இந்த வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு ரஜினி உட்பட பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் பலருக்கு மனக்கசப்பு இருந்தது உண்மை. தமிழின் முதுபெரும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் இன்னும் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்படாதது குறித்து வருடம் வருடம் கேள்விகள் எழுந்துள்ளது. அவ்வகையில் கடந்த டிசம்பர் 11ம் தேதி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதிக்கு பாரதி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
முதலில் யார் இந்த சின்னப்ப பாரதி என்பதை பார்ப்போம். தாகம், பாலைவன ரோஜா, பவளாயி, சுரங்கம், சர்க்கரை, சங்கம் என்று அட்டகாசமான நாவல்கள் பல எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர் எழுதிய சங்கம் – மலைவாழ் மக்கள் பற்றிய நாவலை தெலுங்கில் மொழிபெயர்த்து தெலுங்கு பேசும் இருநூறு இளைஞர்களை திரட்டி அவர்களுக்குப் பாடமாக படிக்க வைத்து 2000 மைல் நடந்து சென்று தெலுங்கு மக்களுக்கு பரப்பினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பரமத்தி வேலூர் எனும் சிற்றூரில் உள்ள கந்தசாமிக் கண்டர் பள்ளியில் படித்தவர். இன்று அவரை வெளிநாட்டினர் ( voice of protest – கென்யா நாட்டு எழுத்தாளர் இவரைப் பற்றி ஆங்கில நூலில் குறிப்பிட்டு உள்ளார் ) பலர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழகத்திலோ கு. சின்னப்ப பாரதி என்றால் பெரும்பாலானோர்க்கு தெரியவில்லை என்பது தமிழர்களின் முட்டாள் தனத்தை பிரதிபலிக்கிறது.
இப்படிப்பட்டவர்க்கு இன்னும் சாகித்திய அகாஞாமி விருது கொடுக்கப் படாமல் இருப்பது வருத்ததிற்குரிய செயல் என்று அந்நிகழ்வில் கலந்து கொண்ட மயில்சாமி அண்ணாதுரை. குமரி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர். அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய அனைவருமே காந்தியை முன்னோடியாக கொண்டவர்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. சாகித்திய அகாடமி தேர்வுக் குழுவில் இடம்பெறும் வாய்ப்புகள் கு. சின்னப்ப பாரதியைத் தேடி வந்தாலும் சாகித்திய அகாடமி விருது அவருக்கு கிடைக்காதது நோபல் பரிசு வாக்காத காந்தியை நினைவூட்டுகிறது என்று குமரி ஆனந்தன் அவர்கள் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.
காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் என்பார்கள். அதே போல தான் பாராட்டும் அங்கீகாரமும்.
Be the first to comment on "மிகச் சிறந்த படைப்பாளர்களுக்கு காலம் தாழ்த்தி விருது கொடுப்பது ஏன்?"