உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீட்டு நூலகம் இருக்கிறதா?

Do you own a library at home

எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அறையா? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அவர்களுக்கு சர்வர் சுந்தரம் படத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் ஹோட்டல் ஒன்றில் சர்வர் வேலை பார்ப்பார் சுந்தரம். அப்பா இல்லாத அவருடைய வீட்டில் வறுமைக்கு பஞ்சமில்லை. இருப்பினும் ஒழுக்கம் தவறாத பிள்ளையாக அம்மா பிள்ளையாக வளரும் சுந்தரம் வீட்டில் வசதியே இல்லாவிட்டாலும் படிக்கும் அறை, பார்வையாளர்கள் அறை என்று தனித்தனி அறைகள் ஒதுக்கி வைத்திருப்பார். அத்தகைய குணம் இருந்ததால் தான், அவர் அந்தப் படத்தில் பெரிய நடிகராக உயர்வார். இது போன்ற படிக்கும் அறை உங்கள் வீட்டில் இருக்கிறதா? சரி அதை விடுங்கள். எத்தனை பேருடைய இல்லங்களில் வீட்டு நூலகம் இருக்கிறது. இந்த வீட்டு நூலகம் அமைக்க கோரி வற்புறுத்திய பெரிய மனிதர்கள் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் அறிஞர் அண்ணா, இன்னொருவர் அப்துல்கலாம்.

வீட்டு நூலகம் பற்றி அண்ணாவும் அப்துல்கலாமும் என்ன சொன்னார்கள்?

1948ம் ஆண்டு அறிஞர் அண்ணா. வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் என்று வலியுறுத்தினார். பல ஆண்டுகள் கழித்தும் இன்றும் அவருடைய வாக்கு தேவை உடையதாக இருக்கிறது. அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை புத்தகம் படிப்பதில் செலவிட்டிருக்கிறார். அதனால் அவருடைய பெயரிலயே ஒரு மிகப்பெரிய நூலகம் இயங்கி வருகிறது. சினிமாவின் மூலமாக அரசியல் விழிப்புணர்வு ஏற்படச் செய்ததது எல்லாம் இவருடைய எழுத்து தான். இன்றைக்கு சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள். அத்தனைக்கும் விதை அண்ணா போட்டது.

அடுத்தது அப்துல் கலாம் பற்றி பார்ப்போம். அவர் உலக அளவில் இந்திய அளவில் பல கல்வி நிறுவனங்களில் உரை ஆற்றியிருக்கிறார். அத்தனை இடங்களிலும் பெரும்பாலும் வீட்டு நூலகத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். தனது பேச்சை கவனித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளை வீட்டு நூலகம் அமைக்கச் சொல்லி உறுதிமொழி எடுக்கச் செய்வார். அதே போல அம்பேத்கரையும் கார்ல் மார்க்ஸ்ஸையும் நாம் இந்த நாளில் நினைவு கூற வேண்டும். ஏனெனில் உலக அளவில் அவர்களைப் போல நூலகத்தில் நேரம் கழித்தவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் அவர்கள் இன்றும் காலம் கடந்து மனதில் நிற்கிறார்கள்.

ஆதலால் இன்றே தொடங்குங்கள். உங்கள் இல்லங்களில் படிப்பறை உருவாக்குங்கள். குறைந்தது இருபது புத்தகங்களையாவது வாங்கி வீட்டு நூலகம் அமைத்திடுங்கள்.

Related Articles

வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!... இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறி...
டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...
மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மல... "ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மல குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை ஏன் கேவலமாக பார்க்கிறது கண்டுகொள்ளாமல் இருக்கி...
01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...

Be the first to comment on "உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீட்டு நூலகம் இருக்கிறதா?"

Leave a comment

Your email address will not be published.


*