தேசப்பன், கிளாரிந்தா, பாம்பு நாகராஜ், நூர், திருப்பால், சகாயம், நந்தினி, அலமேலு, பாப்பம்மா, காந்தி, பாஸ்கர் டாக்டர், குணா, மலர்விழி, சர்மா டாக்டர், ரோஸி வார்டன், மயில்வாகனம் என்கிற மைலோ,வேலு, வைரம், லேகியம், பாபுஜி, சோனா, கல்யாணி, தங்கையா, சட்ட நாதன், பச்சை, விஜயன் மேஸ்திரி, மாலகொண்டையா, சித்திர லேகா, பென்சிலையா, ஸ்ரீராமுலு, ஒய்யாரம், தம்புரொட்டி, மன்னாரு, ஜானகி, டபேலா, திருச்சி, கீபோர்டு, சித்ரா, பூங்காவனம் மேஸ்திரி, மலேசியா, வள்ளி, தருமன், ஏழுமலை, சோமா, அஞ்சலை அம்மாள், திருக்குறள் ராம்ராஜ், நாகா, மகேந்திரன், முனுசாமி, சென்செம்மா, சென்னா, ஜீவா, கிட்ணா, மெஸ்ஸி, சொர்ணம், ஜம்புலிங்கம், சாந்தகுமாரி, கலையழகன், செங்கப்பன், ஆனந்த், ஜெகன், நாகம்மா, ஆறுமுகம், சரசு, மாறன், மகாதேவி, சந்திரன், கண்ணன், நரேஷ், டிஸோசா, ரெபேக்காள், கவுன்சிலர் எரிமலை, தக்காளி ராஜா, அனீஸ், ஜிப்ரான், பேராசிரியர் பிரபாகரன், பேராசிரியர் தேவராஜ், ரசியாமணி, மைக்கேல், இசக்கி, ஜெயராம், சாக்கோ, ராம், தங்கம், கண்ணம்மா, கபீர், திருநாவுக்கரசு, திருக்குறள் முனுசாமி, செந்தில், சுதாம்மா, மல்லிகா, மாரி, இமயவன், கண்டக்டர் லூர்து, மாசாணம், மகாராஜன், சாண்டோ ராஜ், பக்ரூ, முத்துக்கிருஷ்ணன், கொடைவள்ளல் சேகர், மலர்விழி, ஜாபர், உதயா, குட்டக்கையன் மணவாளன், சங்கர், பரமேஷ்வரன் ரோகி, ராபின், சம்சுதின், லாரன்ஸ், பூமிநாதன், பூகம்பம் பூமணி, அடைமழை கதிரேசன், பச்சைக்கிளி, எலி, கண்ணம்மா, சந்துரு, வைஷ்ணவி, ஜான் டிக்சன் டால்ஸ்டாய், கிரிஜா, ஜோகி, கருணை பிரகாசம், பெருமாள், வள்ளி, அகிலா, குப்பம்மாள், வானவன் என்று நிஜ மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
பிணக்கூராய்வு பணியாளர்கள், மனநல காப்பக பணியாளர்கள், பிச்சைக்காரர்கள், துணை நடிகர்கள், கயிற்றில் நடக்கும் வித்தைக்காரர்கள், நாடோடிகள், விபச்சாரிகள், குறவன் குறத்திகள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், துப்புரவு பணியாளர்கள், கண்பார்வை அற்ற தெரு பாடகர்கள், ரயில் தண்டவாளங்களில் அடிபட்ட பிணங்களை அகற்றும் பணியாளர்கள்(பாடிமேன்), ஊர்ஊராகச் சென்று மரம் வெட்டுபுவர்கள்(வெட்டுக்காரர்கள்), குடும்பத்தையே இழந்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்குள் சுற்றித் திரியும் மனிதர், குடிக்கு அடிமையானவர்கள், நாடக கலைஞர்கள், சினிமா தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி ஏமார்ந்தவர்கள், இயற்கை சீற்றத்தின் போது கடற்கரையோரம் வாழும் மீனவர்கள், குப்பை கிடங்கு அருகே வாழும் மலைவாழ் மக்கள், டிஜிட்டல் வந்ததால் தடுமாறிப் போன ஓவியர்கள், சிறை இல்லவாசிகள், திருநங்கைகள், மிமிக்ரி – இமிடேட் பாடகர்கள், விளையாட்டு சொல்லிக்கொடுக்கும் மாணவர்களுக்காக கல்யாணமாகாத வாத்தியார்கள், கொடுத்து வாழ்ந்து கெட்ட கொடைவள்ளல்கள், ஊருக்கு ஒதுக்குப் புறமாக பாழ்மண்டபத்தில் வாழும் தொழுநோயாளிகள், அரசியல்வாதிக்கு அடியாள் ஆகும் இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படாதபாடு படும் ஏழைகள், திருவிழா காலங்களில் கடைவிரிக்கும் தேர்க்கடை வியாபாரிகள், சர்க்கஸ் காரர்கள் என்று நாம் கடந்துசெல்லும் எளிய மனிதர்களைப் பற்றி பைசுகிறார் எழுத்தாளர்.
