ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது ஐஆர்சிடிசி

இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி செயலியான ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்(IRCTC Rail Connect) என்ற செயலியில் இ-வாலட் மூலம் இனி பயணிகள் ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பேடிஎம்(PayTm), மொபிக்விக்(Mobikwik) போன்ற இ-வாலட்கள் போலவே ஐஆர்சிடிசியின் வாலட்டையும் பயணிகள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐஆர்சிடிசியின் புதிய அறிவிப்புகள்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஐஆர்சிடிசியின் இ-வாலட் வசதியைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆறு வங்கிகள் வரை இந்த இ – வாலட்டில் பயணிகள் இணைத்து பயன்படுத்தி கொள்ள இயலும்.

ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியையும் தருகிறது. முன்னதாக வாடகை கார் நிறுவனமான ஒலாவோடு ஐஆர்சிடிசி நிறுவனம் தனது  பயணிகளுக்கு வாடகை கார் வசதியைத் தரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் ரயில் பயணங்களில் இருக்கும் பொழுதே தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து விருப்பமான உணவைப் பெறும் வகையிலான சேவையை புட் ஆன் டிராக்(Food on Track) என்ற திறன்பேசி செயலியின் மூலம் பயணிகள் பெறலாம் என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. பிஎன்ஆர் எண்ணை(PNR Number) வைத்து பயணிகள் உணவு தருவிக்கலாம். ஆன்லைன், ஆப்லைன், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவிரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம்.

உணவை விற்பனை செய்யும் விற்பனையாளர் ரசீது தர தவறினால், உணவு இலவசம் என்ற புதிய கொள்கையையும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Related Articles

இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று R... என்ன தான் குப்பை அள்ளுறவனா இருந்தாலும் அவன் மனசு சுத்தம் என்பது படத்தின் மையக்கரு. சமூக வலைதளங்களில் போராளி வேசம் போட்டுத் திரியும் போலி பொதுநலவாதிகள்...
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகி... இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட...
80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இற... கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அன...
நிஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் 100 ம... பண்டிகைக் காலம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது சிறப்பு விற்பனைகள் மற்றும் சலுகைகள்.  கார் பிரியர்கள் ஆவலுடன் எதிபார்க்கும் நிஸான் மற்றும் டட...

Be the first to comment on "ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது ஐஆர்சிடிசி"

Leave a comment

Your email address will not be published.


*