இயக்குனர் ராம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன? கற்றது தமிழ் ஏன் தமிழின் மிக முக்கியமான படம்?

Why Kattradhu Thamizh is an important movie in Tamil

வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இயக்குனர் ராமை தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கொண்டாடி வருகிறது. அவருடைய கற்றது தமிழ் திரைப்படம் என்றென்றும் கொண்டாடக்கூடிய படைப்பாக உள்ளது. குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் வரும் உரையாடல்கள் சிறப்பாக இருந்ததே அந்தப் படத்தை கொண்டாடுவதற்கான காரணம். அந்த உரையாடல்களை பார்ப்போம். 

 1. சாகறதுக்கு முன்னாடி லெட்டர் எழுதுறது ஒரு சடங்கு… லெட்டர் எழுதுனா போஸ்ட் பண்ணனும்னு அவசியமா என்ன? லெட்டர் எழுதுறதுக்கு ஒரு பேரு வேணும்… 
 2. தமிழ்நாட்ல தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்… 
 3. மயிர் கெட்ட வார்த்தை இல்லப்பா… தூய தமிழ் வார்த்தை…
 4. பேரென்ன… – பிரபாகர் சார் – பேரே வில்லங்கம்மா இருக்கேயா… 
 5. தமிழ் வாத்தியார்னா இங்கிலீஷ்கார துர மாதிரி நடு ரோட்ல நின்னு சிகரெட்ல பக்கு பக்கு பக்குனு புகைவிட்ட… தமிழ் வாத்தியார்னு தெரியுதுல்ல செவத்தோரம் போய் பீடி எடுத்துக் குடிக்க வேண்டியதான… 
 6. என்னடா முறைக்கற – பார்வையே அப்டித்தான் சார்… 
 7. தமிழ்நாட்ல தமிழ் படிச்சவன் சாக காரணமா தேவ… 
 8. இந்த உலகமே என்ன மயிரு மாதிரி ஆக்குச்சு… ஆனா அந்த ஒரு துளி ரத்தம் என்ன கடவுளாக்குச்சு… 
 9. அக்னி ஞானத்தின் அடையாளம்… புத்தி இருக்கறவன்னால தான் புகைவிட முடியும்… 
 10. கேர்ள்ஸ்க்கு பூனை பிரெண்டா இருக்கற மாதிரி… பாய்ஸ்க்கு புலி பிரெண்டா இருக்க கூடாதா… 
 11. பொதுவா நம்ம வாழ்க்கைல சந்தோசமா இருக்க கூடிய தருணங்கள் நம்ம கவனிக்காமலயே கடந்து போயிடும்… 
 12. நாய் வளத்துருந்திங்கன்னா உங்களுக்குத் தெரியும் நாயோட சாவு எவ்வளவு பாதிப்ப உண்டாக்குமுனு… ஒரு கைக்குழந்தையோட சாவு மாதிரி…
 13. எங்க ஊர்க்காரங்களுக்கு என்னை நான் அறிமுகப்படுத்திக்கனும்னா எங்கம்மாவோட துர்மரணத்த சொன்னா தான்  தெரியும்… எனக்கு எங்க அம்மாவோட சாவு தான் விசிட்டிங் கார்டு… 
 14. லவ் பண்ணா பொண்ணு கிடைக்கும்… பொருள் கிடைக்காது சார்…  பத்து சவரன் செயின் கிடைச்சுது… டூயூவுல பைக் கிடைச்சுது… அபார்ட்மென்ட் வீடு கிடைச்சுது… வீட்ல இருக்கற சட்டி முட்டி சாமான் வரைக்கும் ஏன் நான் போட்ருக்கற ஜாக்கி ஜட்டி வரைக்கும் கிடைச்சுது… 
 15. சூடான காபிய குடிங்க… சூடான டீய குடிங்க… நாக்கு பொத்துக்குச்சுனா உன்ன நினைக்குறவங்கள நினைச்சுக்குங்க…
 16. 1100 மார்க்கு வாங்குனா தமிழ் படிக்க கூடாதுனு எதாவது சட்டம் இருக்கா… ஒரு நல்லா படிக்கற பையன் தமிழ் படிக்க வந்தா ஏன்டா தமிழ் படிக்க வந்தின்னு தமிழ் ஹச் ஓ டியே கேக்கற அளவுல தான் அன்னைக்கு தமிழ் டிபார்ட்மென்ட் இருந்துச்சு…
 17. யாருக்கெல்லாம் அதிக லட்டர் வந்திருக்கோ அவங்களாம் ரொம்ப லக்கி…
 18. 18. “2000 கி மீ டிராவல் பண்ணி ரெண்டு நைட்டு தூங்காம பாஷை தெரியாத ஊருல கண்டுபிடிக்கவே முடியாதுனு நினைச்ச அந்த பொண்ண கண்டுபிடிச்சதுக்கப்புறம் எப்படிடா வந்தன்னு கேட்டா உங்களுக்கு எப்படி சார் இருக்கும்…”

