“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21

world Forest day

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை.

காடுகள் தினம்

உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. அவற்றில் 60 ஆயிரத்துக்கும் மேல்
தாவர வகைகள் மட்டுமே உள்ளது. நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு
பயன்பாடுகளுக்காக மரங்கள் வெட்டுப்பட்டு வருங்கால சந்ததியினரை இயற்கையுடன்
இணைந்து வாழ முடியாத சூழலில் தள்ளிக்கொண்டிருக்கிறது.

இந்திய காடுகள் கணக்கெடுப்பு அமைப்பு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு
முழுவதும் உள்ள காடுகளின் பரப்பளவு எந்த அளவு பெருகியுள்ளது, குறைந்துள்ளது என்று
கணக்கெடுத்து தகவல் தெரிவிக்கும். அவ்வகையில் பல்வேறு மாநிலங்களில் காடுகளின்
பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு காடுகள்
இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை அடைய
வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லாத வகையில் பல இடங்களில் மரம்
நடுதலில் ஊழல்கள் நடந்து வருகிறது.

மரம் நட்டதாக மோசடிகள்

மரம் நடுதல் திட்டப்பணிகளுக்காக அரசின் சார்பில் குறிப்பிட்ட அளவு நிதி பெறப்பட்டு மரம்
நடாமலே மரம் நடப்பட்டதாக மோசடிகள் பல நடந்து வருகிறது.

அவ்வாறே திருநெல்வேலி கீழப்பாவூர் என்ற ஒரு இடத்தில் மட்டுமே 150 மரம் கூட ஒழுங்காக
நடப்படாத நிலையில் அங்கு 21 லட்சத்து ஆராயிரம் ரூபாய் கல்வெட்டைப் பதித்து
வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக சிவகங்கை சாக்கோட்டை எனும் இடத்தில் மட்டும் 356 மரம் நட்டதாக கணக்கு
காண்பித்து எட்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை மோசடி செய்திருக்கிறார்கள்.

மக்கள்தொகைப் பெருக்கம்

காடுகள் குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாக மக்கள் தொகைப் பெருக்கம் இருந்து வருகிறது. மனிதன் தனது குடியிருப்பு தேவைக்காக காடுகளை வீடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறான். தனது தேவைக்கான பொருட்களின் தயாரிப்புக்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக காடுகளை அழித்து வருகிறான். ஒசூர் பகுதிகளில் பல காடுகள் இருந்த இடங்கள் இன்று தொழிற்சாலைகளாக மாறி வருவதால் அங்குள்ள யானைகள் சாலையில் அடிப்பட்டு இறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளின் சாபம் மனிதர்களை சும்மா விடப்போவதில்லை.

Related Articles

நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்... பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். அப்போது ஹாஸ்பிட்டலுக்கு தனுஷின் அப்பாவைப் பார்க்க வரும் செல்வாவிடம், "நான் சப்பைதான... ...
இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தை... முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.  எம். எஸ். தோனி:  மகேந்திர சிங் ...
தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – ... 2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று ...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேய... கதாபாத்திரங்கள் : ஆனந்த் - வன அலுவலரின் நண்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானை டாக்டர், மாரிமுத்து - உதவியாள், செல்வா - வளர்ப்பு யானை,...

Be the first to comment on "“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21"

Leave a comment

Your email address will not be published.


*