ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம்! – அவசர முடிவு வேண்டாம் ப்ளீஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளை காவு வாங்கும் தேர்வாக மாறி வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, 1170க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருந்த போதிலும் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டு பிரதீபா என்ற மாணவி 1125 மதிப்பெண் எடுத்திருந்த போதிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் எலி மருந்து குடித்து உயிர் இழந்துள்ளார். அது மட்டுமின்றி டெல்லியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துஷாஇன்றைய மாணவர்களுக்குப் பொறுமை இல்லை, மன தைரியம் இல்லை என்று சில பெருசுகள் பொங்கித் தள்ளுகிறது. ஆனால் அந்தப் பெருசுகளுக்குத் தெரியவில்லை. மாணவர்களுக்கு மன உளைச்சலைத் தருவது அதுபோன்ற பெருசுகள் தான் என்று. தேர்வில் தோல்வி அடைந்த மாணவனுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து விடாமல் கேள்வி கேட்டுக்கேட்டு அவனுடைய மனதை குழப்பி இக்கட்டான சூழலில் தள்ளிவிடுகிறார்கள். அவர்களோ “அடுத்தது என்ன செய்ய வேண்டும் ” என்ற சிந்தனையைத் தவிர்த்து உடனே தவறான முடிவுக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ” இந்தப் பறிச்ச போனா என்ன… எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்கிட்டு ஒரு வருசம் ஆனாலும் பரவால… நல்லா படிச்சு இன்னும் நல்ல மார்க் எடுத்து நல்ல காலேஜ்ல சேரலாம்… ” என்று தட்டிக்கொடுக்க வேண்டும். இத்தகைய செயல்களை பணக்கார பெற்றோர்கள் சரியாக செய்கிறார்கள். ஆனால் ஏழை பெற்றோர்களுக்குத் தெரிவது இல்லை. அவ்வளவு ஏன் அது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கே தெரிவது இல்லை. இனி வரும் காலங்களில் ஆவது அடுத்த வாய்ப்புகளைப் பற்றி எடுத்துக்கூறி நல்ல சமுதாயத்தை உருவாக்க முற்படுங்கள்.

 

ஏழைகளின் கல்வி கேள்விக்குறி

இதைப்பற்றி பலர் பலமுறை பேசி அடித்து துவைத்து இருக்கிறார்கள். ஆனால் இவை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இந்தியாவிலயே மிகத்துயரமான நிலையில் இருக்கும் உத்திரபிரதேசம் நீட் தேர்வில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால் இந்தியாவிலயே சிறந்த மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் இருக்கும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடைசி மூன்று இடத்திற்குள் உள்ளது. ஆக, இந்தியா என்ற நாடு ஏழைகளை கசக்கிப் பிழிந்து பணக்காரர்களை சொகுசாக வாழ வைக்கும் நாடு என்ற அடையாளத்தைப் பெற்று உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. விஜயகாந்த் ஸ்டைலில் சொன்னால் இது எல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா

Related Articles

2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...
எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
“அறம் நீ பழகு! அதுதான் அழகு!”... மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் "கோடியில் ஒருவன்". ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான ப...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...

Be the first to comment on "ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம்! – அவசர முடிவு வேண்டாம் ப்ளீஸ்!"

Leave a comment

Your email address will not be published.


*