இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் “நான் கோமாளி நிஷாந்த்” குழுவினருக்கு ஒரு மனமார்ந்த நன்றி.
பிளாக்ஷீப் குடும்பத்தைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. நான் கோமாளி நிஷாந்த் நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம். அப்படி என்ன அதுல புதுசா சொல்லிக் கிழிச்சுட்டானுங்க, நீ அவனுங்களுக்கு இப்படி சொம்பு தூக்குற என்ற வழக்கமான கேள்விகள் பலருக்கு வரும். ஆனால் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டிய விஷியத்தை “தி பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ்” வீடியோவில் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
கல்லூரி மற்றும் பள்ளிகளில் முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களை சொம்பையாக பழமாகப் பார்க்கும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. கேலி, கிண்டல்களால் முதல் பெஞ்ச் மாணவர்களை அதிகமான மன உளைச்சலுக்கு தள்ளி விடுகிறார்கள். அவர்கள் ஏன் புத்தகத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள், கல்லூரியில் கூட ஏன் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்களே தவிர அவர்களின் குடும்ப சூழலை உடன் இருக்கும் நண்பர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் விடையாக இந்த நான் கோமாளி நிஷாந்தின் first bench student வீடியோ அமைந்து உள்ளது.
வீட்டின் முதல் பட்டதாரி மாணவர்கள் அப்படி தான். அவர்களுக்கு வேறு வழியில்லை. உங்களுடைய கேலி கிண்டல்களை மீறியும் கடுமையாக உழைத்தால் தான் அவர்களால் மேலே வர முடியும் என்பதை அவ்வளவு அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். கூலி தொழில் செய்யும் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தங்களுடைய அறிவைப் பெருக்குவதற்காக மட்டும் படிப்பது இல்லை: அடுத்த தலைமுறைக்கு விளக்காக இருக்க படிக்கிறார்கள் என்பதை உணர்த்த படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷியம்! இதை நமக்கு சொன்ன குழுவை பாராட்டுவது நம் கடமை!
Be the first to comment on "வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன குறும்படம்! – நன்றி “நான் கோமாளி நிஷாந்த்!”"