ஒரு அஞ்சு நாலு லீவு சொல்லுங்க, நியூசிலாந்து வரைக்கும் போயிட்டு வந்துருவோம்

Newzealand

நியூசிலாந்து என்ற பெயரை அடிக்கடி கிரிக்கெட்டில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அந்த நாட்டில் என்னதான் இருக்கிறது? பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன? எவ்வளவு செலவாகும்? என்ன சாப்பிடலாம்? வாங்க ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.

நியூசிலாந்தில் தவறவிடக்கூடாத இடங்கள்

1. அபெல் டாஸ்மன் தேசிய பூங்கா (Abel Tasman National Park)

Abel Tasman

இந்தப் பூங்காவில் காலடி எடுத்து வைப்பது ஒருவகையில் உங்களுக்கு தாய்லாந்தை நினைவுபடுத்தலாம். விதவிதமான கடற்கரைகளும், நீலநிற கடல்நீரும் அவ்வளவு எளிதில் கண்களை விட்டு அகலாதவை. ஒருநாள் முதல் மூன்றுநாட்கள் வரையிலும் செலவுசெய்து ஆற அமர இந்தக் கடற்கரை பூங்காவில் நடைப்பயணம் மேற்கொள்ளலாம். அப்படி நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தில் வளர்ந்து நிற்கும் புற்கள், மரங்கள், நியூசிலாந்தின் சீதோஷ்ண நிலை என்று மறக்க முடியாத ஒரு அனுபவத்தை நீங்கள் பெறலாம்.

2. கிளேசியர் ட்ரெக்கிங் (Glacier Trekking)

glacier trekking

ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைபிரேதசங்களில் ட்ரெக்கிங் சென்ற அனுபவம் உங்களுக்கு ஏற்கனவே இருக்கலாம். பனிப்பாறைகளின் மீது கால்வைத்து, அதன்மீது ஏறி ட்ரெக்கிங் செய்யும் வாழ்நாள் அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? நியூசிலாந்து அப்படியொரு அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது.

பனிக்கட்டியின் மீது நீங்கள் நடந்து செல்லலாம், நம்ப முடியாத அளவுக்கு ஒரு உறையும் த்ரில் அனுபவத்தை அது உங்களுக்குத் தரும். அதே சமயம் சுரங்கங்களின் ஊடக பனிப்பாறைகளின் மீதேறும் வாய்ப்பையும் பயணிகளுக்கு அந்நாடு வழங்குகிறது.

3. சாகச விளையாட்டுக்கள்

skydiving

இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி. அதேபோல உலகுக்கே ஏதாவதொரு தலைநகரம் உண்டா? அப்படியொரு தலைநகரம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சாகச விளையாட்டுகளுக்கென்று ஒரு தலைநகரம் இந்த ஒட்டுமொத்த உலகுக்கே இருக்குமானால் அது நியூசிலாந்து தான்.

ஸ்கை டைவிங், கேனியான் டைவிங், நடைப்பயணம், பங்கி ஜம்பிங் என்று லட்சக்கணக்கான சாகச விளையாட்டுக்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. சாகசம் செய்து பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமானால், நீங்கள் உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது வந்து பார்க்கவேண்டிய இடம் நியூசிலாந்து.

4. டாங்கரிரோ க்ராஸிங் (Tangariro Crossing)

Tangariro Crossing

உலக புகழ்பெற்ற லார்ட் ஆப் தி ரிங்ஸ் (Lord of the Rings) திரைப்படத்தின் பெரும்பகுதி இங்கேதான் படமாக்கப்பட்டிருக்கிறது. 20 கிலோ மீட்டர்கள் அளவுக்கு நீங்கள் நடைப்பயணம் மேற்கொண்டால் வானத்தில் நடப்பது போன்ற ஒரு பிரமிப்பை நீங்கள் பெறலாம். அதன் ஊடாக எரிமலைகள், சிகப்பு நிற நிலங்கள் என்று காண்பதற்கு அறியப் பல நிலக் காட்சிகள் உங்களுக்குக் காணக்கிடைக்கும்.

நீங்கள் ஒரு நடைபயணி என்றால் நீங்கள் தவறவிடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

5. மௌரி கலாச்சாரம் (Maori Culture)

Maori Culture

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் தனித்த மற்றும் முக்கிய பங்கு எடுத்துக்கொள்வது மௌரி கலாச்சாரம் ஆகும். வேல் ரைடர் (Whale Rider) என்ற திரைப்படம் இவர்களின் கலாச்சாரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.

நியூசிலாந்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள மௌரிஸ்களை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். Rotortuaஎன்ற இடத்தில் நியூசிலாந்தின் கலாச்சார நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.

6. வெல்லிங்டன் (Wellington)

 wellington

இந்நகரத்தின் கட்டுமானமும், பன்முகத்தன்மையும் வெல்லிங்டனுக்கு ஒரு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. இரவு வாழ்க்கை விரும்பிகளை இந்நகரம் வருக வருக என்று வரவேற்கிறது.

