இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் படம் தடம்.
தற்போது அந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரே பில்டிங்கில் வேலை செய்கிறார்கள் நாயகனும் நாயகியும். அதன் நிமித்தம் இருவரும் அடிக்கடி லிப்டில் சந்திக்க நேர்கிறது. நாயகியிடம் தன் மனதை பறிகொடுக்கிறார் நாயகன். அவரிடம் என்னுடன் ஒரு காபி குடிக்க நேரம் ஒதுக்குவீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கு நாயகியோ, உங்களோடு காபி குடிப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் கேள்வியை ஒழுங்கா கேளுங்கள் என்கிறார். நாயகனோ தினமும் கேள்வியை வெவ்வேறு வடிவில் கேட்கிறார். அத்தனை முறைக்கும் நாயகி நோ சொல்கிறார். கடைசி வரைக்கும் அதற்கான பதில் இல்லாமலே ஸ்னீக்பீக் முடிந்துள்ளது. அதையொட்டி அந்த கேள்வி என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்காகவே நான் படத்தைப் பார்ப்பேன் என்று கீழே கமெண்ட் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.
அந்தக் கேள்வி என்ன?
அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் யூகித்துள்ளனர். அவை இங்கே
* ஆங்கிலத்துல பேசாம தமிழ்ல கேள்வி கேட்கனுமோ…
* எனக்கு காபி பிடிக்காது… எனக்கு காபி பிடிக்கும்னு எப்படி நீங்களே டிசைட் பண்ணலாம்…
* என்னுடன் கொஞ்ச நேரம் மனம் விட்டு பேச வருகிறாயா…
இப்படி பலவிதமாக ரசிகர்கள் யூகித்துள்ளார்கள். வருகிற மார்ச் 1ம் தேதி திரைக்கு பல படங்கள் வர இருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற சுவாரஸ்யமான ஸ்னீக்பீக், டிரெய்லர் எதுவும் இல்லாததால் இப்படம் மட்டும் தனித்து தெரிகிறது.
என்னை அறிந்தால், குற்றம் 23, செக்க சிவந்த வானம் என்று படத்தை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்குமா? தடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து களம் இறங்கும் மகிழ் திருமேனிக்கு இது வெற்றிப் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Be the first to comment on "ரசிகர்களின் மனதை கவர்ந்த அருண்விஜய்யின் ” தடம் ” ஸ்னீக் பீக்!"