விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்

விநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த ஒன்று.

கொழுக்கட்டை மட்டுமில்லாமல் விநாயகருக்கு அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால்,தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நைவேத்யங்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம்.

முதன் முதலாக கொழுக்கட்டை நிவேதனம் செய்தவர் யார் தெரியுமா? வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி

பூரண கொழுக்கட்டையில் ஒரு தத்துவம் மறைந்துள்ளது. கொழுக்கட்டையில் மேலே மாவும் உள்ளே பூரணமும் இருக்கும். மேலே இருக்கும் மாவுபொருள் அண்டம்; உள்ளே இருக்கும் வெல்லப் பூரரணம் தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். இது தான் கொழுக்கட்டையின் தாத்பர்யம்.

கொழுக்கட்டை செய்முறை

எல்லாவித  கொழுக்கட்டைகளுக்கும் மேல்மாவு ஒன்று தான். பூரணம் செய்முறை மட்டுமே மாறுபடும்.

மேல்மாவு செய்யும் முறை

முதலில்  பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி நிழலில் ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும். பின்பு உலர்ந்த அரிசியை மாவாக திரித்துக் கொள்ளவும் .
ஒரு கப் மாவிற்கு 2 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரிசி மாவு கரைசலை விட்டு, அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
மேல்மாவு மென்மையாக இருப்பதற்காக, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும்.

தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார ்.

 பூரணம் செய்ய:

ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவிக் கொள்ளவும்.

1/4 கிலோ வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும்

ஒரு கப் தேங்காய் துருவலுக்கு ஒரு கப் வெல்லம் எடுத்துக் கொள்ளவும். (1:1)

வெல்லம் மூழ்கும் அளவி தண்ணீர் விடவும்.

தேங்காய்ப சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.
வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும்.

இப்போது பூரணம் தயார்.
அரை மணி நேரம் கழித்து பூரணத்தை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளவும். பூரணத்தை அதில் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.

.இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்

ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

Related Articles

சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜ...
ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP) ஐபிஎல் 2018 அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி ...

Be the first to comment on "விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்"

Leave a comment

Your email address will not be published.


*