சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்?
‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே. இணையத்தில் சீதக்காதியின் வரலாற்றைத் துளாவினால் கிடைக்கும் மிக முக்கிய வரிகள் இவை.
இந்த வரிகளுக்கேற்பவே வறுமையில் வாடுபவருக்கு இறந்த பிறகு பணம் ஈட்டித் தருகிறார் அய்யா ஆதிமூலம். இது தான் படத்தின் மையக்கதை.
மரத்துக்கடியில் இருந்து, கீற்றுக் கொட்டகைக்கு மாறி, அங்கிருந்து சபாவிற்கு மாறி என்று படிப்படியாக கலைகள் அரங்கேறும் உருவம் மாறிக்கொண்டே வந்ததை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்கள். ஔரங்கசீப்பாக பத்து நிமிடத்துக்கும் மேலாக விஜய் சேதுபதி நடித்திருக்கும் காட்சி அற்புதம். அதே போல பாஞ்சாலியாக நடித்த மோகனா கதாபாத்தரமும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
இறுதி வரை நாடக கலைஞராகவே இருந்து வறுமையில் வாடி பணம் கிடைக்கிறது என்ற வசனத்தை கேட்டதுமே அய்யா ஆதிமூலம் மரணம் அடைகிறார். அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது ஒரு இளைஞன் மொபைலில் கேம் விளையாடும் காட்சி ஒரு கோபமான கவிதை போல தெரிந்தது. அந்த ஊர்வலத்தின் போது அர்ச்சனா தலையில் அடித்துக்கொண்டு அழும் காட்சி இயக்குனர் பாலு மகேந்திராவின் இறுதி ஊர்வலத்தை நினைவூட்டியது.
இதுவரை படம் அட்டகாசமாக இருந்தது! ஒரு தரமான படத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை தந்தது! அதையடுத்து வந்த காட்சிகள் தான் நம்மை பாடாய்ப் படுத்துகிறது. படம் காவியத் தலைவன் ரேஞ்சுக்கு தரமானதாக இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு தலையில் துண்டு விழுந்துள்ளது என்றுகூட சொல்லலாம். செத்தும் கொடுத்தார் சீதக்காதி இந்த வரிக்கேற்ப கதை நகர வேண்டும் என்பதற்காக படத்தைப் போட்டு இழுஇழுன்னு இழுத்து தள்ளியிருக்கிறார்கள்.
” ரமணா படத்துல வந்த ஒரு சீன நீங்க என்னடா முழுப்படமா எடுத்து வச்சிருக்கிங்க…” ” நினைச்சவன்லாம் நடிக்க முடியாது… இதுதானடா உங்க கான்செப்ட்டு இத நாங்க ஜிகிர்தண்டா படத்துலயே பாத்துட்டோம்… ” “எப்பா டேய் ஆவி வந்து சம்பாதிச்சு கொடுக்குதா… இதுக்கு நான் ஈ படம் எவ்வளவோ பரவாலடா சாமி… ” என்று பல விதமான கமெண்ட்களை படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சில ரசிகர்கள் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லை என்பதை இப்படித்தான் சொல்ல வேண்டுமா? ஏமாத்திட்டிங்களே பாலாஜி என்று கேட்கத் தோன்றுகிறது. இயக்குனர் ராம், இயக்குனர் மகேந்திரன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, திரைப்பட விமர்சகர் ரங்கராஜ் பாண்டே போன்ற முக்கிய ஆளுமைகள் இந்தப் படத்தில் தோன்றி இந்தப் படத்தின் கான்செப்ட்டுக்கு சமரசம் பேசினாலும் ரசிகர்கள் அதை நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை! இதேபோலவே மிகையான கற்பனையுடன் வாயை மூடிப் பேசவும் படம் வந்து படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Be the first to comment on "கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அதுக்குனு இப்படியா? – சீதக்காதி விமர்சனம்!"