கர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்! – அசிங்கப்பட்ட பிஜேபி!

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலை  ஒட்டுமொத்த இந்தியாவே மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் கர்நாடகா வழியாக தென் இந்தியாவில் கால் பதித்து காவி வண்ணம் தூவி விடுமோ என்ற அச்சம். தேர்தல் முடிவுகள் வெளி வந்ததும் கர்நாடகா தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது என்ற கமெண்டுகளும் ஓட்டு மெசினில் வழக்கம் போல முறைகேடு நடந்து உள்ளது என்றும் சமூக வலை தளங்களில் கமெண்டுகளும் மீம்ஸ்களும் பறந்து வந்தன. அவை ஒரு புறமிருக்க பாஜக கட்சியினர் ஆடிய ஆட்டமோ சொல்லி மாளாது. தற்போது அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன் என்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

இவ்வளவு நேரம் கொண்டாட்டம் போட்ட பிஜேபி கட்சியினர் தற்போது அது சரி இல்லை இது சரி இல்லை என்று திடீரென்று நல்லவர்கள் போல் பேசத் தொடங்கி உள்ளனர். ஆக இந்த வாரம் முழுக்க வழக்கம்போல பிஜேபி தான் மீம் கிரியேட்டர்களுக்கு தீனி. இப்போதே சில மீம்கள் தெறித்து வந்து விழுகின்றன. அவற்றில் சில, சோத்துலயும் அடிவாங்கியாச்சு – தமிழ் நாட்டில் நோட்டாவிடம் தோல்வி, சேத்துலயும் அடி வாங்கியாச்சு – கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியிடம் தோல்வி என்பது போல் ஒரு கலாய். சோனமுத்தா போச்சா… காதுக்குள்ள குய்யுனு கேட்குமே என்று ஒரு கலாய். எது எப்படியோ பிஜேபி நாசமா போனா போதும் என்று ஒரு நேரடி வெறுப்புணர்வு கலாய்.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தற்போது லேசான கலக்கம் உள்ளது என்பது தான் உண்மை. மத்திய அரசின் பெட்ரோல், டீசல் வியாபாரம் மற்றும் நாங்கள் ஜெயித்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற அவர்களுடைய சர்வதிகார மிரட்டல். காவிரி நீர் கிடைத்திட இந்த முறையாவது வழிவகை செய்ய வேண்டும். பல தலைமுறைகள் கடந்து இந்தப் பிரச்சினை நீடிப்பது உண்மையில் வருந்தத் தக்கது.

இதோ அதோ என்று ஒவ்வொரு வருடமும் இழுத்து அடித்து, ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் ஏமார்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏமாளிகாளாகவே இருக்கப் போகிறோமோ? கோமாளிகளை தேர்ந்து எடுத்ததன் விளைவு. இப்படி புலம்பித் தள்ள வேண்டி உள்ளது. மலேசியாவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பிரபாகரன் என்ற இருபத்து இரண்டு வயது இளைஞர் வென்று உள்ளார். அது போன்ற மாற்றம் எல்லாம் தமிழகத்தில் எப்போது தான் நிகழுமோ?

Related Articles

எந்தெந்த படத்துக்கு தேசிய விருது எதிர்பா... 1. மேற்குத் தொடர்ச்சி மலை 2017ல் சென்சார் வாங்கிய படம். !அந்த வருடமே தேசிய விருது தேர்வுக்கும் சென்றது. ஆனால் படம் ஒரு விருதையும் பெறவில்லை. ரிலீசான ...
இன்று தேசிய இளைஞர் தினம்! – வீரத்த... இந்தியா இளைஞர்களின் கையில்! இன்றைய இளைஞர்களிடம், உங்களுக்குப் பிடித்த பொன்மொழி ஒன்றை கூறுங்கள் என்றால் பெரும்பாலானோர் விவேகானந்தரின் பொன்மொழியையோ அல்...
இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட்... ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ் (Google Glasses) என்னும் தயாரிப்பு. அந்த முகக்கண்ணாடியை நீங்கள் அணிந்...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...

Be the first to comment on "கர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்! – அசிங்கப்பட்ட பிஜேபி!"

Leave a comment

Your email address will not be published.


*