காப்பான் அடுத்த அயனா அல்லது அடுத்த அஞ்சானா? – காப்பான் விமர்சனம்

Kaappaan movie review

அயன், மாற்றான் படங்களை தந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பான் படம் சமன் செய்ததா இல்லையா என்பதை பார்ப்போம். 

“sorry ங்கறது ரொம்ப வேலயூபள் வோர்ட் அத அடிக்கடி யூஸ் பண்ணாதீங்க… “, ” ஊர காப்பாத்தற போலீஸ் மாதிரி, நாட்ட காப்பாத்தற ஆர்மி மாதிரி விவசாயமும் ஒரு சர்வீஸ்… “, ” தன் மேல என்ன போட்டாலும் பயனுள்ளதா மாற்றித் தர்றது தான் மண்ணோட குணாதிசியமே… “, ” பாராட்ட சீக்ரெட்ட செய்ய முடியாது… “, ” துரியோதனன் அம்பு விட்டா அது தர்மம்… அர்ஜூனன் அம்புவிட்டா அது தர்மம்… “, ” எப்போதும் சமாதானப் புறாவ பாக்க முடியாது… “, ” பூவுக்கு பிரசவம் பாப்ப போல… “, ” நான் உன்ன தேடி வருவேன்… வர்றப்ப உயிரோட இருக்க மாட்ட.., ” நம்ம போலீஸ் தண்ணீரையும் பாய்ச்சும் தேவைப்பட்டா நெருப்பையும் வைக்கும்… ” ” போராடறது தப்புன்னா போராடுற சூழலுக்குத் தள்ளறதும் தப்புத் தான… “, ” உழைக்கறதுக்கு சம்பளம் வாங்கறதோட சாவுறதுக்கும் சேர்த்துதான் சம்பளம் வாங்குறோம்… “, ” சோறு தான சாப்டற… இல்ல பன்னிங்க திங்கறத சாப்ட்றயா.., “, ” புரோக்கர் வேல பாக்குறவன்லா டிபன்ஸ் மினிஸ்டர்ரு… “, ” அப்றம் என்ன மயித்துக்காக இந்தப் பதவி… ” ” அவன் மேல ஆக்சன் எடுக்க தேவ காரணம் இல்ல… தைரியம்… ” ” 1 பர்சன்ட் கூட உண்மைய பேசமாட்டயா… ” ” ஒரு உயிர பலி கொடுத்தா தான் நூறு உயிர காப்பாத்த முடியும்னா ஒருத்தர பலி கொடுக்கறதுல தப்பு இல்ல…” போன்ற வசனங்களில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஜொலிக்கிறார். கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையை காட்டி இருக்கலாம். திரைக்கதையில் பட்டுக் கோட்டை பிரபாகரின் பங்களிப்பு இல்லை போல. 

சாயிஷா புடவையில் அழகாக இருக்கிறார். அஞ்சலி கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சமுத்திரக்கனி ஜோசப் என்ற அதிகாரியாக நடித்துள்ளார். தன்னுடைய வேலையை சரியாக செய்துள்ளார். வர்மா என்ற பிரதமராக மோகன்லால். அவருடைய நடிப்பை பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஜில்லா, புலி முருகன் படத்தை தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக உள்ளது. நிஜ பிரதமராக அவரே இருந்திருக்கலாம்!!! மனுசன் அவ்வளவு நல்ல பிரதமராக நடித்துள்ளார். மோகன்லாலின் செல்லப் பிள்ளையாக ஆர்யா நடித்துள்ளார். அபி என்ற ஆர்யாவின் இந்தக் கதாபாத்திரம் ஆரம்பம் பட ஆர்யாவை நினைவூட்டுகிறது. பிரதமரை காக்கும் காப்பானாக சூர்யா…!!! வழக்கம்போல அருமையாக நடித்துள்ளார். சில இடங்களில் ஆதவன், மாற்றான் காட்சிகள் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. விவசாயி கதிரவன் கதாபாத்திரத்தில் மட்டும் சூர்யா கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. அதேபோல சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த கோலிசோடா ஆச்சியும் செட்டாகவில்லை.  