“சப்புனு ஒரு அறை அறையலாம் போல இருக்கும் சார்… ரியலா லவ் பண்றவன டீல்ல விட்டுட்டு ஊர் மேயுறவனுக்காக உயிர விடுறேனும்பாளுங்க… இந்த பொண்ணுங்க பொறப்பே இப்படித்தான்…”

 1. “யாராவது தூர தேசத்துல இருந்து உங்க வீட்டுக்கு வந்து வந்தவுடனே கிளம்பறேன்னு சொன்னா… என்ன சார் சொல்விங்க…”

“வேண்டாத விருந்தாளி வந்தா கூட ஒரு பேச்சுக்காவது ரெண்டு நாளு இருந்துட்டு போங்கன்னு சொல்வேன் சார்…”

“ஆனா என் ஆனந்தி எதுவுமே சொல்லாமே சரி போனு சொன்னா சார்…”

 1. கைல காசு இல்லாம காதலிக்குறது ரொம்ப கொடுமை… 
 2. இந்த பொய்ங்கற விஷியம் மட்டும் இல்லனா இந்த உலகத்துல அழகு அபூர்வங்கற விஷயங்கள் இல்லாமலே போயிருக்கும்… 
 3. எங்க ஊர்ல பிளாஸ்டிக் பூ வச்ச பிள்ளைங்கல ஜாரினு கூப்டுவாங்க… சென்னைல ரூட்டு… உங்க தமிழ்ல அழகா சொல்லனும்னா பரத்தை… 
 4. Touch me here if you dare இதவே தமிழ்ல எழுதுன டீசர்ட்ட போட்டுக்கிட்டு ஒரு பொண்ணுனால வெளிய போக முடியுமா… 
 5. Use and throw கப் வச்சுக்குட்டு கல்யாணத்த பத்தி பேசுற… 
 6. கார்ல வந்தா பெரிய பருப்பாடா நீ… காருல வந்தா எவன் மேல வேணா சேரு அடிப்பியாடா நீ… கார்ல வந்தா பிளாட்பார்ம்ல உக்கார மாட்டியா… 
 7. நாப்பதாயிரம் கொடுத்தா உன் பேர மாத்துற நீ… நாலு லட்சம் கொடுத்தா அம்மாவ மாத்திடுவ நீயா… 
 8. நாப்பதாயிரம் ரூபா சம்பளம் கொடுத்தா அமெரிக்ன் இங்கிலீஷ் பேசுற… 25 வருசமா இங்கயே பிறந்து வளந்த உனக்கு பாரதி பாட்டு தெரில… ரெண்டாயிரத்து வருசம் தமிழ் படிச்ச எனக்கு ரெண்டாயிரம் ரூபா தான் சம்பளம்… 25 வருசத்துக்கு முன்ன வந்த இந்தப் பொட்டில்ல பொட்டி… அதாவது கம்ப்யூட்டர் படிச்சவனுக்கு 2 லட்சம் ரூபா சம்பளம்… 
 9. கதைக்கு தான் இந்த காரணம் லொட்டு லொசுக்கு எல்லாம்… நிஜ வாழ்க்கைக்கு காரணமும் கிடையாது… தர்க்கமும் கிடையாது… There are no logic and reasons for real life!
 10. தெய்வமா பாத்த பொண்ண தேவுடியாளா பாத்தா எப்படி சார் இருக்கும்…
 11. 4000 ரூபாய் கொடுத்தா ஒரு பொண்ண என்ன வேணா செய்வியா… உனக்கு இருக்கற அதே ரத்தம் தான அவளுக்கும் இருக்கு… அதே சதை தான அவளுக்கும் இருக்கு… 
 12. பணம் இல்லாத நேரத்துல ரோட்ல போறவன் வுட்லேண்ட் ஷூ போட்டான்… ரேமண்ட் கிளாஸ் போட்டா அழகான பிகர தள்ளிட்டு போனா கடுப்பா தான் இருக்கும்… 
 13. பத்து வருசத்துக்கு முன்னாடி குறைந்தபட்ச சம்பளம் 2000 ரூபாய்… அதிகபட்ச சம்பளம் 20000 ரூபாய் இருக்கும்… ஆனா இப்போ குறைந்த பட்ச சம்பளம் அதே 2000 ரூபாய் தான்… ஆனா அதிகபட்ச சம்பளம் 2, 3 னு லட்சத்துல போயிட்டு இருக்கு… இந்த ஊரு ரெண்டு லட்ச ரூபாய் வாங்கறவனுக்கு ஏத்த மாதிரி மாறிட்டு இருக்கு சார்… இந்த ஊர்ல இருக்கறவன் மொத்தம் ரெண்டே பேருதான்… ஒருத்தன் ஸ்பென்சர் பிளாசாவுக்கு உள்ள இருக்கறவன் இன்னொருத்தன் ஸ்பென்சர் பிளாசாவுக்கு வெளில இருக்கறவன்… சத்யம் தியேட்டருக்கு உள்ள இருக்கறவன் சத்யம் தியேட்டருக்கு வெளிய இருக்கறவன்… ஏடிஎம் சென்டருக்கு உள்ள இருக்கறவன் இன்னொருத்தன் ஏடிஎம் சென்டருக்கு வெளிய இருக்கறவன்… சார் கிரெடிட் கார்டு வாங்கிட்டிங்களா சார் டெபிட் கார்டு வாங்கிட்டிங்களா சார்… ஹோம் லோன் வாங்கிட்டிங்களா சார் அத தூக்கி இதுல போட்டிங்களா சார் இத தூக்கி அதுல போட்டிங்களா சார்… சார் சார் சார்னு… 
