ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பாதிக்கும் என்றும் அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது.
உள்நாட்டு ஆயுத சேவைகள் குழுவின் தலைவர் மேக் டார்பெர்ரி இது குறித்து பேசும்போது ‘அமெரிக்க நிர்வாகமும் காங்கிரஸும் S – 400 ரக ஏவுகணைகளைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை கொண்டுள்ளோம். இந்தியா அந்த ஏவுகணையை வாங்கும் திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அந்த ஏவுகணையை வாங்கும் எந்த ஒரு நாடும் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவது சிக்கலுக்கு உள்ளாகும்’ என்றார்.
‘இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளுடன் அமெரிக்கா அதிநவீன இராணுவ தளவாடங்களை கொண்டு சேர்ப்பதில் தயக்கம் காட்டும்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் இந்த ஏவுகணையை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது அமெரிக்க ஆயுத சந்தையை வெகுவாக பாதிக்கும். மிகச் சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நடைமுறையை எளிமையாக்கியது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது அமெரிக்கா"