கனாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம். சேட்டையன் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பிளாக்சீப் குழுவினர் நடிப்பில் உருவான படம். இப்படி நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.
நாயகனும் நாயகனின் நண்பனும் சேர்ந்து யூடூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார் சுட்டி அரவிந்த். மால் ஒன்றில் பிராங் சோ ஒன்றை நடத்துகிறார்கள் நாயகனும் நண்பனும். அப்போது பெரிய மனிதனின் நட்பு கிடைக்கிறது. அவர் மூன்று டாஸ்க் கொடுக்கிறார். மூன்று டாஸ்க்கையும் செய்து முடித்தால் பல கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று உறுதியளிக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கையும் நாயகனும் நாயகனின் நண்பனும் செய்து முடித்தார்களா பணத்தை வாங்கினார்களா என்பது மீதிக்கதை.
படத்தின் முதல் ஷாட்டிலயே இதுதான் கதையின் கரு என்று கூறிவிட்டார்கள். அதை தொடர்ந்து வந்த காட்சிகளில் பெரும்பாலான காட்சிகள் அபத்தமானவையே. காமெடி என்று எதைஎதையோ பேசுகிறார்கள். எதற்கும் சிரிப்பு வரவில்லை. அரசியல் வசனங்கள் பேசுகிறார்கள். ஆனால் அதுவும் எடுபடவில்லை. கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கிறது. மற்றவை எல்லாம் உச் கொட்ட வைக்கிறது.
இசையமைப்பாளர் சபீரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். கிளைமேக்ஸ் காட்சியில் தான் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நிரூபிக்கிறார். ஒளிப்பதிவு ஓகே ரகம். கிளைமேக்ஸ் காட்சியை போலவே மற்ற காட்சிகளையும் உயிரோட்டத்துடன் எடுத்திருந்தால் படம் வேற லெவல் என கூறியிருக்கலாம். படத்தின் ஒரே பலம் விவேக் பிரசன்னா. அவர் வந்த பிறகு தான் படம் படமாகவே தெரிகிறது. நாயகியும் யூடுப் பிரபலங்களும் ஓவர் ஆக்டிங் செய்துள்ளனர். குறிப்பாக அயாசின் நடிப்பு குழந்தை தனமாக இருந்தது. லாஜிக் மிஸ்டேக்குகள் ஏராளம். எழுதம்போது இவற்றை எல்லாம் நீக்கிஇருக்க வேண்டும். கமர்சியல் படமென்றால் இதெல்லாம் இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டு சில காட்சிகளை வைத்துள்ளார்கள். ஆனால் அவையெல்லாம் சுமாரான காட்சிகளாகவே உள்ளது.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சுமார்!
Be the first to comment on "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா! – விமர்சனம்"