 14. தமிழ் படிச்சவன் கூட பரவால எதோ ரெண்டு குரல சொல்லி வாத்தியார் வேல வாங்கி பொழச்சுப்பேன்… ஆனா இந்த ஹிஸ்ட்ரி படிச்சவனுங்க ஜியாகிராபி படிச்சவனுங்க சோஷியாலஜி சைக்காலஜி பொலிடிக்கல் சயின்ஸ் படிச்சவனுங்க எகானமிக்ஸ் படிச்சவனுங்க செத்தானுங்க… பாவம் வாத்தியார் வேல கூட கிடைக்காதா… 
 15. இந்த வாழ்க்கை வசதி சந்தோசம் இதெல்லாம் இந்த எம்பிஏ படிக்கறவன் எம்சிஏ படிக்கறவன் அண்ணா யுனிவர்சிட்டில இன்ஜினியரிங் படிச்சவன்… டாக்டருக்கு படிச்சவன் இதெல்லாம் இவங்களுக்கு மட்டும் தானா சார்… எங்களுக்கு கிடையாதா சார்… நான் 2000 ரூபாய் பத்தலனு சொல்லல சார்… பசி கொடும பட்டினினு சொல்லல சார்… பிச்ச கேட்கல சார்… ஆனா இந்த பணம் வாங்கறவங்க பண்ற அலப்பறை இருக்குல்ல சார், தாங்க முடியல சார்… 2 லட்ச 3 லட்ச ரூபாய் வாங்குறானுங்க கார வாங்குறாங்க வீட வாங்குறானுங்க ரேபண்ட் கிளாஸ போடுறானுங்க ஷூ போடுறானுங்க சென்ட்ட போடுறானுங்க… டிஸ்டர்ப் ஆகுமா ஆகாதா… Touch me here if u dare, dont look at a my face, unbuttun me here அப்டினு பொண்ணுங்க எழுதிட்டு வந்தா அதுவும் மார்புல எழுதிட்டு வந்தா பாவமா ரோட்டுல போற நம்ம பசங்களுக்கு தொடனும்னு தோணுமா தோணாதா சார்… 
 16. தமிழ் படிச்சவன்லா எதோ சாதுவானவன் அப்பிராணி அப்டிலாம் நினைச்சிராதிங்க… சும்மா தாடி வச்சுக்கிட்டு சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கிட்டு ஜோல்னா பை மாட்டிக்கிட்டு கவிதை சொல்வானு டொக்கை மாதிரிலாம் நினைச்சிராதிங்க… தமிழ் ஒருவனை சாந்தப் படுத்துவது மட்டுமல்ல ரௌத்திரமும் கற்றுக்கொடுக்கும்… 

   இப்படிப்பட்ட உரையாடல்களை எழுதிய ஒரு படைப்பாளரை ஒரு படைப்பை       தமிழ் சினிமா கொண்டாடவில்லை என்றால் தான் ஆச்சர்யம். 

 

Related Articles

எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய அன்பும... * தள்ளாடி மேலெழும் தலைமுறை,* எங்கே தொலையக் கொடுத்தோம்?,* கூட்டாஞ் சோற்றுக் கணக்கு,* வியாபார மந்திரம்,* கூண்டுப் புறாக்கள்,* அ...
மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேய... கதாபாத்திரங்கள் : ஆனந்த் - வன அலுவலரின் நண்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானை டாக்டர், மாரிமுத்து - உதவியாள், செல்வா - வளர்ப்பு யானை,...
கோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் ப... நீயா நானா புகழ் கோபிநாத் மண்டபத்ரம், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்...

Be the first to comment on "இயக்குனர் ராம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன? கற்றது தமிழ் ஏன் தமிழின் மிக முக்கியமான படம்?"

Leave a comment

Your email address will not be published.


*