இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது சொல்லாக மட்டும் தான் இருக்கிறதே தவிர செயலில் யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது காமெடி நடிகர் கருணாஸ் தன் சொந்த ஊர்க்காரருடன் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துக்கொள்ள நெட்டிசன்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார்.
அதே போல, பாத்ரூமில் வந்து செல்பி எடுத்துக்கொள்ள விரும்பிய ரசிகரை திட்டி அனுப்பி இருக்கிறார். இப்படி இடமும் சூழலும் தெரியாமல் செல்பி எடுப்பது இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் கேரளா மாநிலத்தில் இந்திய மாணவர் அமைப்பின் கல்லூரிகள் தலைவரான அபிமன்யூ கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதை விசாரிக்கும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலையாள நடிகராகவும் அவருடைய வீட்டில் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, அவருடைய ரசிகர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்த அவர் புறக்கணிக்காமல் எலவு வீட்டில் நின்றுகொண்டு சிரித்தபடி செல்பிக்குப் போஸ் கொடுத்திருக்கிறார்.
அதை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட அவரை பலரும் வறுத்து எடுத்தனர்.
ஆனால் ஒரு சில பத்திரிக்கைகள், அஜித்துடன் நடித்த நடிகர் என்று தலைப்பிட்டு பிரச்சினையை வேறுமாதிரி மாற்றி திசைதிருப்ப அதைக்கண்டு அஜித் ரசிகர்கள் கொதித்து இருக்கிறார்கள்.
இது போன்ற விசியங்களில் பல சினிமா நடிகர்கள் நடிகர் கமலையும், நடிகர் விஜய்யையும் பின்பற்ற வேண்டும்.
Be the first to comment on "சாவு வீட்டில் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்த நடிகர் சுரேஷ் கோபி! – சம்பந்தமே இல்லாமல் அஜித்துடன் கோர்த்து விடுவதேன்?"