சூர்யாவும் சமுத்திரக்கனியும் பேசும் இரட்டை அர்த்த வசனங்களுக்குத் தியேட்டரில் சிரிப்பலைகள். சமுத்திரகனி பூர்ணாவிடம் லவ் சொல்லும் சீன் செம. முதல்பாதியில் பிரதமரை தாக்க முயற்சி செய்யும் ஆரம்ப காட்சி கோ படத்தின் பேங்க் ராப்பரி காட்சியை நினைவூட்டியது. சூர்யாவின் அதிகாரி தோழர்கள் காக்க காக்க படத்தை நினைவூட்டுகிறார்கள். 

சிரிக்கி சீனிகட்டி சீனி சிங்காரி பாடல் செம துள்ளல். பாடல் வரிகளும் அருமையாக உள்ளது. இது சூர்யாவுக்கு மட்டும் கம்பேக் படம் அல்ல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் கம்பேக் படம் தான். பின்னணி இசையில் பட்டாசு கிளப்பும் பழைய ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களிலும் ஜொலிக்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சியில் காஷ்மீரில் குழந்தைகள் பாடும் பாடல் அருமை. ஹே அமிகோ பாடல் கலர்புல். அந்தப் பாடலுக்கான நட அமைப்புகள் சூப்பர். 

மழையில் வரும் சண்டைக்காட்சி உள்பட பல சண்டைக் காட்சிகள் ஓகே ரகம். பீட்டர் ஹெய்ன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். இடைவேளைக் காட்சி செம மிரட்டல். இடைவேளைக்குப் பிறகு வரும் சிலிப்ரா பூச்சிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்யா பேசும் வசனங்கள் செம அண்ட் ஸ்மார்ட். அதே போல எல்லா காட்சிகளும் அமைந்து இருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். விவசாயம் பற்றிய காட்சிகள் வசனங்கள் சூர்யா பேசும் தொனி ஆகிய அனைத்தும் சலிப்பை உண்டாக்குகின்றன. எத்தனை படங்களீல் விவசாயம் பற்றி பேசுவார்கள் இந்த சினிமாக்காரர்கள். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். அதுவே மைனாசாகவும் இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சியில் சூர்யா ஒரு ட்ரெயினுக்கு பாம் வைக்கிறார். ஏன் பாம் வைத்தார் என்பதற்கு  கிளைமேக்சில் காரணம் காட்டுகிறார்கள். அந்த இடத்தில் தனது பிரிலியண்ட்டான வொர்க்கை காண்பித்துள்ளார். கார்ப்பரேட் பெருச்சாளியாகவும் துரோகி ரஞ்சித்தாகவும் நடித்தவர்கள் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக ரஞ்சித்தாக நடித்தவருக்கு இனி தமிழ் திரையுலகில் நிறைய வாய்ப்புண்டு. 

விஜய்காந்த், அர்ஜூன் படங்கள் குறிப்பாக அர்ஜூனின் ஜெய்ஹிந்த் படம் நினைவுக்கு வந்து செல்வதையும் தவிர்க்க முடியவில்லை. அயன் மற்றும் கோ படங்களில் இருந்த ஒரு ஈர்ப்பு இந்தப் படத்தில் கொஞ்சம் குறைவு. கேவி ஆனந்தால் இந்தப் படத்தை இன்னும் கூட சிறப்பாக எடுத்திருக்க முடியும். இருந்தாலும் படம் அவ்வளவு மோசமில்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். அடுத்த அயனும் இல்லை அடுத்த அஞ்சானும் இல்லை, இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது காப்பான். 

Related Articles

நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்ன... விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ...
நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...
விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்... கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சி...
ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...

Be the first to comment on "காப்பான் அடுத்த அயனா அல்லது அடுத்த அஞ்சானா? – காப்பான் விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*