49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் முழுப்பட்டியல்!

49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் முழுப்பட்டியல்!

49-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. சர்வதேச திரைப்பட விழா என்றாலே அதில், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் இந்தியாவின் பல மொழி திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் திரையிடப்படும். அவ்வகையில் 2018ம் ஆண்டிற்கான தகுதி பெற்ற 190 முழுநீள இந்திய திரைப்படங்கள் போட்டி போட்டது.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வேண்டி முழுநீளத் திரைப்படங்களாக 22 சிறந்த இந்திய திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன.

அதன் படி 22 feature film களின் பட்டியல் மற்றும் 4 Mainstream film களின் பட்டியல் பின்வருமாறு:

4 Mainstream சினிமாக்கள் :

இந்தப் பிரிவில் மூன்று இந்தி படங்களும் ஒரு தெலுங்கு படமும் தேர்வாகி உள்ளது.

1. மகாநதி – தெலுங்கு – நாகேஸ்வின்(இயக்குனர்)
2. டைகர் ஜின்டா ஹே – ஹிந்தி – அலி அப்பாஸ் சஃபார்
3. பத்மாவத் – ஹிந்தி – சஞ்சய் லீலா பன்சாலி
4. ராஸி – ஹிந்தி – மேக்னா குல்சர்

22 Feature சினிமாக்கள் :

இவற்றில் 6 மலையாள படங்கள், 5 பெங்காளி படங்கள், 4 தமிழ் படங்கள், 2 மராத்தி படங்கள், 2 ஹிந்தி படங்கள், 1 துளு படம், 1 லடாகி படம், 1 ஜசாரி படம் என்று மொத்தம் 8 மொழி படங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

1. ஒலூ(முதலில் திரையிடப்படும் படம்) – மலையாளம் – ஷாஜி என் கருண் (இயக்குனர்)
2. நாகர்கிர்டன் – பெங்காளி – கௌசிக் கங்குலி
3. சா – பெங்காளி – அர்ஜித் சிங்
4. உமா – பெங்காளி – ஸ்ரீஜித் முகர்ஜி
5. அப்யக்தோ – பெங்காளி – அர்ஜூன் தத்தா
6. உரான்சாண்டி – பெங்காளி – அபிஷேக் சாஹா
7. அக்டோபர் – ஹிந்தி – ஷூஜித் சிர்கார்
8. போர் – ஹிந்தி – கமாக்யா நாராயன் சிங்
9. சின்ஜர் – ஜசாரி – பம்பளி
10. வாக்கிங் வித் த வைண்ட் – லடாகி – பிரவீன் மார்கல்
11. பயனாகம் – மலையாளம் – ஜெயராஜ்
12. மாக்கன்னா – மலையாளம் – ரகீம் காதர்
13. பூமாரம் – மலையாளம் – அப்ரித் ஷைன்
14. சுதானி ஃபரம் நைஜீரியா – மலையாளம் – ஜகாரியா
15. ஏ மா யோ – மலையாளம் – லிஜோ ஜோஸ் பெல்லிசரி
16. தாப்பா – மராத்தி – நிபுண் அவினாஸ் தர்மதாகிரி
17. ஆம்கி டோம்கி – மராத்தி – ப்ரதிமா ஜோஷி
18. டூ லெட் – தமிழ் – செழியன் ரா
19. பாரம் – தமிழ் – பிரியா கிருஷ்ணசுவாமி
20. பரியேறும் பெருமாள் பி ஏ பி எல் – தமிழ் – மாரி செல்வராஜ்
21. பேரன்பு – தமிழ் – ராம்
22. பட்டாயி – துளு – அபயா சிம்ஹா

இயக்குனர் ராகுல் ரவைல் :

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இயக்குநர் ராகுல் ரவைல் என்பவர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு பார்வையிட்டு தேர்ந்து எடுத்தது. அந்த 12 நபர்களின் பெயர்களும் பின்வருமாறு:

1. நடிகரும், தயாரிப்பாளருமான மேஜர் ரவி
2. இயக்குநர் அகத்தியன்
3. கதையாசிரியர் மற்றும் இயக்குநரான உஜ்வல் சட்டர்ஜி
4. இயக்குநர் இமோ சிங்
5. தயாரிப்பாளர் உத்பல் தத்தா
6. இயக்குநர்களான சேகர் தாஸ்
7. சந்திரா சித்தார்த்
8. அஜீப் டண்டண் மற்றும்
9. தேராத்ஸாய்
10. நடிகர் ஹைதர் அலி
11. பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகர்களுமான கே.ஜி.சுரேஷ்
12. எஸ்.விஸ்வநாத்

குறும்படங்கள்:

மராத்தி மொழியில் 8 படங்கள், ஆங்கிலத்தில் 4 படங்கள், இந்தி மற்றும் மலையாளத்தில் தலா மூன்று படங்கள் மற்றும் பெங்காளி, போஜ்புரி, ஒரியா ஆகிய மூன்று மொழிகளிலும் தலா ஒரு படம் என மொத்தம் 21 குறும்படங்கள் தேர்வு ஆகியுள்ளது. இதில் தமிழ் மொழியில் ஒரு குறும்படம் கூட தேர்வு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்தப் பட்டியல் பின்வருமாறு:

1. கர்வாஸ் (முதலில் திரையிடப்படும் படம்) – மராத்தி – ஆதித்யா சுகாஸ் ஜும்பாலே ( இயக்குனர்)
2. சம்புரக் – பெங்காளி – பிரபால் சக்ரா போர்டி
3. நாச் பிகாரி நாச் – போஜ்புரி – ஜெய்நேன்ட்ரி தோஸ்த் & ஷில்பி குலாட்டி
4. டீகோடிங் சங்கர் – ஆங்கிலம் – தீப்தி சிவன்
5. கியாமோ (குயின் ஆப் த மௌண்டைன்ஸ்) – ஆங்கிலம் – கௌதம் பாண்டே & டோயல் திரிவேதி
6. தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர் – ஆங்கிலம் – எஸ். நல்ல முத்து
7. பங்கர்: த லாஸ்ட் ஆப் வாரணாசி வேவ்ஸ் – ஆங்கிலம் – சத்யபிரகாஷ் உபத்யாய்
8. மானிட்டர் – இந்தி – ஹரி விஸ்வநாத்
9. நானி தேரி மார்னி – இந்தி – ஆகாஷ் ஆதித்யா லாமா
10. பர்னிங் – இந்தி – சனோஜ் பிஎஸ்
11. ஸ்வார்ட் ஆப் லிபர்டி – மலையாளம் – சினே ஜேக்கப் பெஞ்சமின்
12. மிட் நைட் ரன் – மலையாளம் – ரம்யா ராஜ்
13. லஸ்யம் – மலையாளம் – வினோத் மங்காரா
14. ஹேப்பி பர்த்டே – மராத்தி – மேத்பரணவ் பாபாசாகேப் பொவர்
15. நா போல் வோ ஹாரம் – மராத்தி – நிதிஸ் விவேக் படான்கர்
16. சைலண்ட் ஸ்கிரீம் – மராத்தி – பிரசன்னா பாண்டே
17. எஸ் ஐம் மௌலி – மராத்தி – சுகாஸ் ஜகாகிர்தர்
18. பாம்ப்லெட் – மராத்தி – சேகர் பாபு ரான்கம்பே
19. ஆய் சப்பத் – மராத்தி – கௌதம் வாஸே
20. பார் டுபாரி – மராத்தி – ஸ்வாப்னில் வசந்த் கபூர்
21. மலய் – ஒரியா – ராஜ்தீப் பால் & சர்மிஸ்டா மைதி

குறும்பட தேர்வுக் குழு

இயக்குனர் மற்றும் தொகுப்பாளர் வினோத் கனத்ரா அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவால் குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இயக்குனர் ஆதித்யா சுகாஸ் ஜம்பலே இயக்கிய கர்வாஸ் திரைப்படம் முதல் திரைப்படமாக திரையிட இருக்கிறது.

குழுவில் உள்ள ஏழு பேர் :

தலைமை: வினோத் கத்ரா

1. இயக்குனர் உதய் சங்கர் பாணி
2. இயக்குனர் மற்றும் திரைப்பட பயிற்சியாளர் பார்வதி மேனன்
3. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் சுனில் புராணிக்
4. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அசோக் சரண்
5. திரை பத்திரிக்கையாளர் பத்மராஜ் நாயர்
6. இயக்குனர் மண்டர் தலாய்லிகர்

நவம்பர் 20 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை கோவா பன்ஜிம் நகரில் உள்ள ஐநாக்ஸ் 2 திரையரங்கில் நடைபெற உள்ளது. வழக்கம் போல மலையாளம், மராத்தி, பெங்காளி படங்களே இந்த விழாவிலும் பெரும்பான்மையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

Related Articles

தனியார் பள்ளிகளின் விளம்பர பதாகைகளில் மா... இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை  விளம்பரங்களுக்கு உபயோகிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை. இது சமூக ஆர்வ...
தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் &#... சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்...
இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...
செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – ம... இந்தியாவில் சில காலங்களுக்கு முன்பு பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே எதாவது ஒரு கொலைக் கார கிழவி கள்ளிப் பால் ஊத்தி சாகடிக்கும். அதை அடுத்து கருவை ஸ்கேன் ...

Be the first to comment on "49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் முழுப்பட்டியல்!"

Leave a comment

Your email address will not be published.


*