புத்தகம் படிக்கும்போது இதுபோன்ற சில வரிகளை கட்டாயம் நீங்கள் அடிக்கோடிட்டு படிப்பீர்கள்.
- அன்பு தான் இன்னொரு உயிரக் கொல்லும்… மரியாத எப்பவுமே மரியாதையாத்தான் இருக்கும்…
- குழந்தைகள் பிரேதத்தை எப்போது பார்த்தாலும் அது பிணமாக தெரிவதில்லை. குழந்தையாகத் தான் தெரிகிறது.
- ஊரு பேரோட செத்தா ஒரு மதத்தோட சாங்கியம்தான் கெடைக்குது. அநாதையா செத்தாதான் அய்யரு, பாதிரியாரு, மௌலவின்னு மூணு மதத்தோட சாங்கியம் நடந்து, சமத்துவம்மா போய்ச் சேர்றான். எல்லா கடவுளும் ஒண்ணுதான்னு ஆகணும்னா… அநாதப் பொணமாத்தான்டா சாவணும்…
- துக்கத்தால மட்டும் பைத்தியம் புடிக்கறதில்லே… ரொம்ப சந்தோஷத்திலயும் பைத்தியம் புடிக்கும்…
- இந்த மனுசப் பிறவியில ரெண்டு விஷியந்தான் பொதுவானது… ஒண்ணு பசி… இன்னொண்ணு செக்ஸ்…
- ஒரு மனுசன சுதந்திரமா விடுறதத் தவிர அவனுக்கு நீங்க வேற எந்த சந்தோசத்தையும் கொடுத்திட முடியாது…
- நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பாவனை செய்து கொண்டிருப்பவர்கள்.
- ஆன்மீகத்தின் அதீதநிலை பிச்சையெடுத்தல், உன்னிடம் இருக்கும் நான் எனும் அகந்தை பிறரிடம் கையேந்தினால் தான் ஒழிந்துபோகும், யாவற்றையும் துறந்து பிச்சை புகுதலே ஞானத்தின் ஆரம்பம்
- பிச்சைக்காரங்களுக்கு எல்லா சாமியும் ஒண்ணுதான்…
- பெயர் வைத்திருக்கும் நமக்குத் தான் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் எல்லா கௌரவங்களும் தேவைப்படுகின்றன. பெயரற்றவர்கள் பாக்கியசாலிகள்.
- பிச்சை எடுத்துப் பழகிட்டா கடன் வாங்க பயப்படுவாங்க…
- அவமானங்களை கடந்தா தான் ஞானத்தின் எல்லை ஆரம்பம்…
- அம்மாங்க தான் நம்மள வுட்டு ஓடுறதே இல்ல…
- கலைஞன் என்பவன் கைதட்டல்களால் நிறைந்து வழிபவன்.
- அமைதியாக இருக்கும்வரை பெண்கள் சலனமற்ற காடு. அது குலைந்து போனால் கொழுந்துவிட்டு எரியும் தீக்காடு.
