இனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க
வேண்டுமென்றாலும் அதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமா என்று கேள்வி
எழுப்பியிருந்தார். இவருடைய கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய சுகாதார துறை
மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப்பூர்வமாகப் பதில்
அளித்துள்ளார்.
” வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு தேசிய தகுதிகாண் நுழைவுத்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்திய
மருத்துவ குழுவானது மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் முன் அனுமதியுடன் தேர்வு
ஒழுங்கு முறைகள் 2002 ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வெளிநாட்டு
மருத்துவ கல்வி நிறுவனங்களில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்க்கை மேற்கொள்வதற்கான
தகுதித் தேவை ஒழுங்கு முறை விதிகள் 2002 ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ” என்று அந்த
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு?
கடந்த மார்ச் 12 ம் தேதியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துள்ளது. ஆனால்
தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட வேண்டிய இலவச நீட் தேர்வு பயிற்சி மையங்கள்
இன்னும் பல இடங்களில் தொடங்கப்படாமலே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்!"