ப்ராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஆடை படம் ஒரு செருப்படி! – ஆடை விமர்சனம்!

Aadai movie review

சுதந்திரக் கொடி என்ற பெயரை காமினி என்று மாற்றி வைத்துக்கொண்ட அமலாபால் ஒரு டிவி சேனலில் தொப்பி தொப்பி என்ற ப்ராங்க் ஷோவை நடத்தி வருகிறார். ப்ராங்க் ஷோ நடத்தும் அமலாபாலுக்கு பெட் கட்டி விளையாடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். காமினி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அலுவலகத்தில் இரவு முழுக்க நண்பர்களோடு சரக்கடித்துவிட்டு குடியும் கும்மாளமாக இருக்கிறார்.  என்னால உடம்புல ஒட்டுத்துணி இல்லாம இருக்க முடியும் என்று போதையில் பெட் கட்டுகிறார். அதன்படி அடுத்த நாளின் விடியற்காலையில் ஒட்டுத்துணி இல்லாமல் படுத்துக்கிடக்கிறார். எப்படி நடந்தது? இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே கதை. 

திருவாங்கூர் சமஸ்தானம் மார்பக வரி பற்றிய… நங்கிலி பற்றிய சுருக்கமான கதை அருமையாக இருந்தது. ப்ராங்க் ஷோக்களுக்கு பெயர் போன சரித்திரனுக்கு இந்தப் படம் நல்ல அறிமுகம். அதே சமயம் முரண். 

” ஹிஸ்டாரிக்கல் பிலிம் இல்ல… சன்னி லியோன் நடிச்ச எல்லா படங்களும் ஹிஸ்டரில போயி டிலிட் பண்ற படம்டா… “, ” நாம நியூஸ் வாசிக்க கூடாது நம்மள தான் நியூஸ்ல வாசிக்கனும்… “, ” டை கட்டிருக்கவன் முன்னாடி கைகட்டி நிக்க கூடாது… “, ” உன் வண்டில வரேன்னா… உன்ன பிடிச்சிருக்கன்னு அர்த்தம் இல்ல… வண்டி பிடிச்சிருக்குனு அர்த்தம்… “, ” ஆதார் கார்ட தூக்கி எறியுற ஆண்டி இந்தியன்… “, ” தெரிஞ்சவங்க பண்ணா அது ப்ராங்க்… தெரியாதவங்க பண்ணா அது நியூசென்ஸ்… “, ” என்ன தான் சுதந்திரக் கொடியா இருந்தாலும் அதோட சுதந்திரம் கொடிக்கம்பம் வரைக்கும் தான்… “, ” நல்ல பழக்கங்கள கத்துக்கறது கஷ்டம்.., கெட்ட பழக்கத்த விடுறது கஷ்டம் ” போன்ற வசனங்கள் கைதட்டலைப் பெறுகின்றன.  எழுத்தாளர் ரத்னகுமார் தன்னை அழுத்தமாகப் பதிவு செய்துகொள்கிறார். 

மேக்கப் இல்லாத அமலாபால் அழகாக இருக்கிறார். ரட்ச ரட்ச ஜெய மாதா பாடல் செம. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் கூட அருமை.  ஒரு பெண் பைக் சேசிங்கில் கலந்துகொள்ளும் சீன் தமிழ் சினிமாவில் நிறைய உண்டு. ஆனால் அமலாபால் கலந்துகொள்ளும் சீன் மிரட்டல்.  அதே போல நிர்வாணமாக இருக்கும் அமலாபாலை நாய் துரத்தும் காட்சியும் மிரட்டல். 

” டீக்கடைக்காரன மரியாதையா பேசு… நாளைக்கு நான் சிஎம் ஆவேன்… பிஎம் ஆவேன்… “, ” சிட்டுக் குருவிக்கு குடும்பக் கட்டுப்பாடு…”, ஆகாசத்த நீ ஏன் பாக்கற… “, ” ஒன்னும் கிடைக்கலனா ஒன்னுக்கடிச்சுட்டு போவோம்… ”  போன்ற வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்பலைகள். டப்பிங் இல்லாமல் லைவ் ரெக்கார்டிங் பண்ணி இருக்கிறார்கள். சவுண்ட் டிசைனிங் மிக அருமையாக உள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சவுண்ட் வொர்க் பிரமாதமாக உள்ளது. 

