சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிருந்த அவர், மிகுந்த பதட்டத்துடன் தன் உறவினர்களைக் கட்டியணைத்து விடைபெற்று, விசா வழங்கும் அமெரிக்க தூதகத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த அந்த நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு, அவர் கட்டை விரலை உயர்த்திக்காட்டி தனக்கு விசா கிடைத்துவிட்டதை தூரத்திலிருந்தே தன் குடும்பத்திற்குத் தெரிவித்தார். அந்தக் குடும்பத்திற்கு அந்தத் தருணத்திலிருந்து கொண்டாட்டங்கள் தொடங்கின. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சமீபத்திய அறிவிப்பொன்று, இதுபோன்ற கொண்டாட்டங்கள் இனி சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
H1B விசாஎன்றால் என்ன?
அமெரிக்காவில் பணிபுரிய வேண்டுமானால் அதற்குக் கட்டாயம் நீங்கள் H1Bவிசா வைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் பணிபுரிய அனுமதியளிக்கும் அந்த நாடு, பணியில் இருக்கும் ஒருவது திறனைக் கண்டறிந்து, மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பணிபுரியும் வாய்ப்பையும் தருகிறது. ஆக மொத்தத்தில், அமெரிக்க குடியுரிமை இல்லாத ஒருவர் அந்நாட்டில் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரைH1B விசா மூலம் தங்கி பணியாற்றலாம்.
திருமணம் ஆனவர் என்றால்
ஒருவேளை இந்த ஆறு ஆண்டுகளுக்குள், ஒருவருக்குத் திருமணம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த இணை என்ன செய்வது? அமெரிக்காவில்H1B விசா மூலம் தங்கி பணியாற்றுபவர்கள் இணை அந்நாட்டிற்கு வர விரும்பினால், அதற்கென்றுH4-EADவிசாஎன்று தனியாக ஒரு நடைமுறையை அந்நாட்டு அரசாங்கம் கொண்டுள்ளது. H4-EAD விசாபெற்று தங்கள் இணையுடன் வசிக்க விரும்புபவர்கள், அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
இங்கேயும் இந்தியர்கள் தான் அதிகம்
H1Bவிசா மூலம் ஒரு ஆண்டுக்கு 85000 வெளிநாட்டினரை தங்கள் நாட்டுக்குள் பணியாற்ற அமெரிக்க அரசாங்கம் அனுமதியளிக்கிறது. அப்படி H1Bவிசா பெற்று பணியாற்றும் வெளிநாட்டினரில் பாதிக்கும் அதிகம் இந்தியர்கள் தான்.
கிரீன் காரட்
H1Bவிசா பெற்று அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் எவரும் அவ்வளவு எளிதில் திரும்பி தங்கள் சொந்த நாடுகளுக்கு வருவதேயில்லை. அவ்வாறு நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு அந்த நாடு கிரீன் காரட் வழங்குகிறது. H1Bவிசா பெற்று முதலில் அமெரிக்க சென்றுவிடும் வெளிநாட்டினர், பிறகு நிரந்தரமாக அங்குக் குடியேற கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். ஒருவேளை அனுமதிக்கப்பட்ட அந்த ஆறு ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு விண்ணப்பித்த கிரீன் கார்டு கிடைக்கத் தாமதம் ஆனாலும் கூட , அமெரிக்க அரசாங்கம் அவர்களை வற்புறுத்தி வெளியேற்றாமல் இருந்து வந்தது. நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்ட் கிடைக்கத் தாமதம் ஆனாலும், H1Bவிசா முடிந்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்றலாம் என்ற நிலை இருந்து வந்தது.
வந்தார் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி க்ளிண்டனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஹிலாரி க்ளிண்டனுக்கே சாதகமாக அமைந்தன. ஆனால் கருத்து கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது அவரது தேர்தல் வாக்குறுதிகள். அவற்றில் முதன்மையானது அமெரிக்காவில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் அமெரிக்கருக்கே என்ற பிரகடனம், இதனால் தங்கள் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் தட்டி செல்கின்றனர் என்ற வெறுப்பில் இருந்த அமெரிக்கர்கள் ட்ரம்பை வெற்றி பெற செய்தனர்.
கொடுத்த வாக்குறுதிகள்
சொன்னபடியே தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார் ட்ரம்ப். இதன்படி H1Bவிசா மற்றும் H4-EAD விசாஆகியவற்றில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார்.
என்னென்ன மாற்றங்கள்
1 ) H1B விசாவின் அதிகபட்ச காலமான ஆறு ஆண்டுகள் முடிந்த பின்னும், கிரீன் காரட் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள், இனி உடனடியாக நாடு திரும்ப வேண்டும். கிரீன் கார்ட் கிடைத்த பிறகே அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்து பணியாற்ற முடியும்.
2 ) H1B விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் இணைக்குத் தரப்படும் H4-EADவிசாவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்களால் ஐந்து முதல் ஏழு லட்சம் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மாப்பிள்ளை என்று யாராவது உங்கள் வீட்டுக் கதவை தட்டினால், எதற்கும் கொஞ்சம் என்னவென்று விசாரித்துக் கொள்ளுங்கள்.
Be the first to comment on "H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்புடன் அழைக்கிறது"