டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்கிறார். தற்போது அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் மாட் டிராட்ஜ்(Matt Drudge) தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்பதைச் சூசகமாக தெரிவிக்கும் வண்ணம் ‘மற்றுமொரு அதிர்ச்சி தரும் அறிவிப்புக்கு ட்ரம்ப் தயாராகிவிட்டார்’ என்று பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்ப் மறுபடியும் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
மறுபடியும் ட்ரம்ப்
அமெரிக்க மக்களில் நிறையப் பேர் ட்ரம்ப் ஒருபோதும் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தவணையை பயன்படுத்தி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தான் நினைத்திருந்தனர். குடியரசு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அரசியல் விமர்சகர்கள் பலரும் 71 வயதாகும் ட்ரம்ப் இரண்டாவது தவணையையும் பயன்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று, அவர் ஜனாதிபதியாகி நாட்டுக்குச் செய்ய எந்தக் காரியமும் இல்லை என்றே கருத்து தெரிவித்து வந்தனர்.
2020 தேர்தலுக்குத் தயாராகும் ட்ரம்ப்
அரசியல் விமர்சகர்களின் கருத்தை பொய்யாக்கும் விதமாக, தற்போது ட்ரம்பின் முடிவு வெளியாகி இருக்கிறது. ஆரம்பக் காலங்களில் இருந்து ட்ரம்பை கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். அவர் எந்தவொரு வாய்ப்பையும் மனதார விட்டுக்கொடுப்பவர் அல்ல. தனது தோல்வியை ஒப்புக்கொள்பவரும் அல்ல. உண்மையில் அவர் ஜனாதிபதியாக பதிவியேற்ற அடுத்த நாளே, 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து விட்டதாகத் தெரிகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டிஜிட்டல் குரு என்று அறியப்படும் பிரட் பார்ஸ்கேல்(Brad Parscale), கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர்.அவரையே தற்போது தனது பிரச்சார குழுவுக்குத் தலைவராக நியமித்திருப்பதை உறுதி செய்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். இதன் மூலம் தான் மீண்டும் 2020 ஜனாதிபதி தேர்தலில் நிற்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் ட்ரம்ப்.
எப்படி இருக்கிறது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு
ட்ரம்பை வெறுப்பவர்கள், ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் வேலைப் பறிபோகாது என்று நம்பும் பட்சத்தில், பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்பும் பட்சத்தில், மாத இறுதியில் தங்கள் வாங்கி கணக்கில் கொஞ்சம் இருப்பு இருக்குமேயானால் நிச்சயம் அவர்கள் டொனால்ட் ட்ரம்ப்க்கு தான் வாக்களிப்பார்கள் என்று மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2020 தேர்தலில் உண்மை நிலை தெரியும்.
Be the first to comment on "2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார் டொனால்டு ட்ரம்ப்"