தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! – இயக்குனர் வெற்றிமாறன்

Director-Vetrimaran

சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நல்ல வசூல் செய்தது. அதேபோல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் வச்சு செய்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் தமிழ்படம் 2.0 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தனர். காரணம் அந்த அளவுக்கு தமிழ்சினிமாவின் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்பது பலருடைய கருத்து.

சிந்தனை வறட்சி, படைப்பாளிகள் பஞ்சம், கலாச்சாரம் மறந்த சமூகம் என்று சினிமா என்ற தொழில் மழுங்கிப் போனதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்கள் பல காலமாக பலவிதமாகப் பேசப்பட்டாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன், மாணவர் ஒருவர் ” ஒரு வருசுத்துல 200 படத்துக்குப் பக்கமா வருது… ஆனா அதுல செலக்டடா பாஞ்சு படங்கள தான் பாக்க முடியுது… ” என்று சொல்ல,

” ஆமா… இனிமேல் இப்படித்தான் இருக்கும்… இப்ப எண்டர்டெயின்மென்ட் மீடியம் அதிகமாயிடுச்சு… பிக்பாஸ் மாதிரியான அடுத்த வீட்டுல என்ன நடக்குதுங்குற லைவ் புரோகிராம்ஸ் இப்ப வீட்டுலயே கிடைக்கும்போது எதுக்கு தியேட்டர் வரணும்… காலா மாதிரி பெரிய ஹீரோக்களோட படம் தான் ஓடும்… இன்னும் அஞ்சு வருசத்துல இதுதான் நிலம… என் அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்கிட்ட சீக்கிரமா படம் பண்ணுங்கன்னு சொல்றேன்… ” என்று அவர் பதில் பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரான வெற்றிமாறனே இப்படி கூறி இருப்பது தமிழ் சினிமாவில் பல கனவுகளோடு அடி எடுத்து வைக்க விரும்பும் புது படைப்பாளிகளுக்கு பயத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.

இன்றைய தமிழ்சினிமாவின் நிலைமை இதுதான்.

Related Articles

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போல்... கடந்த வெள்ளிக் கிழமை அன்று சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சாரா, வைபவி, யாசிகா ஆனந்த், சந்திரிகா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்த படம...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா ... பிறப்பு மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள கோங்பாலில் 1972- மார்ச் 14ல் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. அப்படி என்ன செய்தார்? கிளர்ச்சி மற்றும் நக்சல் போர...
யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாத... இன்றைய சூழலில்  இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் வேலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து தான் திரிகிறார்கள். சரியான வேலை கிடைப்...

Be the first to comment on "தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! – இயக்குனர் வெற்றிமாறன்"

Leave a comment

Your email address will not be published.


*