உலகம் முழுக்க ஜூன்12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பத்து லட்சமாக இருந்த குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது பெரிய அளவில் குறைந்து உள்ளது வரவேற்கத் தக்க விசயம் தான் என்றாலும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலுமாக ஒழியாதது மிகப் பெரிய குறைப்பாடே. இன்னும் பல கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குறைந்த கூலிக்கு வேலைக்குச் செல்வது அவலம்.
குழந்தைகளின் அவமானம் பெற்றோருக்கு அவமானம் என்பது போன்ற குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான வாசகங்கள் தமிழகம் முழுக்க பல இடங்களில் காணப்பெற்றாலும் டீக்கடை, ஒயின்ஷாப், பேக்கரி, தள்ளுவண்டி உணவகங்கள் என்று பல இடங்களில் குழந்தை தொழிலாளர்களை காண முடிகிறது. அங்கே வேலை செய்யும் சிறுவர்களிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து அவர்களின் வயது என்ன என்று விசாரித்தால் அவர்கள் கொஞ்சமும் சம்பந்தமே வயது இருபத்து இரண்டு, இருபத்தி மூன்று பச்சைப் பொய்யை அள்ளித் தெளிக்கிறார்கள். பதினாழு வயதுக்குட்பட்ட குழந்தைகளை குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தினால் ஆறு மாத சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்ட அவர்களின் முதலாளிகள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை மிரட்டி வைத்து இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இது போன்ற சூழல்கள் முற்றிலுமாக மாற வேண்டும்.
Be the first to comment on "ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்"