பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமானு இருக்கனும் – தேவராட்டம் விமர்சனம்

Devarattam Movie review

பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பாசம் வரிசையில் அக்கா பாசம்.

வினோதினிக்கு அழகு குட்டி செல்லம் படத்தை அடுத்து தேவராட்டம் படம் பெயர் சொல்லும் படமாக அமையும் என்பது உறுதி. சூரிக்கு வழக்கம் போல முக்கியமான கதாபாத்திரத்தை தந்துள்ளார் இயக்குனர். ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கும் சூரி ஒரு சில இடங்களில் நாயகனாக தெரிகிறார்.

சே குவேரா மற்றும் பாரதியார் உருவங்கள் பதித்த  டீசர்ட் போட்டுக்கொண்டு நாயகன் நாயகியின் பின்னால் ஆடிப்பாடும் காதல் பாட்டு சகிக்கவில்லை. மஞ்சிமா மோகனின் கதாபாத்திரத்தை இன்னும்கொஞ்சம் வலிமையாகப் படைத்திருக்கலாம். அடுத்தடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று எளிதில் யூகிக்க கூடிய வகையில் திரைக்கதை அமைத்தது பலவீனமாக அமைந்துள்ளது. பிரிட்ஜ திறந்து தண்ணி எடு என்றதும் ரசிகர்கள் இதுதான் கிளைமேக்ஸ் என்பதை எளிதில் தெரிந்துகொண்டனர். ஒருசில வசனங்கள் தேவையில்லாத இடங்களில் இடம்பெற்றிருப்பது படத்தின் இன்னொரு பலவீனம்.

தறிகெட்டு கிடக்கற நாட்ட சரிசெய்ய அடிக்கனும் இல்லனா உடைக்கனும்…

எதுத்து பேசுறது முக்கியமல்லடா அத எவன்கெட்ட பேசுறோங்கறது தான் முக்கியம்…

இங்க நல்லவனும் நடக்க முடியாது நல்லவனாவும் நடக்க முடியாது…

கண்டவுடன் காதல் செய்றது தப்பு இல்ல… கண்டவன காதல் செய்றதுதான் தப்பு…

கண்ணகிக்கு பொறந்தவன் தான் இருக்கனும் காந்தாவுக்குப் பொறந்தவன்லா இருக்க கூடாது…

இந்த உலகத்துல பொறக்கறது ஈஸி… பொழைக்கறது கஷ்டம்…

இந்தப் பன்னிக்குட்டிய பெத்ததுக்கு பத்து நிமிசம் தள்ளிப் படுத்துருக்கலாம்…

போன்ற வசனங்கள் கைதட்டல் பெற்றன.

மதுரையை அறக்கப்பறக்க காட்டியுள்ளது ஒளிப்பதிவு. பின்னணி இசை ஒரு சில இடங்களில் காதை கிழிக்கிறது. பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமே.

இந்தப் படம் எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்ற அறிவிப்பு வந்தாலும் படம் எந்த சாதியை தூக்கிப் பிடித்து காண்பித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க தான் ஆண்களின் வீரம் பயன்பட வேண்டுமே தவிர பெண்களை பலாத்காரம் செய்ய அல்ல. மீறுபவர்கள் கருவறுக்கப்பட வேண்டியவர்கள் என்று கருத்து கூறி நம்மை வழியனுப்பி வைக்கிறார் முத்தையா.

 

Related Articles

மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச... கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்ற...
2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உற... டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவு...
வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர... இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவி...
அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூ... H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப...

Be the first to comment on "பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமானு இருக்கனும் – தேவராட்டம் விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*