நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர்கள் என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியுமாம்!

How long a person can live can be identified through blood test

சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொள்ள எப்பவுமே நமக்கு ஆர்வம் குறைந்தது இல்லை.

இவ்வளவு நாட்கள் ஜாதகத்தின் மூலமாக அந்த தகவல்கள் ஒரு சிலருக்கு கிடைத்தது. தற்போது, இதனை ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாகவும் கண்டறிய முடியும் என கூறுகிறது அமெரிக்காவில் உள்ள யாலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு.

இதுவரை உயிரணுக்களின் மூலக்கூறு மாற்றங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள இக்குழு தற்போது ஆயுட்காலத்தை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியும் ஆராய்ச்சியை மேற்கொண்டு உள்ளது.

இதற்காக இந்த ஆராய்ச்சி குழு அமெரிக்காவின் தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையில் ஆவணம் செய்யப்பட்ட 42 ஆய்வுகளில் இருந்து முக்கியமான சில தரவுகளை ஆராய்ச்சிக்காக எடுத்து உள்ளது. இந்த தரவுகள் பல மனிதர்களை ஆய்வு மேற்கொண்டு பல ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைக்கும் தரவுகள் ஆகும்.

குறிப்பாக 1988 முதல் 1994 இடைப்பட்ட காலத்தில் பத்தாயிரம் மனிதர்களை ஆய்வு மேற்கொண்டும், 1999 முதல் 2010 வரையிலான காலத்தில் பதினோராயிரம் மனிதர்களை ஆய்வு மேற்கொண்டும் அவர்களது ரத்த மாதிரிகளில் இருந்து உயிர் இழப்பதற்கான காரணிகளை ஆய்வு செய்தனர். அதில் குளுக்கோஸ் அளவுகள், ஆல்புமின் அளவுகள், புரத அளவுகள், WBC அளவுகள் போன்ற பல காரணிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இப்போது இந்தக் காரணிகளை ரத்த மாதிரியை ஆய்வு மேற்கொண்டு ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை கண்டறிந்து கொள்ளலாம் என்று அந்த ஆராய்ச்சி குழு தெரிவித்திருக்கிறது.

Related Articles

பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – ப... சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்ட...
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மொத்தம... சமீபத்தில் தான் 96, பரியேறும் பெருமாள், ராட்சசன் என்று அட்டகாசமான படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரே நாளில் வெளிவந்து பர்சை காலி செய்தன. தற்போது அதே போல ...
கோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் ப... நீயா நானா புகழ் கோபிநாத் மண்டபத்ரம், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்...
எம்.எம். தீன் எழுதிய “யாசகம்”... "தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை... பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் ப...

Be the first to comment on "நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர்கள் என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியுமாம்!"

Leave a comment

Your email address will not be published.


*