கோடை காலம் தொடங்கி மண்டபத்திரம் மக்களே என்று நம்மை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த சூழலை சமாளிக்க சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சிறு சிறு கடைகளான கம்பங் கூழ் கடை, நுங்கு, இளநீர், முலாம்பழம் ஜூஸ் விற்கும் கடை போன்றவைகளை பார்த்தால் கால்கள் தானாக அங்கு செல்கிறது. இவற்றில் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் பலன்களை இங்கு காண்போம். ( சூடு குறைஞ்சா போதும் ) என்று படிக்காமல் செல்லக் கூடாது.
முலாம் பழத்தின் வரலாறு :
முலாம்பழம் ஒரு வெப்ப மண்டல வகையைச் சார்ந்த பயிர் ஆகும். சுரைக்காய் கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளரும். அப்படி பார்த்தால் இந்திய அளவில் உத்திரப் பிரதேசம், ஆந்திரா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வளர்கிறது. உலக அளவில் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிறது. இத்தகைய பழம் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டு உள்ளது. இதன் வேறு மொழிப் பெயர்கள் சிலவற்றைக் காண்போம்.
தெலுங்கில் இதனை வேலி பந்து என்றும், பிரெஞ்சில் கடலாப் என்றும், கன்னடத்தில் கலிங்கடா என்றும், குஜராத்தில் டர்புச் என்றும், இந்தியில் குர்புக் என்றும், ஆங்கிலத்தில் மஸ்க் மெலான் என்றும் ஜெர்மனில் மெலோகோ திர்கே என்றும் அழைப்பர். தமிழில் கோசாப்பழம் என்றும், கக்கதிக்காய் என்றும் அழைக்கப் படுகிறது. இதன் தாவரவியல் பெயர் குக்குமிஸ் மெலா என்பதாகும்.
இது மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் காணப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி
மாதங்களில் விதைக்கப் பட்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலங்களில் அறுவடை செய்யப்
படுகிறது.
இதன் மருத்துவ பயன்களை பார்ப்போம்
பழச்சாறாக குடித்தால்
கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப் படுத்தும். வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க் கடுப்பு போன்றவை குறையும்.
விதைகளின் பலன்கள்
விதைகளை பொடித்து உண்ண வயிற்றுப் புழுக்கள் மாறும். இதன் விதைகளை அரைத்து நச்சுப் பூச்சிகள் கடித்த இடத்தில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும்.
Be the first to comment on "முலாம்பழம் ஜூஸ் குடிப்பதன் பலன்கள்!"