ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார் எண்களுக்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்களை பயன்படுத்தலாம்!

aahaar

தனிநபர் ரகசியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அடிப்படை உரிமை. இந்திய குடிமகன் ஒவ்வொவருக்கும் ஆதார் கட்டாயம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் இது குறித்து மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்பி வந்தது.

ஒவ்வொரு தனிநபரின் முகவரி, செல்போன் எண், கண்விழித்திரை, கைரேகைகள் உள்ளிட்ட தனிநபர் இரகசியங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டு இவை மற்றவர்கள் யாருக்கும் தெரியாவண்ணம் முறையாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்திருந்தது மத்திய அரசு. ஆனாலும் இந்த திட்டத்தினால் தனிமனித இரகசியங்கள் கசிவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கசிவதற்கு வாய்ப்பே இல்லை என்று இன்னொரு தரப்பு கருத்து கூறி வந்தது. இதனையடுத்து பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் UIDAI ன் முன்னாள் தலைவர் நந்தன் நீலகேணி ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வேண்டுமென்றே பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இந்த குழப்பத்தை தவிர்க்க விர்ச்சுவல் ஐடியை உபயோகிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

விர்ச்சுவல் ஐடி எதற்காக?

செல்போன் எண்ணிலிருந்து வங்கிக்கணக்கு வரை அனைத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தும் மத்திய அரசு, மக்களின் அடிப்படை தகவல்களை பாதுகாக்க வழிவகை செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வந்ததையடுத்து தற்போது தனிமனித ரகசியங்கள் வெளியாகாத வண்ணம் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் [UIDAI] புதிய மெய்நிகர் அடையாளத்தை [Virtual ID] அறிமுகம் செய்துள்ளது.

16 இலக்க தற்காலிக எண்களை பெறுவது எப்படி?

இந்த பதினாறு இலக்க தற்காலிக எண்கள் தான் தற்போறு பயன்பாட்டில் இருக்கும் பண்ணிரெண்டு இலக்க ஆதார் எண்களுக்கு மாற்றாக உபயோகப்படுத்த வேண்டும். ஆதார் பயனாளிகள் தங்களது இந்த பதினாறு இலக்க தற்காலிக எண்களை ஆதார் இணையதளம்[uidai.gov.in] அல்லது ஆதார் செல்போன் செயலி அல்லது eசேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆதார் எண்களுக்கு மாற்றாக இந்த பதினாறு எண்களை உபயோகிக்கலாம்.

இந்த பதினாறு எண்களும் தற்காலிகமானவை மட்டுமே. இந்த தற்காலிக எண்கள் குறைவான தகவல்களை மட்டுமே பெற்றிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த எண்களை உபயோகிக்க முடியும் என்றாலும் தேவை ஏற்படும்போது எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தற்காலிக எண்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆகவே மொபைல் சிம்கார்டு மற்றும் இதர பிற இடங்களில் ஆதார் எண்ணிற்கு பதிலாக இந்த எண்களை குறைவான தகவல்களை மட்டுமே வழங்கும் இந்த தற்காலிக எண்களை எந்த வித அச்சமுமின்றி பயன்படுத்தலாம்.

Related Articles

பொறாந்தோமா நல்லதுக்காக நாலு பேர பொளந்தமா... பாசமான ஒரு நபரை இழத்தலும் அதற்கு வில்லனை சண்டியர் நாயகன் பழிவாங்குதலும் என்பதுதான் முத்தையா படங்களின் மையக்கதை.  தாய்ப்பாசம், மாமனார் பாசம், பாட்டி பா...
மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...
காதலர் தினத்தில் இந்தப் புத்தகத்தை பரிசள... கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக முக்கியமான கவிதை தொகுப்பு தான் "தண்ணீர் தேசம்". இந்தப் புத்தகத்தை மிக அழகான காதல் காவியம் என்று கூட சொல்லலாம். கலைவண...
இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...

Be the first to comment on "ஆதார் ரகசியங்களை பாதுகாக்க 12 இலக்க ஆதார் எண்களுக்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்களை பயன்படுத்தலாம்!"

Leave a comment

Your email address will not be published.


*