ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? – ராட்சசி விமர்சனம்!

Raatchasi Movie Review

அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடைக்கும்.

இயக்குனர் கௌதம்ராஜ் மற்றும் எழுத்தாளர் பாரதி தம்பி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. மிக மோசமான சூழலில் இருக்கும் ஒரு அரசுப்பள்ளிக்கு நேரடி தலைமை ஆசிரியராக வருகிறார் கீதாராணி எனும் ஜோதிகா. நாயகி வந்ததும் நம்மவர், சாட்டை, பேட்ட படங்களில் வருவது போல் அந்த சூழலே முற்றிலும் மாற்றியமைக்கப் படுகிறது. புதிய விதிமுறைகள் வகுக்கப் படுகின்றன. இந்த மாறுதல்கள் எல்லாம் அங்கு சொகுசாக வாழ்ந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை. உடனே தலைமை ஆசிரியை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். அந்த எதிர்ப்பை கீதாராணி எப்படி சமாளித்தார் என்பதே கதை. 

மிலிட்டரி பணியை துறந்து நேரடியாக தலைமை ஆசிரியராக பதவி ஏற்கிறார் கீதாராணி. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பல வருடங்கள் ஆசிரியராக பணியாற்றிய நபர்களையே தலைமை ஆசிரியர்களாக நியமிப்பார்களே தவிர வேறு யாரையும் தலைமை ஆசிரியராக உயர்த்த மாட்டார்கள் என்கிறது ஆசிரியர் தரப்பு. 

இப்படி நம்பகத்தன்மை குறைவாக உள்ள இந்த படம் மக்களின் மனதை வெகுவாக கவர்கிறது. காரணம் வசனங்கள் அப்படி. எல்லா வசனங்களுமே நெற்றிப் பொட்டில் அடித்தது போல உண்மையை உரக்க சொல்கின்றன. எழுத்தாளர் பாரதி தம்பிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். 

சாட்டை படத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையேயான காதல் காட்சியை காட்டி இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஆசிரியைக்கும் ஒரு சுட்டி மாணவனுக்கும் இடையேயான காதலை காட்டப்படுகிறது. அந்த சுட்டி மாணவன் வரும் காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கிறது. 

ஷான் ரோல்டன் இசை என்றதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஏமாற்றிவிட்டார்.ஒரு பாடல் கூட ஹிட் அடிக்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகமே. வில்லனாக கவிதாபாரதி நடித்துள்ளார். அப்படியே தம்பி ராமையாவை நினைவூட்டுகிறார். இப்படி சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகவே இது கருதப்டுகிறது. பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களை பற்றி படம் பேசுகிறது. இது மிக குறிப்பிடத் தக்க விசியம். ஆசிரியர்களுக்கு பயந்து பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் மாணவ மாணவிகளை 9ம் வகுப்பில் பாஸ் போட்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுத வைத்து வெற்றி பெற வைக்கிறார் கீதாராணி. இந்தக் காட்சிக்கு மொத்த தியேட்டரே கைதட்டியது. இதுபோல இன்னும் சில காட்சிகள் புதுமையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. முடிந்தவரை ஒருமுறை பார்த்துவிடுங்கள் என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது. 

ஜோதிகாவிடம் ஒரு கேள்வி: 

1. உங்கள் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியிலா?

சமூக விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் படம் எடுத்தால் மட்டும் போதுமா? எப்போது பின்பற்றுவது? 

பாட்டில்கேப் சேலஞ்ச் போல எதேதோ சேலஞ்ச்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிறது. அது போல அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கும் சேலஞ்சை எந்த நடிகராவது தொடங்கி வைப்பாரா? 

Related Articles

மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப... (ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...
24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! R... கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது....
சரியான நேரத்தில் சம்பளம் தராதவர்களை என்ன... ஏழாவது சம்பள கமிஷன் என்று ஏதாதோ சொல்கிறார்கள்.  இந்த மாதிரியான திட்டத்தை கொண்டு வருபவர்களும் தெளிவாக இருப்பதில்லை, மக்களுக்கும் தெளிவாக புரிய வைப்பதில...
நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்... பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். அப்போது ஹாஸ்பிட்டலுக்கு தனுஷின் அப்பாவைப் பார்க்க வரும் செல்வாவிடம், "நான் சப்பைதான... ...

Be the first to comment on "ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? – ராட்சசி விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*