7. மினுமினுக்கும் புழுக்கள் (Glow Worms)

Glow_worms

இருட்டு குகை, அதன் மேற்கூரையில் வானத்து  நட்சத்திரங்கள் போல மின்னும் விளக்குகள். அது தரும் குறைந்த ஒளியில் குகைக்குள் ஓடும் ஒரு குளிர்ந்த நதி. அந்த நதியில் மிதந்து பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு. நீங்கள் தவற விடுவீர்களா நண்பர்களே?

உலகின் வேறெந்த இடத்திலும் அனுபவிக்க முடியாத இந்தப் பேரனுபவம் மூன்று மற்றும் ஐந்து மணிநேரம் என்று இரண்டு வாய்ப்புகளாகக் கிடைக்கிறது. இந்தக் குகைக்கு மினுமினுக்கும் புழுக்கள் என்று பெயர்.

8. குவின்ஸ்டவுன் (Queenstown)

 Queenstown

கனடாவின் மலைநகரங்கள் போன்றதொரு தோற்றத்தை குவின்ஸ்டவுன் மலைநகரம் கொண்டிருக்கிறது. அழகான மலைகளையும், அற்புதமான ஏரியையும் தன்னகத்தே கொண்டிருக்கும்  நகரம். கொண்டாட்டங்களுக்கும், சாகச விளையாட்டுகளுக்கும் பேர்போன நகரம்.

9. டௌபோ (Taupo)

Abel Tasman

நடைப்பயணம் மேற்கொள்பவர்களும், மீன் பிடிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர்களும் கட்டாயம் வந்து பார்க்கவேண்டிய நியூசிலாந்தின் மற்றுமொரு நகரம்.

10. லார்ட் ஆப் தி ரிங்ஸ்

lord

இந்தப் படத்தின் திரைக்கதை பயணிக்கும் நியூசிலாந்தின் பல்வேறு பாதைகளில் நீங்களும் பயணித்து பார்க்கலாம்.

நியூசிலாந்தில் என்ன உண்ணலாம்?

1. கடல் உணவு

பதினான்காயிரம் கிலோ மீட்டார்கள் அளவுக்குக் கடல் பரப்பளவு உள்ள நியூசிலாந்து கடல் உணவின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. கடல் உணவின் பல்வேறு வகைகளையும் இங்கே நீங்கள் உண்டு மகிழலாம்.

2. ஆட்டு வறுவல்

நியூசிலாந்து ஆடுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஆடு வறுவல். உலக அளவில் இருக்கும் பல்வேறு புகழ்பெற்ற உணவகங்களிலும் குவி ஆட்டு வறுவல் என்ற உணவின் பெயரை காணும் அளவுக்குப் புகழ்பெற்றது.

3. மௌரி ஹங்கி

நியூசிலாந்தின் 2000 வருடம் பழமையான பாரம்பரியமான சமையல் முறை ஹங்கி. விழாக்காலங்களில், சிறப்பான தருணங்களிலும் இவ்வுணவு பரிமாறப்படும். ஹங்கியில் சிக்கன், மட்டன், பன்றி இறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து வித விதமான காய்கறிகளும் பரிமாறப்படும்.

4. மீன் மற்றும் சிப்ஸ்

நியூசிலாந்தின் கடற்கரைகளில் அமர்ந்து அதன் அழகையும், கதிரவன் உதிப்பதையும், மறைவதையும் காணும் அற்புதத்தையும் ஒரு கொண்டாட்டமாக மாற்றும் உணவாக மீனும் சிப்ஸும் அமைந்துள்ளன.

மேலும் நியூசிலாந்து இனிப்பு வகைகளில் தவறாமல் இடம்பிடித்திருப்பது சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம். கொண்டாட்டங்களில் தவறாமல் வைன் பரிமாறப்படுகிறது.

விசா நடைமுறைகள்

புதுடெல்லி, சண்டிகர், மும்பை, சென்னை, கொச்சின், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் நியூசிலாந்து நாட்டின் விசா விண்ணப்ப மையங்களைத் தொடர்பு கொண்டு விசா பெறலாம். சுற்றுலாவுக்கான விசா அதிகபட்சம் இருபது நாட்களில் வழங்கப்படுகிறது.

எப்போது செல்லலாம்?

டிசம்பர் முதல் பிப்ரவரி வரைக்கும் நியூசிலாந்திற்கு சுற்றுலா செல்ல உகந்த காலம்.

எவ்வளவு செலவாகும்?

ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு நபர் ஒருவருக்கு எண்பதாயிரம் வரைக்கும் செலவு ஆகும்.

இன்னும் என்ன யோசிச்சிகிட்டு? புளி சோத்தை கட்டுங்க. ஒரு எட்டு போயி என்னன்னு தான் பாத்துட்டு வந்துருவோம்.

Related Articles

நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தத... க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அக்னிதேவி font style ஐ வித்தியாசமாக காட்ட தொடங்கியவர்கள் படம் முழுக்க வித...
” என்ன வேலை செய்றீங்க? ” என்... வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அ...
சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக... இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் "...
உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...

Be the first to comment on "ஒரு அஞ்சு நாலு லீவு சொல்லுங்க, நியூசிலாந்து வரைக்கும் போயிட்டு வந்துருவோம்"

Leave a comment

Your email address will not be published.


*