சரக்கு அடித்துவிட்டு பெட் கட்டி விளையாடும் அமலாபால் கேங்கை கொழுப்பெடுத்த கழுதைகள் என்று திட்டுகிறார்கள் பார்வையாளர்கள். அதே பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் காமினி மீது பரிதாபம் கொள்கிறார்கள். ஆங்காங்கே வரும் நகைச்சுவைகளுக்கு சிரிக்கிறார்கள். ஆக இந்தப்படம் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. 

கிளைமேக்சில் யுபிஎஸ்சி தேர்வு எழுத வரும் கிராமத்துப் பெண் அமலாபலை தூக்கிச் சாப்பிடுகிறார். அவர் பேசும் வட்டார மொழி மனதை கவர்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் படத்தின் உயிர். கில்மா கவிஞருக்கு ரத்னகுமார் என பெயர் சூட்டி தன்னை தானே பகடி செய்கிறார் இயக்குனர்.  

நிர்வாணமாக அலைந்த போது மனிதர்களுக்குள் எந்தவிதமான ஏற்றத் தாழ்வும் இல்லை. இலைகளைக் கொண்டு மறைத்த போதும் யாரும் யாரையும் எந்தவிதமான பார்வை கொண்டும் பார்க்காமல் தான் இருந்திருப்பார்கள். ஆடை வந்தபோதுதான் மனிதனுக்குள் அகம்பாவம் வந்தது. கச்சை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஏளனத்தோடு பார்க்க வைத்தது. கோட்சூட் அணிந்த வர்க்கத்தின் மத்தியில் நைந்த புடவையில் நின்றபோது அது சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆடைதான் மனித சமூகத்தின் முதல் அரசியல். – பாக்கியம் சங்கர் (நான்காம் சுவர்) எழுதிய வரிகளுக்கு ஏற்றவாறு படம் ஆடை அரசியலை பேசுகிறது என்று நினைத்தால் ஏமாற்றமே. 

இந்தப் படத்தை இன்னொரு அருவி என்றுகூட சொல்லலாம். அருவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிழித்தார்கள். இதில் ப்ராங்க் ஷோ செய்பவர்களை கிழித்துள்ளார்கள். 

படத்தில் சில லாஜிக் மிஸ்டெக்குகளும் இருக்கின்றன. இருந்தாலும் அவை ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. படத்தின் போஸ்டர் டிசைனில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். போஸ்டர்களை ஒட்ட தியேட்டர்காரர்கள் சங்கடப்படுகிறார்கள். 

அமலாபாலின் இன்ட்ரோ சீன் செம மிரட்டலாக இருந்தது. அதே போல புடவையில் வந்தது அருமையாக இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் செய்ற்கை, கனவு என்கிற போது எரிச்சலாக இருக்கிறது. அவற்றையெல்லாம் இடைவேளைக்குப் பிறகான வசனமில்லா இருபது நிமிட காட்சிகளும் கிளைமேக்சின் வசனங்கள் நிறைந்த காட்சிகளும் மறக்கடிக்க வைக்கின்றன. 

சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று எதுவும் இல்லை. கிராமத்துப் பொண்ணு ஒழுக்கமானவர்களா நகரத்துப் பொண்ணு ஒழுக்கமானவர்களா என்ற முட்டாள்தனமான விவாதம் நடைபெற வாய்ப்புண்டு. 

ஆடை – இன்னொரு அருவி! 

 

Related Articles

ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1... தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை ...
2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல... தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் ...
இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 2018 ஐப...  வரிசை எண் போட்டி எண் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொ...

Be the first to comment on "ப்ராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஆடை படம் ஒரு செருப்படி! – ஆடை விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*