இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost
of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை
வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது மட்டும் அல்லாமல் அதனை உடனடியாக அமலாக்கம்
செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வீட்டு கடன் திட்டங்கள் அனைத்தும் எம்சிஎல்ஆர் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு
இயங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி நிர்வாகம் எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் வீட்டு கடன்
பெற்றுள்ளவர்கள், புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் என அனைவருக்கும் மாத தவணை
தொகை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வைப்பு நிதிக்கான வட்டி
விகிதத்தை உயர்த்தியதால் மகிழ்ச்சி அடைந்தவர்கள் தற்போது இந்த அறிவிப்பால் அதிர்ச்சியும்
அடைந்துள்ளனர்.
ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதத்தை 7.95 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதம் வரையில்
உயர்த்தப்பட உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கி அமைப்பில் ஏப்ரல் 2016இல் புதிய கடன் சிஸ்டம் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு
முதல் முறையாக எஸ்பிஐ ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்கு ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும்
எம்சிஎல்ஆர் விதத்தில் 0.15 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
எச்டிஎப்சி வங்கியில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது SBI"