கோடை விடுமுறைக்கு சமுத்திரக்கனி படம் ரெடி. தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவ
மாணவிகளின் உயிரை காவு வாங்கும் காலம் அது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடுத்து
எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிக்கும் காலம் அது. சில
வருடங்களுக்கு முன்பு இதே கோடை காலத்தில் சமுத்திரக்கனியின் அப்பா படம் ரிலீசானது. அது
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படமாக அமைந்தது. அந்த வரிசையில் இப்போது ஆண்
தேவதை கோடையில் வெளியாக உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா ஜாம்பவான்களான இயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா இருவரையும் வைத்து ரெட்டச்சுழி என்ற படத்தை தந்த
இயக்குனர் தாமிராவின் இரண்டாவது படம் இது. இந்த முறை சமுத்திரக்கனி, விஜய் மில்டன்,
ஜிப்ரானுடன் கைகோர்த்திருக்கிறார்.
டிரெய்லர்
உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமி, ஏ ஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், விஜய்
ஆண்டனி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன்,
பா.ரஞ்சித் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைபிரபலங்களால் ஆண் தேவதை டிரெய்லர்
வெளியிடப்பட்டது.
வாழ்வதற்காக வேலை செய்கிறோமா, இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா என்று
தெரியாமல் வாழ்க்கையை நிதானமாக வாழ தெரியாமல் பிள்ளைகளுடன் நேரம் கழிக்க
தெரியாமல் இயற்கையை நேசிக்க மறந்து பணத்தை துரத்திச் செல்லும் சிக்கலான வாழ்க்கை
முறைக்குள் சிக்கித் தவிக்கும் பெற்றோர்களுக்கான படமாக உருவாகியுள்ளது என்பதை
டிரெய்லரில் வரும் வசனங்கள் தெளிவுறுத்துகிறது.
இதற்கு முன்னர் இதே கருத்தை மையமாக வைத்து அப்பா, பசங்க 2 போன்ற படங்கள் வந்தாலும்
சமூகம் அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டது என்பதை தனியார் பள்ளி வாசலில்
காத்துக்கிடக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையை பார்த்தால் புரியும். அவர்களுக்கு சாட்டை
வீச “ஆண்தேவதை” காலம் தாழ்த்தாது உரிய நேரத்தில் வந்தால் நன்மைகள் பல நடக்கலாம்.
Be the first to comment on "பத்து பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட “ஆண் தேவதை ” திரைப்பட டிரெய்லர்!"