டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!

This is a scam that is ticking up for a fair price!

சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண்
ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள்.

தீபாவளி நாளை முன்னிட்டு ஒயின் ஷாப்பிலும், சர்கார் தீபாவளியை முன்னிட்டு
தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி நாளில் எது அதிகம் வியாபாரம் பார்க்கும்?
சர்கார் ஓடும் தியேட்டர்களா? அல்லது சர்காரை வாழ வைக்கும் ஒயின்ஷாப்புகளா? என்ற
கேள்வி எழும்படி இருந்தது தீபாவளி தினம்.

ஒயின்ஷாப் விவகாரத்தை ஓரம் வைத்துவிடுவோம். என்ன முயன்றாலும் அதற்கு அவ்வளவு
சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கப்போவது இல்லை. காரணம் அரசை வாழ வைப்பதே ஒயின்ஷாப்கள்
தான்.

இந்நிலையில் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் விற்ற டிக்கேட் விலை தான்
பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக டிக்கெட் விலை எவ்வளவு பெரிய ஏரியாவாக
இருந்தாலும் இருநூறு ரூபாய்க்குள் இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்காக நியமிக்கப்பட்ட
டிக்கெட் விலை ரொம்பவே அதிகம்.

தியேட்டர் முழுக்க வாடையோடும், சரியான கழிவறை வசதி இல்லாமலும், முறையான பார்க்கிங்
வசதி இல்லாமலும் காணப்படக் கூடிய படுமொக்கையான தியேட்டர்களில் கூட குறைந்தபட்ச
விலையாக இருநூறு ரூபாய். டவுன் ஏரியாக்களில் அசால்ட்டாக ஆயிரம் ரூபாய்க்கு வைத்து
விற்கிறார்கள். அதையும் வாங்கிக் கொள்ள அத்தனாயிரம் தலைகள் விடியற்காலையிலயே
எழுந்து வந்து தியேட்டர் முன்பு காத்துக் கிடந்தன.

ரசிகர் மன்றங்களும் தியேட்டர் அதிபர்களும் கூட்ட சேர்ந்துகொண்டு டிக்கெட் விற்ற விலையை
விஜய்யின் பெண் ரசிகர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ச்ச நல்ல நாளு அதுவுமா
படம் பாக்கலாம்னு வந்தா இப்படி அநியாயத்துக்கு டிக்கெட் ரேட் போட்ருக்காங்க… போயி
கம்முனு டிவில போட்ற படத்தையே பார்ப்போம் என்று புலம்பிய படி திரும்பிய பல ஆண்
ரசிகர்கள், பெண் ரசிகர்களை காண முடிந்தது.

இந்தப் படம் முழுக்க நேர்மை நியாயம் என்று அரசியல் மாற்றத்தைப் பற்றி பேசியிருந்தாலும்
படத்திற்கு வெளியே நடப்பதெல்லாம் மகாமட்டமான அரசியல். இவ்வளவு அநியாய விலைக்கு
டிக்கெட் விலையை நியமித்து விற்றால் ஒரு நாளில் முப்பது கோடி வசூல் என்று பெருமையாக
சொல்வதில் என்ன பயன்? சமூக ஆர்வலர்களை அடையாளப்படுத்தறது ஒருபக்கம் இருக்கட்டும்…

முதல்ல உங்க படத்தோட டிக்கெட்ட நியாயமான விலைக்கு விற்க சொல்லுங்க… ஊழல அப்புறம்
ஒழிக்கலாம் என்று வருந்துகின்றனர் உண்மையான சமூக ஆர்வலர்கள்.
டிக்கெட் விலை இவ்வளவு அதிகம் என்றாலும் பெரும்பாலான இடங்களில் கட்அவுட்களுக்கு
பாலாபிஷேகம் செய்யும் வழக்கம் தவிர்க்கப்பட்டு இருந்தது என்பது சமூக ஆர்வலர்கள்
பலருடைய மனதுக்கு இனிய செய்தியாக இருந்தது.

Related Articles

2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற... ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய...
தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட வசனங்கள் ஒ... 2018 ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது இயக்குனர் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம். நல்ல வெற்றியை பெற்ற இந்தப் படம் தொடரும் வேலையின்மை...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...
மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...

Be the first to comment on "டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!"

Leave a comment

Your email address will not be published.


*