தன்னுடைய சொந்தக் கட்சியையே தோற்கடித்த மலேசிய பிரதமர்!

Malaysia Prime Minister - Mahathir Bin Mohamad

தேவைப்பட்டால் நான் என் சொந்தக் கட்சியைக் கூட எதிர்ப்பேன் என்று கமல் தெரிவித்து உள்ளார். அதை வைத்து பல மீம் பேஜ்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் உண்மையிலயே தன்னுடைய சொந்தக் கட்சியையே எதிர்த்து தோற்கடித்த ஒரு நேர்மையான அரசியல்வாதி இப்போதும் இருக்கிறார். அவர் தற்போதைய மலேசிய பிரதமர் மகாதிர் பின் மொஹமத்.

இந்தியாவிலிருந்து தப்பி வெளியேறிய ஜாகீர் மலேசியாவில் மகாதிரை சந்தித்தார் என்ற செய்தி அனைவரையும் திடுக்கிட செய்தது. அதே போல மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் கைது என்று சில தினங்களுக்கு முன்பு செய்தி வந்தது.

இப்படி மலேசியா அரசியல் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்க, தற்போதைய மலேசிய பிரதமர் மகாதிரை பலர் வரவேற்று உள்ளனர்.

காரணம், அவர் பதவி ஆசைப் பட்டு தேர்தலில் நிற்கவில்லை. 75 வயதில் தனது பிரதமர் பதவியை தானாகவே விட்டுக்கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியவர். அவர் தான் மலேசியாவை உலகின் முக்கியமான வர்த்தக நகராக மாற்றிக் காட்டியவர். இப்படி பெருமைகள் கொண்டவர், தான் தோற்றுவித்த கட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டினார். இருந்தாலும் அந்தத் தவறுகளை கட்சியினர் திருத்திக் கொள்ளாததால் தான் தோற்றுவித்த கட்சியை விட்டு விலகி புதிதாக ஒரு கட்சியை தோற்றுவித்து தேர்தலில் தோற்கடித்து இருக்கிறார்.

மலேசியாவில் மகாதீர், சிங்கப்பூரில் லீ க்வான்யூ, நம் தேசத்தில் காமரஜர், கக்கன், ஓமந்தூர் ராமசாமி போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் உலகெங்கும் பல்கிப் பெருகினால் உலகமே நன்றாக இருக்கும் என்கிறார்கள் சிலர்.

Related Articles

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்... இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.இலங்கையில் ...
கொஞ்சம் நடக்க தெரிஞ்சா போதும், ஒலிம்பிக்... இரண்டு முதல் நான்கு வயதான குழந்தைகளும் கூட இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறலாம். உடற்பயிற்சியையும், விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையி...
எளிதில் மறக்க முடியாத பத்தாம் வகுப்பு சச... இன்று கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களின் பிறந்த நாள். சமூக வலை தளங்கள் முழுக்க சச்சினின் போட்டோக்கள் உலாவி வருகிறது. அத்துடன்...
பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்ச... துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  ...

Be the first to comment on "தன்னுடைய சொந்தக் கட்சியையே தோற்கடித்த மலேசிய பிரதமர்!"

Leave a comment

Your email address will not be published.


*