ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!

10 Interesting information about RJ Balaji
  1. இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். இவருடைய பெற்றோர்கள் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள். பிறப்பு ஜூன் 20, 1985. உடன் பிறந்த சகோதரி(தங்கை) ஒருவர் இருக்கிறார். இவரது குடும்பமே இவரைப் போல ஹுயூமர் சென்ஸ் அதிகம் உள்ள நபர்களால் ஆனது. நகைச்சுவை திறன் இவருக்கு குடும்பத்திடம் இருந்தே வந்தது. இவருடைய மகன் பெயர் மகந்த்.
  2. ஐந்து அல்லது ஆறு வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார். அவர் விளையாடிய முதல் அணியின் பெயர் வீனுஸ் லெவன்.
  3. கல்லூரி இறுதியாண்டின் போது காதல் திருமணம் செய்துகொண்டார். முந்தைய செமஸ்டர்களில் அரியர் வைத்திருந்த பாலாஜி கடைசி செமஸ்டரில் காலேஜ் டாப்பராக உயர்ந்தார்.
  4. 2007லிருந்து ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை அளித்து வருகிறார். டோனி கிரேக்கின் கிரிக்கெட் வர்ணனை இவருக்கு மிகவும் பிடிக்கும். ஜெஃப் பாய்காட் கமெண்ட்ரியும் இவருக்குப் பிடிக்கும்.
  5. காமெடியனாக நடித்த முதல் திரைப்படம் சுந்தர் சியின் “தீயா வேலை செய்யணும் குமாரு”. ஹீரோவாக நடித்த முதல்படம் “எல் கே ஜி” . அந்தப் படத்திற்கு இவரே கதை வசனம் எழுதி இருந்தார்.
  6. சென்னை big fmல் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றினார். அதில் டேக் இட் ஈசி, கிராஸ் டாக் என்று இரண்டு நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகள் செய்தார். கிராஸ் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற நிகழ்ச்சியால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் ( லண்டனில் jacintha saldanha தற்கொலை) என்று அறிந்ததும் உடனே இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். படங்களிலும் நடித்து வருகிறார்.
  7. சைமா 2016 சிறந்த காமெடியன் விருதை நானும் ரௌடிதான் படத்திற்காகப் பெற்றார். பிகைன்ட்வுட்ஸ், ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பாகுபலி 2 தமிழ் ஆடியோ லான்ச்சை தொகுத்து வழங்கியவர் பாலாஜியே!
  8. சென்னை மற்றும் வெளிநாடுகளில் icehouse to whitehouse என்ற நிகழ்ச்சி நடத்தி அதன்மூலம் வந்த தொகையை சமுதாய தொண்டாற்ற பயன்படுத்தினர். சமூக சேவைகளில் ஈடுபடுவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. சென்னை பெருவெள்ளம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்கு ஆதரவாகவும் உத்வேகம் அளிக்க கூடியவராகவும் இருந்தார்.
  9. இவருடைய பெயரில் மூன்று APP கள் உள்ளன. க்ராஸ்டாக் நிகழ்ச்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதில் ஒரு APPன் பயன்பாட்டை தொடங்கி வைத்தவர் நடிகர் தனுஷ்.
  10. டொடடொடன்டட் மற்றும் திசரா போன்ற வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பார். வாய் உள்ள பிள்ள பொழச்சிக்கும், வாய்ல தான்டா உனக்கு சனி ஆகிய இரண்டு வாக்கியங்களுக்கும் இவரே எடுத்துக்காட்டு. ஒரு நிகழ்ச்சியில் கிரண்பேடியிடம் கேள்வி கேட்டு நற்பெயர் பெற்றார். இன்னொரு நிகழ்ச்சியில் இயக்குனர் விக்ரமனிடம் திட்டு வாங்கி அசிங்கப்பட்டார். ஆர் ஜே வாக இருந்த போது பல திரைப்படங்களை விமர்சனம் செய்து சினிமாக்காரர்களின் வயித்தெரிச்சலை சம்பாதித்தார். இன்றைக்கு அதே சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Related Articles

” உண்மைக்கு என்ன விலை வேணாலும் கொட... தயாரிப்பு : நாடோடிகள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் : Dr. பிரபு திலக், பி. சமுத்திரக்கனி எழுத்து இயக்கம் : எம் அன்பழகன்ஒளிப்பதிவு : அ. ராசாமதி...
இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...
மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்... இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் ப...
குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....

Be the first to comment on "ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*