இருவரின் துரத்தலில் இருந்து தப்பித்து வருகிறார் கேகே. அவர் மீது பைக் ஒன்று மோத கேகே அடிபடுகிறார். மலேசிய போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். ஆஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் ஒருவரின் கர்ப்பிணி மனைவியை கேகேவின் ஆள் கடத்தி செல்கிறான். உனக்கு உன் மனைவி வேண்டுமென்றால் ஆஸ்பத்திரியில் போலீஸ் பிடியில் இருக்கும் கேகேவை வெளியே அழைத்து வர வேண்டும் என்கிறான். மனைவிக்காக போலீஸ் பாதுகாப்பை மீறி கேகேவை அழைத்துச் செல்கிறான் அவன். இரண்டு போலீஸ் குழு அவர்களை துரத்திச் செல்கிறது. இந்த சமயத்தில் போலீஸ்களுக்குள்ளே சண்டை வர ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக்கொள்ளப் படுகிறார். இத்துடன் இடைவேளை வருகிறது.
யார் இந்த கேகே? எதற்காக அவரை போலீஸ் குழுக்கள் போட்டிபோட்டு துரத்துகிறது, மருத்துவரின் மனைவி மீட்கப்பட்டாளா? என்ற கேள்விகளுக்கு ஜெட் வேகத்தில் விடை தருகிறது இரண்டாம் பாதி. முதல் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருமா என்பது சந்தேகமே. ஒரு சில காட்சிகளை பார்க்கும்போது விஸ்வரூபம் காட்சிகள் நினைவுக்கு வந்து செல்கின்றன. விஸ்வரூபம் ரசிகர்களுக்கு இந்தப் படம் செம விருந்து. முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டதால் இது ஒரு வெளிநாட்டுப் படமாகவே தெரிகிறது.
Point Blank என்ற ஹாலிவுட் படத்தின் official ரீமேக் தான் கடாரம் கொண்டான் என்கிறார்கள் விமர்சகர்கள். படக்குழுவோ
எ அபோட் போடன்ட் என்ற நாவலின் தழுவலே கடாரம் கொண்டான் என்கிறது.
பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. தாரமே தாரமே பாடல் அருமை. சித் ஸ்ரீராம் ஹிட் வரிசையில் இந்தப் பாடலும் முக்கிய இடம் பெறும். ஒளிப்பதிவு பக்கா. குறிப்பாக பைக் துரத்தல் காட்சி உலக தரம். சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட் அற்புதமாக பணியாற்றி இருக்கிறது. சண்டைக் காட்சிகள் மரண மாஸ். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை தோட்டாக்கள் தெறிக்கிறது. அதற்கேற்றவாறு விசில் சத்தமும் திரையரங்கில் காதை கிழிக்கிறது.
அங்கங்கே சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. அருமையான திரைக்கதை அமைப்பால் அவை பெரிதாக தெரியவில்லை.
விக்ரம் வரும்போதெல்லாம் விசில் சத்தம் பறக்கிறது. மனுசன் அவ்வளவு ஸ்டைலாக இளமையாக இருக்கிறார். அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தில் விக்ரம் நடித்திருக்கலாம்.
அபிஹாசன் இரண்டாம் நாயகனாக வருகிறார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்துள்ளது. முதல் பாதியில் விக்ரம் பத்துக்கும் குறைவான வசனங்களே பேசுகிறார். அப்படி இருந்தும் படம் மாஸாக இருக்கிறது. அக்சரா ஹாசன் கர்ப்பிணி மனைவியாக நடித்துள்ளார். கமலின் பிள்ளைக்கு நடிப்பு சொல்லித் தர வேண்டுமா என்ன? ரொம்ப மெனக்கெடாமல் அசால்ட்டாக நடித்துள்ளார் அக்சரா.
தூங்கா வனம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் மேக்கிங்கில் மிரட்டி உள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா. கூடிய விரைவில் அவர் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
அஜித்திற்குப் ” பில்லா ” வைப் போல விக்ரமுக்கு ” கடாரம் கொண்டான் ” .
Be the first to comment on "அஜித்திற்குப் ” பில்லா ” வைப் போல விக்ரமுக்கு ” கடாரம் கொண்டான் ” – கடாரம் கொண்டான் விமர்சனம்!"