பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிரியான துன்புறுத்தல்களை அனுபவிக்கிறது? என்பதை பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும். இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரிவது இல்லை.
மெச்சூரிட்டி இல்லாத பெற்றோர்கள்:
பச்சபுள்ள தான இதுக்கு என்ன தெரியப் போவுது என்று ஏளனமாக ஒரு குழந்தையின் முன் பேசக்கூடாத வார்த்தைகளை விஷியங்களை பல் இளிக்க சத்தம் போட்டு பேசுகிறார்கள். அதை கேட்டும் கேட்காததுபோல் இருந்தாலும் குழந்தைகளுக்கு அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துவிடுகிறது. அதைப் பற்றி அந்த வயதிலயே யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதைப் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்று ஏராளமான குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை வெகுசகஜமாகப் பேசுகின்றன. காரணம் பெற்றோர்களே! பசங்க 2 படத்தில் வருவது போல் குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறது இல்ல கேட்ட வார்த்தய தான் பேசுறாங்க என்பது தான்
ஆகச்சிறந்த உண்மை !
பெயருக்குப் பிள்ளை பெற்ற பெற்றோர்கள்!
ஆணாகப் பிறந்தாச்சு, ஒரு பெண்ண கல்யாணம் பண்ணி புள்ளய பெத்துப் போட்றனும், பெண்ணாகப் பிறந்தாச்சு ஒரு பையன கல்யாணம் பண்ணி புள்ளய பெத்துப் போட்றனும் என்ற மனநிலையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது ஓகே தான். ஆனால் அவர்கள் குழந்தையை என்ன மனநிலையில் பெற்றுக்கொள்கிறார்கள்? எப்படியாவது ஒரு குழந்தையப் பெத்துப் போட்றனும்பா என்ற மனநிலையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். குழந்தை பெத்துப் போட்டாச்சு இனி நம்ம வேல அவ்வளவு தான், நாளைக்கு வளர்ந்து நம்மள கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு காச கொட்டி படிக்க வச்சிரனும், கேட்டதயெல்லாம் வாங்கி தந்திரனும் என்ற மனநிலையில் தான் பெற்றோர்கள் இருக்கிறார்கள். மற்றபடி அவன் மீது பாசமோ, அக்கறையோ செலுத்தாமல் தண்ணி தெளித்துவிடுவது போல் நடத்திவிட்டு உன்ன இவ்வளவு காசு செலவு பண்ணி படிக்க வச்சேன் நீ இவ்வளவு சம்பாதிச்சு தரனும் என்று வியாபார பொருளாக்கி விடுகிறார்கள் பெற்றோர்கள். இப்படிபட்ட பெற்றோர்களுக்காகவே ஒரு குறும்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் “மோதி விளையாடு பாப்பா” என்ற குறும்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது.
குட் டச் பேட் டச் பற்றி பாடம் எடுக்கிறார். அதற்கிடையில் அவர் கேட்ட கேள்வி குறிப்பிடத்தக்கது. “அக்கம்பக்கத்தினர் அம்மா அப்பாவின் நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் அம்மா அப்பா முன் எப்படி பழகுகிறார்கள்? அம்மா அப்பா இல்லாதபோது உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?” என்ற கேள்வி தான் அது. அம்மா அப்பா இருக்கும்போது செல்லம் புஜ்ஜி என்று கொஞ்சும் அக்கம்பக்கத்தினர் உறவினர் அம்மா அப்பா இல்லாதபோது உண்மையில் அதுபோல பழகுவதில்லை. மாறாக அம்மா அப்பா மீது இருக்கும் கோபத்தை பிள்ளைகள் மேல் காட்டுகிறார்கள். தலை தலையாக அடிப்பது, புட்டத்தை பிடித்து அமுத்தி என்னடா உங்கொப்பன மாதிரியே உனக்கும் பொச்சயே காணோம் என்று சீண்டுவது, அறுத்து காக்காய்க்கு போட்ருவேன் தெரிஞ்சுக்கு என்று ஆணுறுப்பை பிடித்து கசக்கி மிரட்டுவது, பெண் குழந்தையின் மார்பகத்தை பிடித்து அழுத்தி புள்ள பத்து வயசுக்குள்ளயே வயசக்கு வந்துடுவா போலயே என்று கிண்டல் செய்வது போன்ற கீழ்த்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய மனசாட்சிக்குத் தெரியும் நாம் செய்யும் செயல்கள் மனிதாபிமானமற்றவை என்று. ஆனால் இங்கு யார் மனசாட்சியின் குரலை கேட்கிறார்கள். மிருகமாகத் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறார்கள். இப்படிபட்ட கழுகுகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது, அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதை சொல்லிக்கொடுப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. குறிப்பாக பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பிரபலமாகத் துடிக்கும்க ழுசடைப் பெற்றோர்கள் “மோதி விளையாடு பாப்பா” போன்ற வீடியோக்களை பார்க்க வேண்டும். குட் டச் பேட் டச் பற்றி கற்றுத்தர வேண்டும். இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால் என்ன நடந்திடப் போவுது என்று அலட்சியம்
செய்பவர்கள் தயவு செய்து “நடுநிசி நாய்கள்” படத்தைப் பார்க்க வேண்டும்.
Be the first to comment on "குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்! – அப்பா அம்மா இருக்கும்போது எப்படி நடந்துக்கிறாங்க? இல்லாதபோது எப்படி நடந்துக்குறாங்க?"