புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்! தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

Does baby feeding bottles causes cancer
  1. குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்க கூடிய அபாயம் உடைய பிஸ்பினா ஏ என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுவது ஆய்வின் வழியாக கண்டறியப் பட்டுள்ளதாக டாக்சிக் லிங்க் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
  2. பிஸ்பினால் ஏ என்பது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப் படும் பொருட்களில் ஒன்று. உணவுப் பொருட்கள் அடைத்து வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க அதிகம் பயன்படுகிறது.
  3. குழந்தைகளுக்கு பால் பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்றாக பிஸ்பினால் ஏ வேதிப்பொருளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய தர நிர்ணய துறை 2015 ம் ஆண்டு தடை விதித்தது.
  4. குழந்தைகளுக்கு பிஸ்பினால் ஏ பாட்டில்களின் வழியாக உணவு ஊட்டுவதால் உணவுப் பொருட்களோடு பிஸ்பினால் ஏ வேதிப் பொருட்கள் கலந்து குழந்தைகளின் உடலுக்குள் செல்கிறது. இதை கண்டறிந்த இந்திய தர நிர்ணய துறை இதை தடை செய்தது.
  5. உலக நாடுகள் பலவும் பிஸ்பினால் ஏ வேதிப் பொருள் பயன்படுத்தி பால் பாட்டில்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. ஆனால் இந்தியாவில் இந்த குற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  6. பிஸ்பினால் ஏ என்ற வேதிப் பொருள் நாளமில்லா சுரப்பி மண்டலத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இந்த வேதிப் பொருள் குழந்தைகள் உடலினுள் சென்று புற்றூநோயை உண்டாக்கும் ஹார்மோனை தூண்டுகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் இனப்பெருக்க மண்டலத்தையும் பாதிக்கிறது.
  7. குஜராத், ராஜஸ் தான், கேரளா, ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், டெல்லி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப் படும் 20 மாதிரி பால் பாட்டில்களை எடுத்து ஆய்வு நடத்தியது ஐஐடி. அந்த ஆய்வின் முடிவில் உணவுப் பொருளோடு பிஸ்பினால் ஏ என்ற வேதிப் பொருளும் கலந்து வெளியாவது உறுதியானது.
  8. இத்தகைய பாதிப்பு உள்ள பால் பாட்டில்கள் இன்றூம் சந்தையில் விற்பனை பொருளாக உள்ளது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
  9. இதே போல பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொடுப்பது, சாப்பாடு ஊட்டுவது போன்றவை மிகுந்த பாதிப்பை உண்டாக்க கூடியவை.
  10. உணவுப் பொருட்களை அடைத்து வைத்து பராமரிக்க கண்ணாடி பாட்டில்கள் சிறந்தது.

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை விதித்தது தமிழக அரசு. ஆனால் அந்த தடையை மக்கள் யாரும் மதிக்க வில்லை. பிளாஸ்டிக் என்றும் கேடு என்பதை தயாரிப்பு நிறுவனங்களும் மக்களும் என்று தான் உணர போகிறார்களோ?

Related Articles

பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமா... பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பா...
ஆதித்ய வர்மா தமிழ் சமூகத்துக்கே கேடு! &#... தயாரிப்பு : E4 என்டர்டெயின்மென்ட்தயாரிப்பாளர் : சுரேஷ் செல்வராஜன்இயக்கம் : கிரிஸ்சேய்யாகதை : சந்தீப் ரெட்டிஒளிப்பதிவு : ரவி கே சந்திரன...
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...
ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை க... முந்தைய தமிழ் சினிமாக்களில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்ற வியாதிகளை காட்டி இருப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த விஷாலின்...

Be the first to comment on "புற்றுநோயை உண்டாக்கும் பால் பாட்டில்கள்! தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*