தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகரிக்கிறது துணிப்பை உற்பத்தி!

கடந்த ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை 2018ம் ஆண்டுக்கான முழக்கமா ஐநாசபை அறிவித்தது. அதை ஆதரிக்கும் வகையில் தமிழக அரசு வரும் ஜனவரி 2019 முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் உற்பத்தியும் பயன்பாடும் முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ தற்போதைய தமிழக அரசு செய்த ஒரே உருப்படியான காரியம் என்றால் அது பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது என்று கூட சொல்லலாம். இது போல இதே அதிமுக அரசு கடந்த மே7, 2002ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் உத்தரவு பிறப்பித்த அதே முதல்வர் எந்த காரணமும் இல்லாமல், ஜனவரி 30, 2003 அன்று பிளாஸ்டிக் தடை உத்தரவை திரும்பப் பெற்றார். அதற்குக் காரணமாக மக்கள் ஆதரவு இல்லாததே என்று கூறப்படுகிறது.

 

தற்போது பிளாஸ்டிக்கிற்கு தடை உத்தரவை அதே அதிமுக அரசு அறிவித்து உள்ளது. இதற்கு அரசுடன் கட்டாயம் பொதுமக்களும் கைகோர்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை நிறைவேற்றுவதற்காக சில தன்னார்வ சமூக அமைப்புகளும் தனிநபர் சமூக ஆர்வலர்களும் தற்போது துணிப்பை உற்பத்தியை விதைப்பை உற்பத்தியை பெருக்குவதற்கு வழிவகை செய்து வருகின்றனர்.

 

இந்த பைகள் குறைந்த விலையில் கிடைக்கும் அளவுக்கும், பல முறை உபயோகிக்கும் அளவுக்கும் உற்பத்தி செய்து வருகின்றனர். குறிப்பாக டெக்ஸ்டைல் நிறுவனங்களும் இந்தப் பணியில் இறங்கி உள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற பகுதிகளில் இந்தப் பணி வெகுவேகமாக நடந்து வருகிறது. தமிழகம் உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இரண்டாம் பிடித்து உள்ளது. அந்தத் தமிழகத்திலயே அதிக பிளாஸ்டிக் உபயோகிக்கும் மாவட்டமாக கரூர் விளங்கி வருகிறது. இந்நிலையில் அந்த மாவட்டங்களில் காகிதப்பை துணிப்பை தயாரிப்புகள் போன்றவற்றை மக்கள் வரவேற்க வேண்டும்.

 

தமிழகத்தில் இப்படி இருக்க, மத்திய அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்வே நிலையங்களில் உள்ள பிளாஸ்டிக்கை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டால்  ரூ.5 ரூபாய் அவர்களுடைய செல்போன் நம்பருக்கு அனுப்பப்படுகிறது. இதனை மக்களும் ஏற்று கொள்ள வேண்டும். காய்கறி கடைக்கும் இன்னும் பல இடங்களுக்கும் செல்லும்போது மறக்காமல் பலமுறை உபயோகிக்ககூடிய காகிதப் பையை, துணிப் பையை, விதைப் பையை எடுத்துச் செல்லுங்கள். இந்தச் சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டதில் நீங்களும் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Related Articles

சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்! ... மனிதர்களின் நீண்டகாலத் துணை சிட்டுக்குருவிகள்.  சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்.சிட்டுக்குருவிகள் நம் வீடுகளில் பாதுகாப்பான...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...
ஐடி ஊழியர்களின் உண்மை நிலையை சொன்ன தமிழ்... ஆனந்த விகடனோ அல்லது தி இந்து தமிழ் திசை யோ எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை... ஆனால் லிப்ட் படத்தின் விமர்சனத்தில் இந்த படம் ஐடி ஊழியர் களின் உண்மை ...
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுக... தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அ...

Be the first to comment on "தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகரிக்கிறது துணிப்பை உற்பத்தி!"

Leave a comment

Your email address will not be published.


*