வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி

14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய சாதனை புத்தகம்(Indian Book of Records) மற்றும் ஆசிய சாதனை புத்தகம்(Asian Book of Records) ஆகியவற்றின் தீர்ப்பாளரான பிஸ்வதீப் ராய் சவுத்ரி முன்னிலையில் இந்தச் சாதனை வால்கா வில்வித்தை அகாடெமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘நிகழ்வில் ஆருஷ் ரெட்டியின் திறமையைப் பார்த்தபோது அவன் 100 அம்புகள் வரை எய்யக்கூடும் என்று தான் கணித்தேன். ஆனால் அவன் 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். இது அதிக அளவுக்கு ஊக்கத்தைத் தருகிறது மேலும் மிகவும் பாராட்டத்தக்கது’ என்று இந்திய சாதனை புத்தகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கிய பிஸ்வதீப் தெரிவித்தார்.

‘எட்டு மாதங்களாக ஆருஷ் ரெட்டி அகாடெமியில் பயிற்சி பெற்று வருகிறான். அவனை ஒரு நம்பிக்கையான தொழில்முறை வில்லனாக வளர்ப்பதற்குப்  பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன் ‘ என்று வால்கா வில்வித்தை அகாடெமி தலைவர் செருகூரி சத்தியநாராயண தெரிவித்தார்.

Related Articles

சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்... நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எ...
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கரு... கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து ...
மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட... " வா கங்காரு... " " கங்காரு இல்லடா... கங்கா தரன்... " * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத...
“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...

Be the first to comment on "வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி"

Leave a comment

Your email address will not be published.


*