அஜித் என்ட்ரி ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அஜித் திரையில் வரும்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது.
கை நடுங்கிக்கொண்டே காபி குடிக்கும் ஹவுஸ் ஓனரை பார்த்ததும் தியேட்டரில் சிரிப்பலை. ஆனால் அடுத்தடுத்து வந்த ஹவுஸ் ஓனர் காட்சிகளில் நோ சிரிப்பு… மூன்று பெண்களில் ஒருவரின் காதலனாக திரை விமர்சகர் கிஸன் தாஸ் வருகிறார்.அவருக்கு இந்தப் படம் நல்ல அறிமுகம். அதேபோல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிக்பாஸ் அபிராமிக்கும் ரங்கராஜ் பாண்டேவுக்கும் இந்தப் படம் நல்ல அறிமுகம்.
போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று வழக்கு புகார் பண்ண போக பா. கந்தசாமி என்ற போலீஸ் வலைப்பேச்சு ஆர். எஸ் அந்தணன் போல திமிராகப் பேசுகிறார். கேஸ்செக்சன்கள் பற்றியும் அதன் விளக்கங்கள் பற்றியும் கீழே சப்டைட்டில் போட்டது செம, நல்ல முன்னுதாரணம்! பரத் சுப்ரமணியமா… அவனே செத்தவன் கைல வெத்தல பாக்கு கொடுத்தவன் போல இருக்கான் என்று அஜீத்தைப் பற்றி சொன்னதும் தியேட்டரில் ஏய் ஊய் என்று மிரட்டல் ஒலிகள் ஒலிக்கிறது. இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சி செம மிரட்டலாக இருக்கு என்று பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு இல்லை வழக்கமான சண்டைக் காட்சிகள் போலத் தான் உள்ளது என்பது தான் உண்மை.
” என்ன பயமுறுத்தனும்னு நினைச்சவன பயமுறுத்தி தான் எனக்கு பழக்கம்… “, ” என் முகத்துல பயம் தெரியுதா… “, ” நீங்க யாருன்னு அவருக்கு தெரியாம இருக்கறது உங்களுக்கு நல்லது… “, ” சிரிச்சு பேசறதும் தொட்டு பேசறதும் மனுசங்க இயல்பா பண்றது… பொண்ணுங்க அத கூட பண்ணக் கூடாதா… “, ” ஒரு பொண்ணோட கேரக்டர கடிகார முள் தான் தீர்மானிக்குதா… “, ” பொண்ணு குடிச்சா கேரக்டர் சரியில்ல… பசங்க குடிச்சா வெறும் உடல்நலத்துக்கு தீங்கானது… “, ” ஆம்பளைங்க ஒயின்ஷாப்புல குடிக்கறதுக்கும் பெண்கள் அத மூட சொல்லி போராடறதுக்கும் படைக்கப்பட்டிருக்கிறார்களா… “, ” நோங்கறது ஒரு வார்த்தை இல்ல… அது ஒரு முழுவரி… “, ” மாடர்ன் பொண்ணுங்களும் குடும்ப பொண்ணு தான்… ” ” நோ மீன்ஸ் நோ… ” போன்ற வசனங்கள் கைதட்டலை பெறுகின்றன. இறுக்கமான முகத்துடனே இருக்கும் அஜித்தின் முகம் பிளாஸ்பேக்கில் மட்டுமே மலர்கிறது.
இடைவேளைக்கு முந்தைய சண்டைகாட்சியில் உள்ள பின்னணி இசை மட்டுமே அருமையாக உள்ளது. மற்றபடி பின்னணி இசையும் பாடல்களும் ரொம்பவே சுமார். யுவன் சங்கர் ராஜா எப்போதும் அஜித் படமென்றால் நன்றாக வாசிப்பார். ஆனால் இந்த முறை சொதப்பி விட்டார் என்றே கூற வேண்டும்.
வழக்கறிஞர் பரத் சுப்ரமணியத்தின் பட்டுவாக வருகிறார் வித்யா பாலன். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கவர்கிறார். ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் எரிச்சலை தருகிறது. சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். அந்த அளவுக்கு அவர் அந்த கதாபாத்திரத்தை நன்றாக நடித்துள்ளார்.
பி & சி ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியுமா என்பது சந்தேகமே. ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!
Be the first to comment on "பெண்களின் பேராதரவுடன் நேர்கொண்ட பார்வை! – விமர்சனம்!"