மகாராஷ்டிரா மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதை அடுத்து மகாராசுடிரா விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எதற்காக போராட்டம் ? யாரெல்லாம் ஆதரவு?
வேளாண் கடன் தள்ளுபடி,
மானியம் அளித்தல்,
விவசாய சீர்திருத்தங்களுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து இந்திய கிசான் சபா என்னும் அமைப்பு மஹாராஷ்ஷ்ட்ரா விவசாயிகளைத் திரட்டி மாபெரும் சட்டப்பேரவையை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றினை நடத்தும் திட்டமிட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற இந்த அமைப்பு நடத்தும் இப்போரட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புனேயில் இருந்து நடைபயணமாக ஞாயிறன்று மும்பைக்கு வந்துள்ளனர். ஏறக்குறைய 180 கி.மீ. தொலைவை 5 நாட்களாக நடந்து ஞாயிறு நண்பகலில் மும்பை மாநகரத்தின் தாதர் எல்லையை இந்த பிரமாண்டமான விவசாயிகள் அணியானது வந்து சேர்ந்தது.
போராட்டம் துவங்கியது எப்படி?
முதலில் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகள் என்ற நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமானது. பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ள விவசாயிகள் அனைவரும் திங்களன்று மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தது.
இதைத்தொடர்ந்து திங்களன்று அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. பள்ளி செல்லும் காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர்.
சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து போராட்டத்தில் பங்குபெற்றனர்.
வாபஸ்
இந்நிலையில் விவசாயிகளது கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸீ அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாநில நீர் வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “விவசாயிகள் கோரிக்கை அனைத்தையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது, எனவே போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
Be the first to comment on "மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!"