- எந்த நிலத்திலும் குழந்தைகள் தான் குழந்தைகளாக இருக்கிறார்கள்.
- இருக்கும்போது சாதி மதம் மயிருன்னு பேசுவான். அடிபட்டு கொழகொழன்னு கெடக்கும்… எவ்ளோனாலும் பரவால பாடிய தூக்குங்கன்னுவான்…
- தலைமுறை தலைமுறையாக பள்ளியின் வாசனை இல்லாமல் ஒரு ஜனத்திரள் இருந்திருப்பதுதான் நவஇந்தியாவின் சாதனை போல.
- குடிப்பது என்பது வேறு, அருந்துவது என்பது வேறு – பிரபஞ்சன்
- எளியவனின் கனவு என்பது கானல்நீர் போன்றது.
- பிள்ளைக்கு சந்தோஷம் தரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை செய்துகொடுப்பது அம்மாக்களால் தான் முடியும்போல.
- குடியெனும் நோயிலிருந்து வெளியேற அன்பெனும் ஒற்றைச் சொல் போதுமானதாக இருக்கிறது.
- உரையாடல்கள் இல்லாமற் போகிறபோதுதான் என்ன செய்வதென தெரியாமல் மதுவின் வசம் ஒப்புக்கொடுக்கிறான் ஒருவன்.
- வாழ்வு என்பது எப்போதும் அழித்துவிடுகிற ஒரு கோடு மாதிரி தான்…
- ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள், ஏன் இப்படி நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்… – ஜி. நாகராஜன்
- ஒவ்வொரு கலைஞனும் ஆரம்ப காலத்தில் கத்துக்குட்டிதான் – ரால்ஃப் வால்டோ எமர்சன்
- நமக்கான மொழி என்பது நம் நிறத்தைப் போன்றது, அழியாமல் இருக்கும் வல்லமை கொண்டது.
- காலத்துக்கும் நிக்கப்போற கலைக்கு கூலின்னு சொல்லி அசிங்கப்படுத்தாதிங்க… கலைஞனுக்கு குடுக்கற காச சன்மானம்னு சொல்ல கத்துக்கிடுங்க…
- அரசியல் என்பதே சமாளித்தல் தானே. எந்த சூழ்நிலையென்றாலும் அவர்களின் காரியத்துக்காக விழுந்து எழுவார்கள்.
- சிறந்த கலைஞன் என்பவன் அதீத சந்தேகம் கொண்டவனாகத் தான் இருக்கிறான். அவன் படைத்த எதையும் அவன் உடனே நம்பத் தயாராக இருப்பதில்லை.
கலைஞர்கள் அப்படித்தான் கைதட்டல்களிலிருந்து விளைகிற நெல்மணிகளை சோறாக்கி உண்பவர்கள்.
- ஒரு புள்ளியில் தான் நாம் நினைத்த அல்லது நினைக்கவே முடியாத சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்துவிடுகின்றன. மலைப்பாதையின் திருப்பத்தைப் போல தான் இந்த வாழ்வு. எது வேண்டுமானாலும் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம். ஒரு கணமூர்க்கம் நம்மை செயலிழக்க வைக்கிற தருணம் தான் நம் எல்லா வினைகளும்.
- தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது, நமக்கென யாரும் இல்லாதபோது விடுதலை என்பதும் வெறும் வெற்றுச் சொல் தான்.
- காலம் கடந்த துக்கங்கள் யாவும் சிரிப்பைக் கொண்டுதான் மூடப்படுகின்றன.
- சுதந்திரம் இல்லன்னா சொர்க்கம் கூட நரகம் தான்.
