ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்னாளப்பட்டி சரவணன்!

Harbhajan Singh learning and tweets in Tamil

கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார்.
அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ஆரம்பித்து உள்ளனர்.

முதல்முறையாக கடந்த பொங்கல் தினத்தன்று தமிழில் டுவீட் செய்ய ஆரம்பித்தார் ஹர்பஜன். அதன் பிறகு ஐபில் அணியில் சென்னையில் தேர்வானதும் அவருடைய தமிழார்வம் மேலும் அதிகரித்துள்ளது. அதே சமயம் அவருடைய தமிழ் டுவீட்களை போடுபவர் ஹர்பஜன் இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னாளப்பட்டி சரவணன் என்ற தீவிர ஹர்பஜன் ரசிகர் தான் அந்த தமிழ் டுவீட்களை எழுதி தருபவர்.

சின்னாளப்பட்டி சரவணன் தற்போது துபாயில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கிரிக்கெட்டில் முதலில் ராகுல் டிராவிட் தான் சரவணனின் பேவரைட். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா இந்தியா தொடரில் பெரிய பெரிய பேட்ஸ்மேன்களை தனது அற்புதமான பவுலிங் திறனால் வீழ்த்தினார். அந்த மேட்ச் முதல் சரவணன் ஹர்பஜனின் தீவிர ரசிகராக மாறியுள்ளார்.

அன்று முதல் ஹர்பஜனின் ஒவ்வொரு மேட்சையும் தவறாமல் கவனித்து அவருடைய வெற்றி தோல்விகளை அலசி ஆராய்ந்து சேகரிப்பதை வாடிக்கையாக்கி வைத்துள்ளார். ஹர்பஜன் பற்றி அவர் சேகரித்த தகவல்களை பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் மூலமாக தனது நாயகனிடம் கொண்டு சேர்த்துள்ளார். அதை அவரே கொஞ்ச நாட்களில் மறந்துவிட்ட நிலையில் திடீரென ஒரு நாள் பஞ்சாப் அணி பயிற்சியாளரிடமிருந்து திண்டுக்கலுக்கு ஹர்பஜன் வந்துள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்த்து பேசியுள்ளார்.

அதன் பிறகு பல நாட்கள் டுவிட்டரில் இருவரும் அரட்டை அடித்ததுண்டு. ஹர்பஜன் எப்போதெல்லாம் தமிழில் டுவிட் செய்ய விரும்புகிறாரோ அப்போதெல்லாம் சரவணனை அழைத்து தான் சொல்ல இருப்பதை தமிழில் டைப் செய்து தரச்சொல்லி அதை டுவீட்டாக்கி வருகிறார். இனி வரும் காலங்களில் ஹர்பஜனின் தமிழ் டுவீட்களை நிறைய பார்க்கலாம்.

Related Articles

கேப் டவுணைப் போல் பாலைவனமாக மாறி வருகிறத... தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப் டவுண். உலகின் பிரதான நகரமான இது தற்போது முழுக்க முழுக்க பாலைவனமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நாற...
விநாயக சதுர்த்தியை வீட்டில் எவ்வாறு கொண்... பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த கடவுள். எந்த ஒரு காரியமும் தடையில்லாமல் நிறைவேற விநாயகரை வழிபட்டு ஆரம்பிப்பது நமது வழக்கம். விநாயகரின் பிறந்த நாளான வி...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
காப்பான் அடுத்த அயனா அல்லது அடுத்த அஞ்சா... அயன், மாற்றான் படங்களை தந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பான் படம் சமன் செ...

Be the first to comment on "ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்னாளப்பட்டி சரவணன்!"

Leave a comment

Your email address will not be published.


*