இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள்! – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா?

mobile

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா பொருளாக மாறிவிட்டது. குழந்தைக்கு பாலுட்டும்போது கையில் செல்போன், வண்டி ஓட்டும்போது செல்போன், பாத்ரூம் போகும்போது செல்போன், பல வருடங்களுக்கு பிறகு சொந்தபந்தம் ஒன்றாக கூடியிருக்கும்போது செல்போன், பாடையை தூக்கும்போது செல்போன் என்று தனிமனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் அனைத்திலும் செல்போன் பங்கு வகிக்கிறது. உலக அளவில் செல்போனில் அதிக நேரத்தை கழிப்பவர்கள் இந்தியர்கள் தானாம். வாழ்வின் 70 சதவீத நேரத்தை செல்போனில் வீணடித்துக்கொண்டிருக்கிறது இந்திய சமூகம். அப்படி வாழ்வின் எழுபது சதவீத நேரத்தை செலவழிப்பவர்கள் முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

ஒரு கூட்டம், பேஸ்புக், வாட்சப் குரூப்களில் கல்வி, அரசியல் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள், தொழில் ரீதியான சந்தேகங்கள் போன்றவற்றை பகிர்ந்துகொண்டும், மின்னிதழ்களை படிப்பதில் ஆர்வம் செலுத்திக்கொண்டும் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறது. அதேசமயம் சிலர், பேஸ்புக், வாட்சப் குரூப்களில் சாதியை திணித்து வெட்டிப்பெருமை பேசி அவர்கள் தலையில் அவர்களே மண்ணைவாரி போட்டுக்கொள்கிறார்கள்.

இன்னொரு கூட்டமோ, கூகுளை எப்படி யூஸ் பண்ணனும் என்றே தெரியாமல் சகட்டுமேனிக்கு கண்டதையும் தேடி அலைகிறது. இந்தியர்களால் கூகுளில் பெரும்பாலானவர்களால் தேடப்படுவது பார்ன்வெப்சைட் தான். இவர்கள் இப்படி என்றால் இன்னொரு கூட்டம், யூடியூப்பில் கண்டகண்ட வீடியோக்களை தேடி அலைகிறது. எதற்காக அந்த வீடியோ பார்க்கிறார்கள், அந்த வீடியோவை பார்ப்பதால் என்ன பயன், ஒரு வீடியோவிற்கு எவ்வளவு டேட்டா வீணாகிறது என்று எதுவும் தெரியாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக யூடியூப் சமையல். யூடியூப்பை பார்த்து சமையல் செய்கிறேன் என்ற பெயரில் இல்லறத்தில் இருக்கும் ஆண்களை துறவறம் மேற்கொள்ள செய்கிறார்கள் இன்றைய பெண்கள். அந்த சமையல்களை நம் அம்மாவிடம், அக்கம்பக்கத்தினரிடம் கேட்டால் மிக எளிமையாக சொல்லித் தருவார்கள். அடுத்தது அழகுக்குறிப்புகள், சீரியல்கள் என்று அவர்கள் வீணடிக்கும் டேட்டா பேலன்ஸ் எக்கச்சக்கம்.

இதெல்லாம் விடுங்கள். இவர்களைவிட இன்னொரு கூட்டம் இருக்கிறது. அது டேக் பைத்தியம், செல்பி பைத்தியம், பேஸ்புக் லைவ் பைத்தியம், டப்ஸ்மாஸ் பைத்தியம், ஸ்மூல்அப் பைத்தியம் என்று பல பைத்தியங்களை உள்ளடக்கிய கூட்டம். இவர்கள் பெரும்பாலானவர்கள் ஓவர்நைட்டில் ஒபாமா ஆகிவிடலாம் என்ற மனப்போக்கு உடையவர்கள். ஆதலால் இவர்கள் இந்த பரபரப்பான சூழலில் தங்களை தாங்களே சுயவிமர்சனம் செய்துகொள்வது தேவை.

மீம் கிரியேட்டர்ஸ், டுவிட்டர் கீச்சாளர்களில் ஒரு சிலர் சொந்தமாக சில ஆக்கபூர்வமான பணியை செய்து வருகிறார்கள். அதே சமயம், நடிகர்களுக்காக சண்டை போட்டுக்கொண்டு, காப்பி பேஸ்ட் வாழ்க்கையை நடத்தும் சில அரவேக்காடு மீம் கிரியேட்டர்ஸ்களும், டுவிட்டர் கீச்சாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சமம்.

இப்படி எந்த பயனும் இல்லாத விசியங்களில் நேரத்தை நாம் செலவிடுகிறோம். ஆனால் செல்போன், இணையம், கூகுள், பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் போன்றவற்றை கண்டறிந்த நாட்டினர் தங்கள் தனிமனித வாழ்க்கையில் ஐம்பது சதவீத நேரத்தை மட்டுமே செல்போனில் கழிக்கின்றனர்.

இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இருந்த போதிலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். செல்போனில் நேரத்தைக் கழிக்கும் இந்தியர்களே, ஒவ்வொரு முறை செல்போனை தொடுவதற்கு முன்பும், ” நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார்… ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை…! “என்ற விவேகானந்தரின் பொன்மொழியை நினைவில் கொள்ளுங்கள்.

 

Related Articles

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்... விநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த...
ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!... இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். இவருடைய பெற்றோர்கள் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள். பிறப்பு ஜூன் 20, 1985. உடன் பிறந்த சகோதரி(தங்கை) ஒருவர் இருக்கி...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் ம... குடியுரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...
“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு ச... இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்...

Be the first to comment on "இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போனில் செலவிடுகிறார்கள்! – அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா?"

Leave a comment

Your email address will not be published.


*