- ஊருக்கே பழியாக இருந்தாலும் பிள்ளைகளை மட்டும் இந்த அம்மாக்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
- நிர்வாணமாக அலைந்த போது மனிதர்களுக்குள் எந்தவிதமான ஏற்றத் தாழ்வும் இல்லை. இலைகளைக் கொண்டு மறைத்த போதும் யாரும் யாரையும் எந்தவிதமான பார்வை கொண்டும் பார்க்காமல் தான் இருந்திருப்பார்கள். ஆடை வந்தபோதுதான் மனிதனுக்குள் அகம்பாவம் வந்தது. கச்சை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஏளனத்தோடு பார்க்க வைத்தது. கோட்சூட் அணிந்த வர்க்கத்தின் மத்தியில் நைந்த புடவையில் நின்றபோது அது சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆடைதான் மனித சமூகத்தின் முதல் அரசியல்.
- எப்போதும் எல்லா நேரமும் எல்லோரையும் உற்று கவனித்துக் கொண்டிருப்பதே இந்தச் சமூகத்தின் வேலையாக இருக்கிறது. சகமனிதர்களின் நடவடிக்கையில் எதாவதொரு வித்தியாசத்தைக் கண்டுவிட்டால் போதும், அதை பேசிக் கொண்டாடிக் கழுவி ஊற்றுவதில் அவ்வளவு சுகம் அநேகருக்கு.
- குரல் என்பது வெறுமனே பேசுவது மட்டுமல்ல… ஒரு சமூகத்தையே கட்டிப்போடும் அளவுக்கு வலிமைகொண்டது.
- நெற்றிக் காசானாலும் நெல்மணி காசானாலும் பணத்துக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரணம் என்பதே கிடையாது.
- வாழ்வையும் அதன் தரிசனத்தையும் எவர் சொல்லிக் கொடுக்கிறாரோ அவர் தான் வாத்தியார்.
- பேரன் பேத்தி எடுத்து ஆண்டு அனுபவித்துப் போகிற கட்டையை குளிர குளிரக் கொண்டாடி எடுத்துப் போடுவதற்குப் பெயர் தான் கல்யாணச் சாவு.
- வானத்துக்கும் கீழிருக்கும் அத்தனை உயிர்களுக்கும் ஒரேயொரு மொழிதான் இருக்கிறது, அது பசி. முதல் பசி வயிற்றிலிருந்தே தொடங்குகிறது அப்புறம் தான் மற்ற பசிகளெல்லாம்.
- என்ன தான் அற்பதமாற நடனத்துக்கு சொந்தக்காரனாக இருந்தாலும் செத்தவன் முன்னால் ஆடுவதால் அவனுக்குப் பெயர் சவக்கூத்தாடி. உயிரோடிருக்கும் கலைவான்களுக்கு மத்தியில் அரங்கேறினால் அவன் பெயர் நடன சிகாமணி.
- மனிதனை மிருகமாக்குவதற்கு அவனது ஆதாரமான இச்சையை எப்படித் தூண்ட வேண்டுமென அதிகாரத்திற்குத் தெரிந்திருக்கிறது.
- மனிதனைப் பார்த்து இன்னொரு மனிதன் பயப்படுவதைத் தவிர இந்த உலகத்தில் மனிதனுக்கு வேறொரு போதை தேவைப்படுவதில்லை. ராஜபோதை அது.
- கதறித் துடித்தாலும் ஒருவரின் வலியை மட்டும் நாம் வாங்கிக்கொள்ளவே முடியாது என்பதுதான் நிஜம். அவரவர் வலியை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும்.
- நோய்மையில் அவதிப்படும் தருணத்தில் தான் சகமனிதர்களின் ஒரு சொல் நமக்கு தேவ வார்த்தையாக மாறிப்போகும்.
- நோய்மைக்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லை என்பது வேறு, நோய்மை என்ற ஒன்று வந்தால் அன்றாடமே ஆட்டம் கண்டுவிடும் என்பதே வேறு.
- நமக்கான துக்கங்களில் உடன் இருப்பவர்கள் தாம் கடவுளர்கள். அவர்கள் எதுவும் செய்ய வேண்டாம், உடன் இருந்தாலே போதும்.
Be the first to comment on "பாக்கியம் சங்கர் எழுதிய நான்காம் சுவர் – புத்தக விமர்சனம்!"