaddu என்று மன்னிப்பு கேட்டுள்ளனர்.
எதற்கு மன்னிப்பு?
அதே சமயம் சிலர் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள். விட்டெறிந்த காலணிகள் ஒன்றும் அவர்கள் மேல் படவில்லையே. மைதானத்திற்குள் ஷூவை விட்டெறிந்ததால் தான் இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் தவறு செய்து இரண்டு வருடங்களாக தடைபட்டிருந்த சிஎஸ்கே அணியினர் ஒன்றும் மகான்கள் இல்லை, சோறு போட்டு வாழ வைக்கும் விவசாயிகளிடம் இதற்கு முன் எப்போதாவது மன்னிப்பு கேட்டுள்ளீர்களா என்றும் மன்னிப்பு கேட்டவர்களை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Be the first to comment on "ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள்! #Sorryjaddu"