கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியாது – சதுரங்க வேட்டை வசனங்கள்!

Sathuranga Vettai dialogues
  1. இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல… அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்… உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாதிக்கனும்னு பேரசை உள்ள ஒருத்தர கண்டுபிடிக்கனும்…

 

  1. காட்ல மிருகங்களுக்கு பசி இல்லன்னா பக்கத்துலயே இரை போனாலும் வேட்டையாடுறது இல்ல… ஆனா இந்த மனுசங்க மட்டும் எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் இன்னும் வேணும் வேணும்னு சேத்துக்கிட்டே இருக்காங்க… யோசிச்சு பாத்தேன்… இருக்கறதலயே மோசமான மிருகம் இந்த மனுசங்க தான்…

 

  1. ஒரு அரசியல்வாதி மக்களோட சிந்தனையை ஜெயிச்சு தனக்கு தேவையானத சாதிக்குறான்… பணக்காரன் ஆகுறான்…

 

ஒரு முதலாளி தன் உழைப்ப பயன்படுத்தாம மத்தவங்க உழைப்ப பயன்படுத்தி அவனும் பெரிய பணக்காரன் ஆகுறான்…

 

ஒரு பெரு வியாபாரி இந்த ரெண்டு பேரையுமே உபயோகிச்சு தன்னோட தொழில்ல நஷ்டமடையாம எப்போதுமே பணக்காரனா இருக்கான்…

 

  1. கருணை காட்றது மேட்டர் இல்ல… அந்தக் கருணைய எப்படி காசாக்குறோம்ங்கறது தான் மேட்டர்…

 

  1. குற்ற உணர்ச்சி இல்லாம பண்ற எதுவுமே தப்பில்ல…

 

  1. காசில்லாதவன் உடம்ப வச்சு கத்துக்க… காசு இருக்குறவன் உடம்ப வச்சு சம்பாரி

 

  1. உன்ன ஏமாத்துனவன எதிரியா நினைக்காதடா… ஒரு வகைல அவன் உனக்கு குரு… ஏன்னா அவன் உனக்கு வாழறதுக்கு ஒரு தந்திரம் சொல்லிக்கொடுத்துருக்கறான்…

 

  1. நாம உழைச்சா பணக்காரன் ஆக முடியாது… மத்தவங்க உழைப்ப எடுத்துக்கிட்டா தான் பணக்காரன் ஆக முடியும்னு…

 

  1. பணம் இருந்தா என்ன வேணா பண்லாம்னா அந்த பணத்த சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணா பண்ணக்கூடாது… பணம் தான் என் மொழி… பணம் தான் என் ஜாதி…  பணம் தான் என் மதம்…

 

  1. நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போலாம்… கெட்டவனா வாழ்ந்தா வாழும்போதே சொர்க்கத்துல வாழலாம்…

 

  1. இந்த white & white போட்ட உடனே அடுத்தவன ஏமாத்துறதுக்கு தனி தைரியம் வந்துடுது…

 

  1. நாளைக்கு நம்மளால சம்பாதிக்க முடியுமோ முடியாதோனு பயப்படுறவன் தான் சார் சேத்து வைப்பான்…

 

  1. மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்…

 

  1. ஏழையா இருந்து நல்லனா இருக்கறதூக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு…

 

  1. கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியாது…

 

  1. எலக்சன்ல தமிழ்நாட்ட சிங்கப்பூரா மாத்திக் காமிக்குறேன்னு ஓட்டு கேட்டு ஜெயிக்கறாங்க… 5 வருசத்துக்கு அப்புறமும் தமிழ்நாடு தமிழ்நாடாவே தான் இருக்கு… அப்ப அவிங்க நம்மள ஏமாத்திட்டாங்க தான… அவிங்க நம்மள ஏமாத்திட்டாங்கன்னு அவிங்க மேல கேஸ் போட முடியுமா…

 

  1. ஏமாற்றது ஏமாத்தறது எல்லாம் இயற்கையானது…

 

  1. இயற்கையோட சமநிலை தவறும்போது நடக்கற அழிவு மாதிரி மனுசனோட சமநிலை தவறும்போதும் நடந்துருது…

 

  1. ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணை எதிர்பார்க்க கூடாது அவன்  ஆசைய தூண்டனும்…

 

  1. முதலாளின்னு ஒருத்தன் இருந்தா தான் தொழிலாளி இருக்க முடியும்னு நினைக்கறது முதலாளித்துவம்…

 

தொழிலாளின்னு ஒருத்தன் இருந்தா தான் முதலாளி இருக்க முடியும்னு நினைக்கறது கம்யூனிசம்…

Related Articles

96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது ... 96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ர...
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மொத்தம... சமீபத்தில் தான் 96, பரியேறும் பெருமாள், ராட்சசன் என்று அட்டகாசமான படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரே நாளில் வெளிவந்து பர்சை காலி செய்தன. தற்போது அதே போல ...
நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள்... நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இள...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...

Be the first to comment on "கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியாது – சதுரங்க வேட்டை வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*