நான் உங்களுக்கு வாட்ச்மேன்! – வாட்ச்மேன் திரைப்பட விமர்சனம்!

Watchman Movie Review

விஜய் சேதுபதியை அடுத்து கையில் நிறைய படங்களை வைத்திருப்பவர் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார். கடந்த வாரம் குப்பத்து ராஜா என்றால் இந்த வாரத்திற்கு வாட்ச்மேன்!

எப்படி இருக்கு வாட்ச்மேன்?

கந்து வட்டிக்காரனிடம் கடன் வாங்கிவிட்டு கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வருகிறார் ஜீவி பிரகாஷ் குமார். இன்னொரு பக்கம் பெற்றோர் சம்மதத்துடன் காதலியை மணமுடிக்க முயல்கிறார். இந்த இரண்டு விதமான சிந்தனையில் இருக்கும் ஜீவி ஒரு வீட்டுக்கு திருடப் போகிறார். திருடப் போன இடத்தில் என்ன நடந்தது? வாட்ச்மேன் என்று இந்தப் படத்திற்கு எதற்காக தலைப்பு வைத்தார்கள் என்பதை விளக்குவதே மிச்சக் கதை.

படத்தின் கதாநாயகர்களாக இருவர் வலம் வருகிறார்கள். ஒரு ஹீரோ ஜீவி. இன்னொரு ஹீரோ படத்தில் பிரணவ்வாக நடித்த நாய்க்குட்டி. பாசமாக வளர்த்த நாய்க்குட்டி ஒன்று தனது ஓனரை எவ்வளவு புத்திசாலித்தனமாக காப்பாற்றுகிறது என்பது தான் படத்தின் மையக்கதையே. இந்தக் கதை ஏற்கனவே பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் இந்தக் கதைக்கு முன் ஜீவியின் காதல் கதை லேசாக மங்கிப் போகிறது.

வனமகன் படத்தில் ஒரு புலிக்கு மாஸ் காட்சிகளை வைத்தவர் இயக்குனர் விஜய். புலிக்கு வைத்தது போலவே நாய்க்குட்டிக்கும் நிறைய மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார். அந்த நாய்க்குட்டியின் முடிவு இப்படித் தான் இருக்கும் என்று ஏற்கனவே எளிதில் யூகிக்க கூடிய முறையில் இருந்தது பலவீனம்.

படத்தில் இடைஇடையே பாடல்கள் வந்து தொந்தரவு செய்யவில்லை. காமெடி காட்சிகள் கடுப்பேற்றவில்லை. யோகி பாபு வரும் ஒன்றிரண்டு காட்சிகளுக்கு தியேட்டரில் கலகலப்பு உண்டாகிறது. விஜய் மற்றும் அஜயன் பாலா இருவரும் சேர்ந்து வசனம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இந்த த்ரில்லர் படத்தில் எந்த வசனமும் எடுபடவில்லை. Dont breath படத்தின் சாயலில் ஒரே வீட்டிற்குள்  மறைந்து விளையாடும் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பின்னணி இசை பக்கபலம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரொம்ப நல்ல த்ரில்லர் படம் என்று பெயர் பெற்றிருக்கும். ராட்ச்சசனுக்கும் மெர்க்குரிக்கும் அடுத்த இடத்தில் வந்திருக்க வேண்டிய படம். இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

படத்தில் ஒரேயொரு பாடல். அதுவும் கேட்கும் ரகத்தில் இல்லை. அந்தப் பாடலுக்கு நடிகை சாயிஷாவை ஆட வைத்திருக்கிறார்கள். சாயிஷாவின் உழைப்பு வீண். இந்தக் கதையை நான் லீனியர் முறையில் சொல்லியிருப்பது சிறப்பு. எந்த இடத்திலும் போர் அடிக்காமல் படம் சர்ரென்று செல்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்தை அடுத்து நாயை ஹீரோவாக வைத்து எடுத்த நல்ல படம் ” வாட்ச்மேன் ” என்று உறுதியாக சொல்லலாம்.

Related Articles

லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படைப... கலை என்பது வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல்  சமூக பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இயக்க...
இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்... இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர். படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கி...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதி... இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் "ஆடுகளம்." இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோ...

Be the first to comment on "நான் உங்களுக்கு வாட்ச்மேன்! – வாட்ச்மேன் திரைப்பட விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*