பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – பயில்வான் திரைவிமர்சனம்!

Pailwaan Movie Review

சிறுவன் ஒருவன் தெருவில் சண்டை போட்டு ஜெயிப்பதை பார்த்த சர்கார் என்பவர் அவனை தன்னுடன் வைத்து வளர்த்து குஸ்தி கத்துக் கொடுத்து நேஷனல் சாம்பியன் ஆக வேண்டும் என்பதற்காக போராடுகிறார். அவருடைய போராட்டம் வென்றதா இல்லையா ? இதற்கிடையில் நாயகனுக்கு காதல் வர காதலிலும் ஜெயித்து குஸ்தியிலும் நாயகன் ஜெயிக்கறாரா ? என்பதே கதை. இந்தக் கதையே போதுமானது நல்ல படமாக எடுக்க. ஆனால் இவர்கள் கமர்சியல் என்ற பெயரில் படத்தை நாசம் செய்து வைத்திருக்கிறார்கள். நான் ஈ படத்தில் நடித்தவரின் படமா இது? பயில்வான் படத்தை பார்த்தால் கிச்சா மீது இருக்கற மரியாதையே போய்விடும். 

தமிழ் டப்பிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதிலும் குறிப்பாக காமெடியனின் வசன உச்சரிப்பு இருக்கே… இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது இது தேறாது என்று.  நாயகியின் எண்ட்ரியும் மொக்கை. கிச்சாவின் எண்ட்ரியும் அவ்வளவு மாசாக இல்லை. பைட் சீன்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வொர்க் படுமோசம். அதிலும் ஏகப்பட்ட தேவையில்லாத ஸ்லோமோசன் காட்சிகள் எரிச்சலை தருகின்றன. அறிமுகப் பாடலில் உள்ள நடனக் காட்சிகள் சிரிப்பை வரவைக்கின்றன. ரொமான்ஸ் காட்சிகள் உச் கொட்ட வைக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பு பிரிவில் மூன்று பேர் வேலை செய்திருந்தும் படம் இத்தனை சொதப்பல். 

மாஸ் என்ற பெயரில் சண்டைக்காட்சியிலும் நடனக் காட்சியிலும் கோமாளித் தனம் செய்து வைத்திருக்கிறார்கள். கொட்டும் மழையில் மூன்று நபர்களுடன் சிறுவன் போடும் சண்டைக்காட்சி மட்டும் ஓரளவுக்கு ஓகே ரகம். மற்ற சண்டைக்காட்சிகள் கடுப்பேற்றுகின்றன. பின்னணி இசையும் பாடல்களும் படுமொக்கை. காட்சிகளுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பின்னணி இசையை தந்துள்ளார் இசையமைப்பாளர். கண்ணூமணியே கண்டபடியே கட்டிப்புடியே என்ற பாடல் காட்டு மொக்கை. கமர்சியல் சினிமாக்களில் வரும் வழக்கமான ஹீரோயின் வழக்கம் போல லூசாக இருக்கிறது. அதிலும் பணத்தை நூலில் கட்டி கோயில் மணி அடிக்கும் சீன் படுமொக்கை. ராணா என்ற வில்லனை பார்த்தால் மிஸ்டர் பீனுக்கு மீசை வைத்தது போல் உள்ளது. லுக்கும் மிரட்டலாக இல்லை, நடிப்பும் மிரட்டலாக இல்லை. இடைவேளை காட்சியில் நடக்கும் குஸ்தி போட்டிக்கு நாயகன் புகைக்குள் இருந்தபடி நடந்து வருகிறார். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள், ” வர்றதே லேட்டு… இதுல ஸ்லோமோசன் வேற… ” என்று கத்துகிறார்கள். எத்தனை ஸ்லோமோசன் காட்சிகள்! உஸ்ப்பா! இடைவேளையை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள். வில்லன் டோனியாக நடித்தவர் ஓரளவுக்கு நன்றாகவே நடித்துள்ளார். படம் பார்க்கும் போது இடை இடையே மான்கராத்தே, வல்லினம், பூலோகம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கராத்தே கிட் போன்ற படங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றன. கிளைமேக்சில் வரும் குத்துச் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஓரளவுக்கு கவனத்தைப் பெறுகின்றன. படம் முழுவதையும் இதே போன்று எடுத்திருந்தால் ஓரளவுக்கு நல்ல படம் என்று சொல்லி இருக்கலாம். கிளைமேக்ஸ் காட்சிக்காக கிச்சா சுதிப் நிறைய உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. அதே போல கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் கிச்சாவுக்குப் போட்டிருக்கும் மேக்கப் அருமை. டைரக்டர் கிச்சா சுதிப்பை ஏமாற்றி இருக்கிறார். கிச்சாவை தொடர்ந்து சர்க்காராக நடித்தவர் ஓரளவுக்கு நன்றாக நடித்துள்ளார். இது வேற்றுமொழி படம் என தெரிந்தும் மொக்கை தியேட்டரில் கூட கூட்டம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. நான் ஈ படம் ஏற்படுத்திய தாக்கம் அது. சுதீப் இனி கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.  

” மனுசனுக்கு மனுசன் துணையா இருக்கற வரைக்கும் யாரும் அனாதை இல்லப்பா… ” , ” பலத்த வச்சு போரிடுறவன் ரௌடி ஆவான்… ஆனா பலமான காரணத்துக்கு போரிடுறவன் வீரன் ஆவான்… அவன் வீரன்… “, ” நீ என் மகன் மாதிரி இல்ல… மகன் தான்… ” , ” ஒரு வைரத்த கட் பண்ணனும்னா அது இன்னொரு வைரத்தால தான் முடியும்… ” , ” ராஜாவா இருந்தாலும் மந்திரியா இருந்தாலும் சட்டம் எல்லோர்க்கும் ஒன்னு தான்… ” , ” ஆட்சி யாருதா வேணா இருக்கலாம்… ஆனா ராஜ நான் தான்… ” , ” மௌனமா இருக்கறது பயம் கிடையாது, மரியாதை! ” , ” பணம் பெருசு இல்ல… மனுசன் தான் பெருசு… ” , ” தப்பு பண்ணக் கூடாதுன்னு சொன்னேன்… தப்பு பண்றவன விட்டு வைன்னு சொல்லல… “, ” கடவுள் எல்லாருக்கும் கனவ கொடுத்துருக்கான்… அதே மாதிரி பசியையும் தரான்… “, ” நான் தோல்விய மட்டும் சீக்கிரம ஒத்துக்க மாட்டேன்… ”  போன்ற வசனங்கள் ஓகே ரகம். 

முதல் பாதி படுமொக்கை என்றால் இரண்டாம் பாதியில் ஒன்றிரண்டு காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் மொக்கையோ மொக்கை. அரத பழசான கதை, பல ஆண்டுகளாக பார்த்து சலித்த காட்சிகள், சொதப்பலான திரைக்கதை என்று படம் பலவீனமாக உள்ளது.  போஸ்டரையும் ட்ரெய்லர் டீசர்களையும் பார்த்து கேஜிஎப் அளவுக்கு படம் இருக்கும் என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள்! ஜாக்கிரதை! பர்சு பத்திரம்! 

Related Articles

உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளை... முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாள...
சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்... இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜர...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?... இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய ச... திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் :தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தலம் ஆகும். திரு...

Be the first to comment on "பர்சு பத்திரம் பார்வையாளர்களே! – பயில்வான் திரைவிமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*